Daily Archives: April 5, 2020

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி, வீரவநல்லூரில் கன மழை பெய்து வருகிறது. அதே போல் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார் பிரதமர் மோடி

சென்னை: இந்தியாவில், தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு 77 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3374 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்க்கொண்டு நாடு முழுவதும் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள் போன்றோர் தங்கள் உயிரைப் பணயம் வைத்து பல நோயாளிகளுக்கு சேவை செய்து வருகின்றனர். நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கில் 12 நாட்கள் கடந்த நிலையில் பிரதமர் மோடி ஒவ்வொரு நாளும் 150 முதல் 200 தொலைபேசி அழைப்புகளில் பலரிடம் பேசிவருகிறார்.…

காஷ்மீர் டாக்டர்களுக்கு சிறை மிரட்டல்!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் அரசுக்கு எதிராக கருத்துத் தெரிவித்தால் ஆறு மாதங்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று காஷ்மீர் நிர்வாகம் மிரட்டியுள்ளது. டிசம்பர் மாதம் கடைசியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் குறித்து, மார்ச் 4 ஆம் தேதிதான் காஷ்மீரில் உள்ள டாக்டர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகும் அந்த வைரஸ் குறித்து முழுவிவரம் அறிய முடியாமல் டாக்டர்கள் தவிக்கிறார்கள். ஏனென்றால், காஷமீர் மாநிலத்தில் கடந்த எட்டு மாதங்களாக இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்துக்கான சாலைகளும் துண்டிக்கப்பட்டு,…

எல்லைகளை அடைத்துவிட்டு விரட்டினால் எங்கே போவோம்?

ஒருபக்கம் முதலாளிகள் தங்கள் இடத்திலிருந்து விரட்டுகிறார்கள். மறுபக்கம் போக்குவரத்தை அரசு முடக்குகிறது. நடந்தே ஊருக்கு போகலாம் என்றால், மாநிலங்களுக்கு இடையிலான எல்லைகள் பூட்டப்பட்டு, போலீஸாரின் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். பிழைக்க வந்த மாநிலத்திலும் தங்கமுடியாமல், சொந்த மாநிலத்திற்குள்ளும் நுழைய முடியாமல் மக்கள் தவிக்கிறார்கள். உத்தரப்பிரதேசத்தில் இருந்து மக்கள் வெளியேற திறந்து வைக்கப்பட்ட பஸ்நிலையங்களை மூடும்படி மார்ச் 29 ஆம் தேதி முதல்வர் யோகி ஆதித்தியநாத் உத்தரவுபோடுகிறார். பஸ் நிலையம் திறந்திருக்கும் என்று வந்தவர்களை போலீஸார் அடித்து விரட்டுகிறார்கள். வேறு…

லூசி

புதுப்புது ஆச்சர்யங்களும் கண்டுபிடிப்புகளும் நிகழும் ஒரு இடம் விண்வெளி. அதனால் அமெரிக்காவின் நாசா ஓயாமல் ஏதோவொரு ஆய்வை மேற்கொண்டு வருகிறது . அடுத்த வருடம் விண்வெளிக்கு லூசி என்ற விண்கலத்தை அனுப்புவதற்கு இப்போதே திட்டமிட்டு வருகிறது. லூசியின் பயணம் 21- ம் நூற்றாண்டின் முக்கிய விண்வெளிப் பாய்ச்சலாக இருக்கும் என்று கருதப்படுகிறது. எதற்கு இந்த விண்கலம்? ஜுபிடர் கிரகத்தின் சுற்றுப்பாதையில், ‘யூரிபேட்ஸ்’ என்ற விண்கற்கள் தொகுதி ரொம்பவே மர்மம் நிறைந்த பகுதியாக இருந்து வருகிறது. இதைப்…

கொரோனாவை பரப்பிய சீனாவுக்கு கடும் அபராதம்: சர்வதேச நீதிபதிகள் கவுன்சில் காட்டம்

புதுடெல்லி: ‘கொரோனா வைரசை பரப்பி மனித குலத்திற்கு எதிராக பயங்கரமான குற்றம்புரிந்த சீனாவுக்கு ஐநா மனித உரிமை ஆணையம் கடும் அபராதம் விதிக்க வேண்டும்,’ என சர்வதேச நீதிபதிகள் கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து லண்டனை மையமாக கொண்ட சர்வதேச நீதிபதிகள் கவுன்சில் தலைவர் ஆதிஷ் அகர்வாலா தனது அறிக்கையில் கூறியதாவது: கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் சீன அரசின் செயலற்ற தன்மையால் இன்று உலகமே பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் நோயால் பாதித்தும்,…

திண்டுக்கல்லில் இருந்து 43 கொரோனா நோயாளிகள் கரூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றம்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் இருந்து 43 கொரோனா நோயாளிகள் கரூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் போதிய வசதி இல்லாததால் கரூருக்கு மாற்றப்பட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் ஒரே நாளில் 34 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு

கொரோனா வைரஸ் தோன்றிய சீனாவை விட தற்போது அமெரிக்காவில் தான் படு பயங்கரமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. முதல் 70 நாட்களில் அங்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கபப்ட்ட நிலையில் அடுத்த ஐந்தே நாட்களில் அது 3 லட்சமாக உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 34 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உலகிலேயே ஒரே நாளில் மிக…