Daily Archives: May 11, 2020

தமிழர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளை உற்பத்திப் பொருட்களாக மாற்ற கொரியா தமிழ்ச் சங்கம் கோரிக்கை!

தமிழ் அறிவியல் தொழில்நுட்ப நிபுணர்களின் பயன்தரும் கண்டுபிடிப்புகளை உற்பத்தி பொருட்களாக மாற்றும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என உலகத்ததமிழ் வர்த்தக கூட்டமைப்பின் தலைவரிடம் கொரிய தமிழ்ச் சங்கத் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரியா தமிழ்சங்கத்தின் தலைவர் முனைவர் இராமசுந்தரம் உலகத் தமிழ் வர்த்தகக் கூட்டமைப்பு (World Tamil Chamber of Commerce WTCC) மற்றும் உலகத்தமிழ் வம்சாவழி அமைப்பு (Global Organization of Tamil Origin) ஆகியவற்றின் தலைவர் செல்வகுமாருடன் கலந்துரையாடினார். அப்போது, தமது அமைப்பு தமிழரின்…

அவதூறு பரப்புவதா? விஜய் சேதுபதி மன்றம் போலீசில் புகார்

நடிகர் விஜய் சேதுபதி ஒராண்டுக்கு முன்பு டிவி நிகழ்ச்சியில் கோயிலில் அபிஷேகம் செய்வதைப் பற்றி நகைச்சுவை ஒன்றை பகிர்ந்துகொண்ட வீடியோ வைரலாகி சர்ச்சையானது. இதையடுத்து, சமூக ஊடகங்களில் அவரை அவமதித்து அவதூறு தெரிவிக்கப்பட்ட கம்மெண்ட்களை நீக்குமாறு விஜய் சேதுபதியின் ரசிகர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். சன் டிவியில் ஒளிபரப்பான நம்ம ஊரு ஹீரோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி மே 13, 2019 அன்று ஒளிபரப்பான அந்நிகழ்ச்சியின் ஒரு எபிசோடில் கோயிலில் சாமி சிலைகளுக்கு…

சென்னைக்கு ரயில் சேவையை அனுமதிக்க வேண்டாம்; முதல்வர் பிரதமரிடம் கோரிக்கை

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 2,000 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முதலில் 21 நாட்கள், பின்னர் 19 நாட்கள், அடுத்தது 14 நாட்கள் என 3 கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் அனைத்து தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டதால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 3ம் கட்ட ஊரடங்கு வரும்…

டாஸ்மாக் கடைகளை மூடும் ஐகோர்ட் உத்தரவிற்கு எதிரான தமிழக அரசின் மனுவில் பிழை இருப்பதால் விசாரணைக்கு எடுக்க இயலாது: உச்சநீதிமன்றம் அறிவிப்பு

டாஸ்மாக் மதுக்கடையை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்த தமிழக அரசின் மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுக்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த கொடிய வைரஸ் பரவலை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் மே 17வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை தவிர தமிழகம் முழுவதும் மே 7ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு கடந்த 4ம் தேதி ஆணை பிறப்பித்தது. இதை எதிர்த்து வக்கீல்கள், சமூக…

தமிழகத்தில் மதவழிபாட்டு தலங்கள் திறப்பு எப்போது? – உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

கொரோனா தொற்று பரவலை தடுக்க மார்ச் 23 ம் தேதி தொடங்கிய ஊரடங்கு, மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்ட மே 17 வரை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மே 4ம் தேதி முதல் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அதன்படி, சிறுகுறு தொழில் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள், பழுது பார்க்கும் சேவைகள் உள்ளிட்டவை பணிகளை சில கட்டுப்பாடுகளுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டது. ஆனால் பள்ளிகள், கல்லூரிகள், மத வழிபாட்டுத்தலங்கள் செயல்படுவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில், சமூக விலகல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன், கோவில்,…

தூத்துக்குடியில் கடன் பிரச்னையில் 2 தலித்துகள் கொலை; 3 பேர் கைது

தூத்துக்குடியில் ரூ.40,000 கடனுக்காக வழங்கப்பட்ட சொத்து பத்திரத்தை திருப்பி தருவதில் ஏற்பட்ட பிரச்னையில், தலித் சமூகத்தைச் சேர்ந்த மாமனார், மருமகன் 2 பேர்களை பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கொலை செய்த சம்பவம் தூத்துக்குடி நசரேத் பகுதியில் பதற்றத்த ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி உடையார்குள்ம் காந்திநகரைச் சேர்ந்தவர் பலவேசம். அவருடைய மருமகன் ஆறுமுகனேரி மூலக்கரையைச் சேர்ந்த தங்கராஜ் (27). தலித் சமூகத்தைச் சேர்ந்த பலவேசம் வட்டிக்கு கடன் வழங்கும் பிறபடுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முத்துராஜ் (40) என்பவரிடம் ரூ.40,000 கடன்…

