Daily Archives: August 17, 2020

கொரானா தடுப்பூசிக்கான முதல் காப்புரிமை வழங்கியது சீன அரசு

கொரானா வைரஸின் பிறப்பிடம் என கருதப்படும் சீனாவில் அந்த வைரசை தடுக்க உருவாக்கப்பட்ட தடுப்பூசிக்கான முதல் காப்புரிமையை சீன அரசு அளித்திருக்கிறது. இதுபற்றி சீன அரசின் அதிகாரபூர்வ பத்திரிகையான தி பீப்பில்ஸ் டெய்லி பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவின் ஊஹான் மாகாணத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிய கொரானா வைரஸ் பரவல், இன்று இந்தியா உட்பட உலகத்தையே ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தான் உலகம் முழுதும் கொரானா…

ஓய்வூதியதாரர்களுக்கு தமிழக அரசு அபாயமணி

ஓய்வூதியப் பணத்தை வங்கிக் கணக்கிலிருந்து எடுக்காதவர்களின் ஓய்வூதியத்தை நிறுத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வுக்குப் பிறகு அவர்களுக்கு வங்கிக் கணக்குகளில் ஓய்வூதியம் செலுத்தப்பட்டு வருகிறது. இதுபோலவே, பணிக்காலத்தில் இறந்த அரசு ஊழியர் அல்லது ஆசிரியர் அல்லது இறந்த ஓய்வூதியரின், குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு, பொருளாதார நலன் கருதி அரசால் ஓய்வுதியம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையா் சமயமூா்த்தி அனைத்து மண்டல இணை இயக்குநா்கள்…

சென்னையில் மதுபான கடைகளை திறக்க எதிர்ப்பு

தமிழகம் முழுவதும் கடந்த மூன்று மாதங்களாக டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தாலும் சென்னை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக்கை திறக்க தடை நீட்டிக்கப்பட்டு வந்தது. தற்போது சென்னையில் கொரோனா தொற்று குறைந்து வருவதால், நாளை முதல் டாஸ்மாக் கடைகளைத் திறக்க அனுமதியளித்துள்ளது தமிழக அரசு. மதுபானக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். நாளொன்றுக்கு ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

நீட் தேர்வு நடைபெறுமா நீதிமன்றம் முக்கிய அறிவிப்பு

கொரானா தொற்று பரவல் காரணமாக மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதுபோலவே மே மாதம் நடத்தப்படும் மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய நீட் நுழைவுத் தேர்வு இதுவரை நடைபெறவில்லை. இதனிடையே ஜேஇஇ மெயின் தேர்வு செப்டம்பர் 1 முதல் 6ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், முதுகலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு செப்டம்பர் 13ஆம் தேதி நடக்கும் என தேசிய தேர்வு முகமை ஜூலை 3ஆம் தேதி அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு…

காங்கிரஸ் பெற்ற வாக்குகள் அடிப்படையில் சட்டமன்ற தொகுதி ஒதுக்கீடா?

தமிழகத்தில் வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அப்படியே தொடருமா அல்லது அதில் சில மாற்றங்கள் ஏற்படுமா என்பது குறித்து, அரசியல் நகர்வுகளை ஒட்டி கணிப்புகள் அவ்வப்போது வந்து கொண்டிருக்கின்றன. ‘காங்கிரஸ் இல்லா பாரதம்’ என்பதை தனது கொள்கையாகவே வைத்துக் கொண்டிருக்கும் பாஜக அதை பல மாநிலங்களில் செயல்படுத்தவும் முனைந்து வருகிறது. அந்த அடிப்படையில் இந்திய அளவில் காங்கிரஸ் இன்னும் ‘கொஞ்சம் பலத்தோடு’ இருக்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று என்று கருதுகிறது பாஜக. அந்த வகையில்…

துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆடிய ருத்ரதாண்டவம்

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவருக்கும் இடையிலான அதிகார, அரசியல் மோதலின் அடுத்த கட்டம் பொதுவெளிக்கு வந்திருக்கிறது. அதிமுகவின் அடுத்த முதல்வரை அடுத்து அமையப் போகும் சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று சில நாட்களுக்கு முன் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி கொடுக்க, இதற்கு பதில் அளிக்கும் வகையில், ‘என்றும் எடப்பாடியாரே முதல்வர்’ என்று ட்விட் போட்டார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. இந்த மோதல் தொடர்ந்துகொண்டிருந்த நிலையில்தான் ஆகஸ்டு 15 அன்று சுதந்திர…

தலைமை செயலகமா கட்சி அலுவலகமா?- முத்தரசன் காட்டம்

வரும் சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ட்விட்டரில் போட்ட பதிவு, சர்ச்சைகளுக்கு வித்திட்டது. இதனையடுத்து, எடப்பாடிதான் அடுத்த முதல்வர் என பேட்டி, ஓபிஎஸ்தான் அடுத்த முதல்வர் என போஸ்டர்களும் முளைத்தன. இந்த நிலையில் சுதந்திர தின நிகழ்வு முடிந்த பிறகு தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் அறையில் 12 அமைச்சர்கள் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளிவந்தன. அதன்பின்னர், துணை முதல்வர் பன்னீர்செல்வம் இல்லத்துக்குச் சென்று அமைச்சர்கள் விவாதித்தனர். முதல்வர்…

