Daily Archives: August 13, 2020

நீட் தேர்வு பயத்தில் மதுரை மாணவி தற்கொலை – முதல்வர் இரங்கல்

தமிழகத்தில் நீட் தேர்வுக்குத் தொடர்ச்சியாக எதிர்ப்புத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், நாடு முழுவதும் மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு நீட் தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று தெரிவித்து, தமிழகத்துக்கு விலக்களிக்க மத்திய அரசு மறுத்துவிட்டது. இந்த சூழலில் தமிழகத்தில் நீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மூன்று மாணவர்கள் நீட் தேர்வு அச்சத்தின் காரணமாகத் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். கோவை சுபஸ்ரீ, அரியலூர் விக்னேஷ்…

தேவிலால் உரையை மொழிபெயர்த்தது கனிமொழி இல்லை – தேவசகாயம்

திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்பி கடந்த ஆகஸ்டு 9 ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றபோது, விமான நிலையத்தில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை பெண் அதிகாரி இந்தியில் பேசியதாகவும், ‘ஆங்கிலம் அல்லது தமிழில் பேசுங்கள்’ என்று கனிமொழி சொன்னதற்கு, ‘நீங்கள் இந்தியர்தானே இந்தி தெரியாதா?’ என்று கேட்டதாகவும் கனிமொழி தனது சமூக தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். உடனடியாக மத்திய தொழில் பாதுகாப்புப் படை இதற்கு விளக்கம் அளித்து,…

கனிமொழி கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு

சென்னை விமான நிலையத்தில் மக்களவை உறுப்பினர் கனிமொழியை, மத்திய தொழிலக பாதுகாப்புப் படை பெண் அதிகாரி ஒருவர், நீங்கள் இந்தியரா எனக் கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. தனக்கு இந்தி தெரியாது என்பதால் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசச் சொன்னதற்காக இவ்வாறு அந்த அதிகாரி கூறியதாக கனிமொழி குறிப்பிட்டார். இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டதோடு, எந்தவொரு மொழியையும் வலியுறுத்துவது தங்களின் கொள்கை அல்ல எனவும் சிஐஎஸ்எஃப் விளக்கம் அளித்தது. இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் தமிழ் தெரிந்த பணியாளர்களை…

அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ் போட்டி

அமெரிக்க அதிபர் தேர்தல்வரலாற்றில் முதல் முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான கமலா ஹாரிஸ், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரான ஜோ பிடனின் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் ஆராய்ச்சியாளரான ஷியாமலா கோபாலன் மற்றும் ஜமைக்காவைச் சேர்ந்த பொருளாதாரப் பேராசிரியரான டொனால்ட் ஹாரிஸ் ஆகியோருக்குப் பிறந்த கமலா, அமெரிக்காவில் வழக்கறிஞராக பணியாற்றினார். 2010 ஆம் ஆண்டில், அவர் கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலாக ஆனார். இந்த பதவியை வகித்த முதல் வெள்ளையரல்லாத பெண் கமலாதான். 2016…