Daily Archives: August 2, 2020

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் நடைபெற்ற பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று அறிகுறி ஏதும் இல்லாததால் ஆளுநர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறி தென்பட்டதை அடுத்து சோதனை செய்ததில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. தற்போது எனது உடல்நிலை நன்றாக உள்ளது, ஆனால் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில் 18 பேர் உயிரிழப்பு

சென்னையில் இன்று கொரோனா தொற்றால் ஒரே நாளில் 18 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சென்னையில் கொரோனா தொற்று உறுதியான 1,00,877 பேரில் 12,436 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கொரோனா தொற்றால் இதுவரை 2,140 பேர் உயிரிழந்துள்ளனர்.

புதுச்சேரியில் மேலும் 200 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரியில் மேலும் 200 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு  பாதிப்பு எண்ணிக்கை 3,806 ஆக அதிகரித்துள்ளது. 1,445 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ள நிலையில், இதுவரை 52 பேர் உயிரிழந்துள்ளனர்.

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை…

பெற்றோர் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டிய மிகப்பெரிய கல்வி தன்னம்பிக்கை தான். தன் மீது நம்பிக்கை கொள்வது எப்படி என குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து, பிற்காலத்தில் தன்னை காத்து வந்த பெற்றோர்கள் இல்லாவிட்டாலும், பணமோ பிற சொத்துக்களோ இல்லாவிட்டாலும், தன்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் இழந்து விட்டாலும், தன்னம்பிக்கை இருந்தால் ஒரு குழந்தை மீண்டும் அனைத்தையும் பெற்று பிழைத்துக் கொள்ள முடியும். எல்லா குழந்தைகளுக்கும் சாதாரண வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை அறிவுத்திறன் உண்டு. சராசரியான மனிதனாக இந்த உலகில் வாழ்வதற்கும்,…

முகத்தில் உள்ள கருமை நீங்க

கற்றாழை குளிர்ச்சி தன்மை உடையது. இதனை இரவு தூங்க செல்லும் முன்பு முகத்தில் தடவி விடவும். பின்பு, காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவவும். இவ்வாறு செய்தால் முகத்திற்கு புத்துணர்ச்சி கிடைக்கும். இரவு தூங்க செல்லும் முன்பு விட்டமின் இ மாத்திரையில் இருந்து சிறிது எண்ணெய்யை எடுத்து முகத்தில் தடவி மசாஜ் செய்து விட்டு காலையில் எழுந்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவி வந்தால் முகம் பளிச் என காணப்படும்.  வெள்ளரிக்காயில் அதிக அளவு ஈரப்பதம் உள்ளது.…

கொண்டைக்கடலை கறி

தேவையான பொருட்கள்: வெங்காயம் – 100 கிராம் தக்காளி – 200 கிராம் இஞ்சி – 20 கிராம் பூண்டு – 50 கிராம் எண்ணெய் – 2 மேசைக்கரண்டி உப்பு – தேவையான உப்பு சீரகத்தூள் – 1 தேக்கரண்டி மஞ்சள்தூள் – 1 தேக்கரண்டி தனியாத்தூள் – 1 தேக்கரண்டி மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி கரம் மசாலா – 1 தேக்கரண்டி கொண்டைக்கடலை – 500 கிராம் செய்முறை: வெங்காயம், தக்காளி, இஞ்சி,…

பெட்ரோல் விலை ரூ.83.63, டீசல் விலை ரூ.78.86

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.83.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.78.86-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

புதிய கல்வி கொள்கை குறித்து முதல்வர் நாளை ஆலோசனை

புதிய கல்வி கொள்கை 2020 தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் உயர்கல்வித்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

வீரர் திருமூர்த்தியின் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

காஷ்மீரில் பணியில் இருந்தபோது உயிரிழந்த வீரர் திருமூர்த்தியின் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் பணியில் இருந்தபோது உயிரிழந்த வீரர் திருமூர்த்தி குடும்பத்திற்கு நிதி வழங்க வேண்டும். தியாக உணர்வுடன் பணியாற்றிய திருமூர்த்தியின் மறைவுக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறினார்.