சிவகார்த்திகேயன் புதிய பட இயக்குனர்

சிவகார்த்திகேயன் இப்போது, இன்றுநேற்றுநாளை ரவிக்குமார் இயக்கும் அயலான்,கோலமாவு கோகிலா நெல்சன் இயக்கும் டாக்டர் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவ்விரண்டு படங்களின் படப்பிடிப்பும் இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது. இவற்றிற்கு அடுத்து அவர் நடிக்கும் படம் குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை. இந்நிலையில், அவர் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை புதுமுக இயக்குநர் அசோக் என்பவர் இயக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இவர் இயக்குநர் அட்லியிடம் பணியாற்றியவராம். அதைத் தொடர்ந்து இன்னொரு இயக்குநரிடம் கதை கேட்டு அவர்…

தோனியை ஆடுகளத்தில் இருந்து அப்புறபடுத்திய அரசியல்

எல்லோரும் MS தோனி ச‌ர்வ‌தேச‌ கிரிக்கெட் போட்டிக‌ளிலிருந்து ஓய்வு பெற்ற‌து பற்றி எழுதுகிறார்க‌ள், புக‌ழ்கிறார்க‌ள், வருந்துகிறார்க‌ள். முக‌நூல் முழுக்க‌ சென்ற‌ இருநாட்க‌ளாக‌ இது ப‌ற்றிய‌ ப‌திவுக‌ளே அதிக‌ம் காண‌க்கிடைக்கின்ற‌ன‌… அதிலும் ப‌ல‌ கிரிக்கெட் ம‌ற்றும் தோனி ர‌சிக‌ர்க‌ளை மிக‌வும் வேத‌னைப்ப‌டுத்திய‌ விஷ‌யம் என்னவென்றால், இரண்டு உலக கோப்பைகளை வென்ற நாயகனுக்கு ஒரு வழியனுப்பு போட்டி கூட இல்லாமல் ஓய்வு பெற‌ வைத்த‌துதான். ஒரு ந‌ல்ல‌ கிரிக்கெட் வீர‌ர் என்ற‌ வ‌கையில் தோனியை எல்லோருக்கும் பிடிக்கும். எல்லா தொழில்முறை…

மருத்துவர்கள் மரணம் உண்மைநிலையை மறைக்காதீர்கள்- மு.க.ஸ்டாலின்

கொரானா தடுப்புப் பணியில் உயிரிழந்த டாக்டர்களின், உயிர்த்தியாகத்தை மறைத்துக் கொச்சைப்படுத்தாமல் வெளிப்படையாக அறிவித்து அவர்களது குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிதி, ஒருவருக்கு அரசு வேலை இரண்டையும் தமிழக அரசு தாமதமின்றி வழங்க வேண்டும்” என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் ‘தமிழகத்தில் கொரானா நோய்த் தொற்றால் 32 மருத்துவர்களும், கொரானா நோய் அறிகுறியுடன் வந்த 15 மருத்துவர்களும் உயிரிழந்துள்ளார்கள்” என்று இந்திய மருத்துவச் சங்கத்தின் தமிழ்நாடு கிளை தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இச்சங்கத்தின்…

இபாஸ் தளர்வு நகரங்களை நோக்கி திரும்பும் மக்கள்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து ஒரே இடத்தில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும், சென்னை போன்ற பெருநகரங்களில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் தடுக்கவும், பொதுமக்கள் தேவையற்ற பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்கும் நோக்கிலும் தான் இ-பாஸ் நடைமுறை கொண்டு வரப்பட்டது. குறிப்பாக, திருமணம், மருத்துவம், நெருங்கிய உறவினர் மரணம் ஆகிய காரணங்களுக்காக மட்டும் மாவட்டங்களுக்கு இடையே…

5 ரூபாய் டாக்டர் காலமானார்…. முதல்வர் இரங்கல்

சென்னையில் மிகவும் பிரபலமாக இருந்து மக்களுக்கு சேவையாற்றி வந்த மருத்துவர் திருவேங்கடம் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி, துணைமுதல்வர் ஒ.பன்னீர் செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளனர். வடசென்னையில் உள்ள வியாசர்பாடி பகுதியில் கடந்த 1973 ஆம் ஆண்டு தனது மருத்துவ சேவையை தொடங்கிய மருத்துவர் திருவேங்கடம் ரூ.2க்கு சிகிச்சை அளித்து வந்தார். அதனால் ஏராளமான மக்கள் குறைந்த சிகிச்சையில் பயன்பெற்றனர். இதனால் 5 ரூபாய் டாக்டர் என அவர் அழைக்கப்பட்டார். இந்நிலையில் மருத்துவர் திருவேங்கடம் இன்று காலமனார். இவரது மறைவுக்கு…