Daily Archives: September 22, 2020

வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகள் குறித்து ஆன்லைன் கருத்தரங்கம்!

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டல் குழுவினால் “உயிரி அறிவியல் ஆராய்ச்சியில் எதிர்கால வளர்ச்சி” என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர் முனைவர். ஆரோக்கியராஜ் செல்வராஜ் உயிரி அறிவியல் துறையில் இருக்கும் பாடப்பிரிவுகள், உயர்கல்வி வாய்ப்புகள், மேல்படிப்பிற்கு அரசு வழங்கும் ஊக்கத்தொகை, தென்கொரியா நாட்டின் கல்வி மற்றும் உயர்கல்வி வாய்ப்புகள் பற்றி தெளிவாக எடுத்து கூறினார். முனைவர். ஆரோக்கியராஜ் செல்வராஜ் திருக்குறளை மேற்கோள்காட்டி அனைவருக்கும் எளிதில் புரியும் வகையில் உரையாற்றியது…

ஃபுல் பார்மில் சிஎஸ்கே! – வீழ்த்துமா ராஜஸ்தான்?

அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளில் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்திய சிஎஸ்கே இன்று ராஜஸ்தான் ராயல்ஸுடன் மோத உள்ளது. இன்று மாலை 7.30 மணிக்கு இந்த போட்டி ஒளிபரப்பாகிறது. இதுவரை முந்தைய போட்டிகளில் 21 முறை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 14 முறை சிஎஸ்கே வெற்றி பெற்றுள்ளது, 7 முறை ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. எனவே வெற்றி வாய்ப்பு சிஎஸ்கேவுக்கே அதிகம் உள்ளது. எனினும் ராஜஸ்தான் ராயல்ஸ்…

சாம் கர்ரன் தொடர்ந்து அணியில் இடம் பெறுவார்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலாவது போட்டியில் மும்பை அணியுடன் மோதியது. கடைசி நேரத்தில் அதிரடியாக சாம் கர்ரன் களமிறக்கப்பட்டார். அவர் களமிறக்கப்பட்டதை அடுத்து மும்பை வீரர்களே ஆச்சரியமடைந்தனர். தோனி தான் அடுத்ததாக களமிறங்குவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் திடீரென கடைக்குட்டி சிங்கம் சாம் கர்ரன் களமிறங்கியது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. ஆனால் அவர் அதிரடியாக 6 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து இலக்கை மிக அருகில் கொண்டு வந்து சேர்த்தார். அவருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்…

பிரதமர் மோடி ஐநா சபை கட்டமைப்புகளில் மாற்றங்கள் தேவை என தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 75வது ஆண்டு விழா காணொளி வழியாக நடைபெற்றது. அதில் இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த பல தலைவர்கள் கலந்து கொண்டனர். அதில் பேசிய பிரதமர் மோடி ”கடந்த 75 வருடமாக ஐநா சபை பல்வேறு சாதனைகளை புரிந்திருந்தாலும் அதன் முக்கிய நோக்கம் இன்னும் பூர்த்தியாகவில்லை. ஐநா சபை தனது பழைய கட்டமைப்புகளை கொண்டு தற்போது உலக சூழலை கையாள முடியாது” என தெரிவித்துள்ளார். மேலும் “1945ல் உருவாக்கப்பட்ட ஐநா…

வெப் தொடரில் நடிக்கும் ஹிருத்திக் ரோஷன்…

இந்தி நடிகர்கள் திரைப்படங்களிலும், விளம்பரங்களிலும் நடித்து கோடி கோடியாய் சம்பாதிக்கிறார்கள். முன்னணி நடிகர்களுக்கு ஒரு படத்தில் சம்பளம், லாபத்தில் பங்கு தொகை என்ற ரீதியில் ரூ.100 கோடிக்கு மேல் வருமானம் வருகிறது. தற்போது இந்தி நடிகர், நடிகைகள் பலர் வெப் தொடர்களில் நடிக்க வந்துள்ளனர். சயீப் அலிகான், அபிஷேக் பச்சன், மாதவன், நவாசுதின் சித்திக், ராதிகா ஆப்தே, கியாரா அத்வானி ஆகியோர் வெப் தொடர்களில் நடிக்கிறார்கள். இந்த வரிசையில் ஹிருத்திக் ரோஷனையும் புதிய வெப் தொடரில் நடிக்க…

தேர்தல் விளம்பரம் செய்வதில் திமுக – பாஜகவினரிடையே மோதல்

சென்னையில் சுவர் ஒன்றில் தேர்தல் விளம்பரம் செய்வதில் திமுக – பாஜகவினரிடையே மோதல் எழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னையில் உள்ள நங்கநல்லூர் பகுதியில் சுவர் ஒன்றில் கட்சி விளம்பரம் செய்ய திமுகவினர் குறியீடு போட்டு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அதை மீறி பாஜகவினர் அந்த பகுதியில் சுவர் விளம்பரம் செய்வதாக அறிந்த திமுக நிர்வாகி ஒருவர்…