தென்மேற்கு பருவமழை மே 16ல் தொடங்க வாய்ப்பு… அந்தமான் பகுதியில் மே13ல் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகக்கூடும் : வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு பருவமழை மே 16ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வரும் 13ம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக உருவாகக் கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அத்துடன், அந்தமான் மற்றும் நிக்கோபார் பகுதியில் வரும் 16-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தமான் கடற்பகுதியில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…

உலகம் முழுவதும் பிரபலமாகிறது பிளாஸ்மா சிகிச்சை – கொரோனா வைரஸ் பாதிப்பை குறைப்பது மீண்டும் நிரூபணம்

கொரோனா பாதிப்புகளை குணப்படுத்தும் பிளாஸ்மா சிகிச்சை பற்றிய ஆராய்ச்சிகள் தொடரும் நிலையில் மத்திய பிரதேசத்தில் பிளாஸ்மா சிகிச்சை மூலம் 2 கொரோனா நோயாளிகள் குணமடைந்துள்ளனர். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மூத்த குடிமக்களை நிமோனியா, மூச்சுத்திணறல் போன்றவை படுத்த படிக்கையாக்கி விடுகின்றன. ஆனால் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களிடம் இருந்து தானமாக பெறப்படும் ரத்த பிளாஸ்மா மூலமாக இதற்கு தீர்வு கண்டுள்ளனர் மருத்துவர்கள். மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனானால் பாதிக்கப்பட்ட இருவருக்கு பிளாஸ்மாவை கொடுத்து காப்பாற்றியிருக்கிறார் மருத்துவர் ஒருவர்.…

மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை தொடங்கியது

பிரதமர் நரேந்திர மோடி மாநில முதலமைச்சர்களுடன் 5 வது முறையாக காணொலிக் காட்சி மூலம் இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆலோசனை நடத்தவுள்ளார். பிரதமர் அலுவலகத்தில் இருந்து வெளியான டுவிட்டர் பதிவில் இந்த செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், 66,918 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றில் இருந்து 3,277 பேருக்கு நோய்த் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 128 பேர் மரணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்த உயிரழப்பு 2,109 ஆக அதிகரித்துள்ளது.…

சிறுமி ஜெயஸ்ரீயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற அதிமுகவினர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் : மு.க.ஸ்டாலின் காட்டம்

சிறுமி ஜெயஸ்ரீ மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற அதிமுகவினர் கலியபெருமாள்- முருகனுக்கு உச்சபட்ச தண்டனை பெற்றுத் தர காவல்துறையினர் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். மேலும் குற்றவாளிகளுக்கு சட்டரீதியாக வழங்கப்படும் தண்டனையே இனி இதுபோன்ற சிறுமி, பெண்களை காப்பாற்றும் என்றும் விழுப்புரம் சிறுமியின் மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க திமுக துணை நிற்க வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, ‘விழுப்புரம்…

அதிமுக முன்னாள் கவுன்சிலர் வெறிச்செயல்: பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சிறுமி மரணம்

விழுப்புரம் அருகே பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்ட பள்ளி மாணவி, சிகிச்சை பலனின்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர், அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகளுக்கு வயது 14. அங்குள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். சிறுமியின் பெற்றோர் நேற்று வெளியில் சென்றுவிட்ட நிலையில், அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்து இருக்கிறார். அந்த நேரத்தில் அவர்களது வீட்டிலிருந்து, அதிகளவு புகை, வெளியேறுவதை கண்ட…

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 14-ந் தேதி திறப்பு

வைகாசி மாத பூஜைக்காக வருகிற 14-ந் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. 15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை பூஜைகள் நடைபெறும் என்றும், தினமும் அதிகாலை 5- 10 மணி மற்றும் மாலை 5 – இரவு 7.30 மணிக வரை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊடரங்கு அமல் படுத்தப்பட்டுள்ளதால் பக்தர்கள் நேரடியாக சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாளல், ஆன்லைன் மூலம் வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது