Daily Archives: July 12, 2020

வெள்ளிக்கிழமை நாயகன் ஜெய்சங்கர் பிறந்த நாள் – சிறப்புக்கட்டுரை

தமிழ் சினிமாவில் இரண்டு ஹீரோக்கள் ஆதிக்கம் சினிமா தொடங்கிய காலம் முதல் இன்றுவரை இருந்து வருகிறது எம்.ஜி.ஆர்.-சிவாஜி இருவரும் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த காலத்தில் அவர்களுக்கு இணையாக நடிப்பு, வியாபாரம் என சமபலத்தில் ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஏவி.எம்.ராஜன், முத்துராமன், ஜெய்சங்கர் போன்ற கதாநாயக நடிகர்கள் உருவெடுத்தார்கள் இருந்தபோதிலும் எம்.ஜி.ஆர்-சிவாஜி புகழ் வெளிச்சத்தில் இவர்களால் முதல் இடத்துக்கு வர இயலாமல் போனது ஆறேழு நாயகர்கள் இருந்த காலகட்டத்தில், தனக்கென ஒரு பாணியை வைத்துக் கொண்டு,…

அமிதாப்பச்சனையும் விடாத கொரானா தொற்று

இந்திய சினிமாவில் மூத்த நடிகர், தன் வயதுகேற்ற வேடங்களில் நடித்து, இன்றைக்கும் சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படும் பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவர் மகன் அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாசிட்டிவ் என பரிசோதனையில் தெரியவந்ததைத் தொடர்ந்து அவர்கள் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் குடும்பத்தினர், வீட்டிலிருந்த பிற வேலையாட்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறிகள் தென்பட்டதைத் தொடர்ந்து கொரோனா…

இங்கி. அணி 2வது இன்னிங்சில் பொறுப்புடன் விளையாடி ரன் குவித்து வருகிறது.

வெ. இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், இங்கி. அணி 2வது இன்னிங்சில் பொறுப்புடன் விளையாடி ரன் குவித்து வருகிறது. ரோஸ் பவுல் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 204 ரன்னுக்கு சுருண்டது. கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 43 ரன் எடுத்தார். எதிர் தரப்பு கேப்டன் ஹோல்டர் சிறப்பாகப் பந்துவீசி 6 விக்கெட்டும், கேப்ரியல் 4 விக்கெட்டும் கைப்பற்றினர். அடுத்து கள மிறங்கிய வெஸ்ட் இண்டீஸ்,…

இங்கிலாந்து கால்பந்து வீரர் ஜாக் சார்ல்டன் காலமானார்

கால்பந்து உலக கோப்பையை 1966ம் ஆண்டு வென்ற இங்கிலாந்து அணிக்காக விளையாடிய ‘பிக் ஜாக்’ என்று அழைக்கப்படும் வீரர் ஜாக் சார்ல்டன் காலமானார். உலக கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து ஒரே முறைதான் வென்றுள்ளது. இங்கிலாந்தில் 1966ம் ஆண்டு நடந்த உலக கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து 4-2 என்ற கோல் கணக்கில் மேற்கு ஜெர்மனியை வீழ்த்தி முதல் முறை சாம்பியன் ஆனது.அந்த அணியில் தனது அற்புதமான ஆட்டத்தின் மூலம் பலரையும் ஈர்த்தவர்கள் சகோதரர்கள் ஜாக் சார்ல்டன்,…

கடந்த 6 நாட்களுக்குப்பின் டீசல் லிட்டருக்கு 10 காசு உயர்வு

கடந்த 6 நாட்களுக்குப்பின் டீசல் லிட்டருக்கு,10 காசுகள் உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு தினமும் மாற்றி அமைத்து வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு இதன் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் தாக்கத்தால், கச்சா எண்ணெய் விலை கடந்த பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வெகுவாக…

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8.49 லட்சத்தை தாண்டியது;

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 லட்சத்து 49 ஆயிரத்தை தாண்டியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீயாக பரவி வருகிறது. கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,49,553-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 28,637 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இதுவரை 22,674 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 551 உயிரிழந்துள்ளனர். இதுவரை 5,34,621 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24…