Daily Archives: May 4, 2020

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகளை தளர்த்தக் கூடாது: மத்திய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவில் பெரிய அளவிலான திட்டங்களை செயல்படுத்துவதற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிமுறைகளை தளர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக இந்தியா உள்ளிட்ட ஒட்டுமொத்த உலகமும் இனிவரும் காலங்களில் அடிக்கடி பேரழிவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ள நிலையில், இந்த திட்டம் மிகவும் ஆபத்தானது. மத்திய அரசின் புதிய விதிகள் செயல்பாட்டுக்கு வந்தால், சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமலேயே கர்நாடகம் மேகதாது அணையையும், கேரளம் முல்லைப்…

அரசியல்புலம்பெயர் தமிழர்களை மீட்க காங்கிரஸ் சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி – கே.எஸ்.அழகிரி

வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தமிழர்களை தமிழகம் கொண்டுவர காங்கிரஸ் சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் அறக்கட்டளையில் இருந்து ரூ.1 கோடியை முதல்வருக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

டெண்டர் முறைகேடுகள் மக்கள் மன்றத்துக்கு வரும்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

கொரோனா கால கொள்ளைகளும், டெண்டர் முறைகேடுகளும் மக்கள் மன்றத்திற்கு வந்தே தீரும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: கொேரானோ நோய்த் தொற்றில் மாநிலமே, ஏன், உலகமே கலங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகவும் இருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டெண்டர் விடுவதில் ரொம்ப பிஸியாக இருக்கிறார் என்பது அதிர்ச்சியளிக்கிறது. இதை நாம் சுட்டிக்காட்டினால், “பேரிடர் நேரத்தில் கூடவா அரசியல்” என்று அப்பாவித்தனமாக ஒரு கேள்வி கேட்பார். ஆனால்,…

ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா; பாதிப்பு எண்ணிக்கை 3,550 -ஆக உயர்வு; சுகாதாரத்துறை தகவல்

தமிழகத்தில் மேலும் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,550- ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் கொரோனா…

கோயம்பேடு மார்க்கெட் வாயிலாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மூலம் விழுப்புரத்தில் மேலும் 20பேருக்கு கொரோனா

விழுப்புரம்: கோயம்பேடு காய்கறி சந்தை வாயிலாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மூலம் விழுப்புரத்தில் இன்று காலை 20 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் மேலும் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தையை சார்ந்து விழுப்புரத்தில் மட்டும் 70-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா அதிகம் பரவாமல் சராசரி அளவில் வைத்துள்ளோம் – விஜயபாஸ்கர்

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா அதிகம் பரவாமல் சராசரி அளவில் வைத்துள்ளோம் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்கு மாவட்டம் முழுவதும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வுகளை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று மேற்கொண்டார்.அப்போது அவர் அளித்த பேட்டி: இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கொரோனா தொற்று அதிகம் பரவாமல் ஒரே சராசரி அளவிலேயே இருக்கும் அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் தேவையான படுக்கை…

ஊரடங்கை மீறி ஏரியில் மீன் பிடிக்க குவிந்த மக்கள் போலீசை கண்டதும் ஓட்டம்

செய்யாறு அருகே கொரோனாவுக்கு அஞ்சாமல் ஏரியில் இறங்கி பொதுமக்கள் மீன் பிடித்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் வாகனங்களையும் விட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர். இந்தியாவில், ஊரடங்கு மே 17ம் தேதி வரை உள்ளது. இதனால், பொதுமக்கள் யாரும் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த காழியூர் கிராமத்தில் உள்ள ஏரியில் நீர் வற்றி சிறிதளவே உள்ளதால் அதில் உள்ள மீன்களை பிடிக்க செய்யாறு சுற்றுவட்டார பகுதிகளான காழியூர்,…

பக்தர்கள் இன்றி நடைபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்…நிர்வாகம் சார்பில் நேரடி ஒளிப்பரப்பு

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் முதல்முறையாக பக்தர்கள் இன்றி நடைபெற்றது. மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றது. 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவை காண லட்சக்கணக்கான பக்தர்களின் கூட்டம் காணப்படும். அதன்படி, இந்தாண்டு சித்திரை திருவிழா திட்டமிட்டபடி ஏப். 25ம் தொடங்கி நடந்திருந்தால் மீனாட்சியம்மனுக்கு நேற்று பட்டாபிஷேகம் நடைபெற்று இருக்கும். ஆனால், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளன. அதனால், திருக்கல்யாணம் மட்டும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.…