Daily Archives: April 2, 2020

”வெண்டிலேட்டர் வேண்டாம்… இளையவர்களை காப்பாற்றுங்கள்” – தியாகம் செய்த மூதாட்டி மரணம்!

பெல்ஜியத்தை சேர்ந்த 90 வயது மூதாட்டி சூசன் ஹொய்லாயெர்ட்ஸ் (Suzanne Hoylaerts ) என்பவருக்கு சுவாச கோளாறு ஏற்பட்டது. பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவ ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. மார்ச் 20ம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் எனக்கு செயற்கை சுவாசம் தேவை இல்லை. வெண்டிலேட்டர்களை இளைய மக்களுக்காக பயன்படுத்துங்கள். நான் ஏற்கனவே நன்றாக வாழ்ந்து விட்டேன் என்று கூறியுள்ளார். இரண்டு நாட்கள் செயற்கை சுவாசம்…

பிரதமர் மோடி காணொளி மூலம் அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை

பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் இருந்தபடி அனைத்து மாநில முதல்வர்களுடன் கொரோன தடுப்பு பணிகள் குறித்து காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். தமிழக முதல்வர் பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நடத்தும் ஆலோசனையில் பங்கேற்றார். அப்போது பிரதமர் மோடி, தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து கேட்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து மாநில முதல்வர்களுக்கு கொரோனா தடுப்பு பணிகளை…

பீனிக்ஸ் மால் சென்றவர்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அரியலூரில் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர் சென்னையில் உள்ள பீனிக்ஸ் மாலில் பணிபுரிந்து வந்தவர் என்பதை அறிந்த சுகாதாரத்துறையினர் தொடர்ந்து மேற்கொண்ட நடவடிக்கைகளில் அவருடன் பணியாற்றிய சக ஊழியருக்கும் கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி பீனிக்ஸ் மால் மூடப்பட்டது. பீனிக்ஸ்…

ரத்தாகிறது விம்பிள்டன் போட்டிகள்… இரண்டாம் உலக போருக்கு பின்பு இது தான் முதல்முறை!

கொரோனா வைரஸ் பரவலால் உலக நாடுகள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது வெளிகளில் நடமாட பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவசிய தேவையின்றி யாரும் வெளியே வரவேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நோயின் பரவலால் உலக அரங்கில் நடைபெற இருந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டது. ஐரோப்பியா சாம்பியன் கால் பந்து போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. அதே போன்று பாகிஸ்தான் ப்ரீமியர் லீக் போட்டிகளும் பாதியில் நிறுத்தப்பட்டது. ஐ.பி.எல்…

கொரோனாவில் இருந்து மீண்ட இங்கிலாந்து இளவரசர்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் இதுவரை 8 லட்சம் பேருக்கு மேற்பட்டோருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 47,000 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் பாதிப்பு 200 நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவில் 1834 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. உலகளவில் அதிக பாதிப்பை சந்தித்த நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. இந்நிலையில் இளவரசர் சார்லஸுக்கு தற்போது கோவிட் 19 என்ற கொரோனா வைரஸ் தொற்று சோதனைகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவரும் அவரைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் தனிமைப் படுத்தப்பட்டனர். ஸ்காட்லாந்தில்…

அம்மா உணவகத்துக்கு விசிட் அடித்த ஓபிஎஸ்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள், சந்தைகள் மற்றும் அம்மா உணவகங்கள் மட்டும் செயல்பட்டு வருகின்றன. நேற்று சென்னை மயிலாப்பூர், பட்டினபாக்கம் பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களுக்கு திடீர் ஆய்வு பயணம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உணவு சுகாதாரமான முறையில் சமைக்கப்படுகிறதா என்பது குறித்து பார்வையிட்டார். பின்னர் அங்கு உணவு அருந்த வருபவர்களிடம் நிறை, குறைகளை கேட்டறிந்தார். இந்நிலையில் இன்று துணை…

சுமார் 9,000… கொரோனா மினிமம் டார்கெட்டே இவ்வளவா?

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட இந்தியாவில் கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. ஆனால், இந்தியாவில் தற்போது இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்படும் அபாயம் வந்துள்ளது. டெல்லியில் நடந்த மத வழிபாட்டில் கலந்து கொண்டவர்களால் ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்து உள்ளது. இந்த மாநாட்டில் சுமார் 7600 இந்தியர்கள் மற்றும் 1300 வெளிநாட்டினர் கலந்துகொண்டதாகவும் தற்போது இந்த நிகழ்வு இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் மிகப்பெரிய இடமாக உருவெடுத்துள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம்…

சாதி, மதம் பார்த்து மனிதர்களுக்கு கொரோனா வருவதில்லை – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி

கோவை: சாதி, மதம் பார்த்து மனிதர்களுக்கு கொரோனா வருவதில்லை வதந்தி பரப்புவது நம்மை நாமே அளித்து கொள்வதை போன்றது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். சாதி, மதம் குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கொரோனா பரவாமல் தடுக்க போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். 

பள்ளிக்கரணையில் 18 முஸ்லிம்களுக்கு கொரோனா என்று தினமலர், பாலிமர் பொய்ச்செய்தி!

செங்கல்பட்டு மருத்துவ மனையில் ரத்தப்பரிசோதனைகூட செய்யாமல் 18 இஸ்லாமியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால், இவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக பெயர்களுடன்  தினமலரும், பாலிமர் தொலைக்காட்சியும் செய்தி வெளியிட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் வீடியோ வெளியிட்டுள்ளார். “நேற்றுக் காலை பள்ளிக்கரணையைச் சேர்ந்த எங்களை மேடவாக்கம் மருத்துவமனைக்கு வரும்படி சொன்னார்கள். நாங்கள் வந்ததும் எவ்வித சோதனையும் நடத்தவில்லை. சும்மாவே உட்கார வைத்தனர். மதியம் ரசம் கஞ்சி கொடுத்தார்கள். பிறகு விவரம் சொல்லாமலேயே செங்கல்பட்டு மருத்துவமனை வார்டில் அடைத்து வைத்தனர். ஆனால், தினமலரும்,…

கொரோனாவால் ஒரே வாரத்தில் 50 ஆயிரம் பேர் சாகலாம்: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

கடந்த சில மாதங்களில் உலக அளவில் கொரோனா வைரஸால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் இதுவரை உலகம் முழுவதும் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த வைரசால் உயிரிழந்துள்ளனர்இந்த நிலையில் அடுத்த ஒரே வாரத்தில் கொரோனா வைரசால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழக்க வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் கேப்ரிசியஸ் என்பவர் அச்சம் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 10 லட்சத்தை நெருங்கி வருகிறது.…