Daily Archives: November 10, 2020

’மனுஸ்மிரிதி சட்ட புத்தகம் அல்ல’ – சென்னை உயர் நீதிமன்றம்

மனுஸ்மிருதி ஒரு குறிப்பிட்ட வழியில் மட்டுமே படிக்க வேண்டிய ஒரு சட்ட புத்தகம் அல்ல. இது 2,000 ஆண்டுகள் பழமையான நூல். இதை விளக்க முடியும் என்ற, சென்னை உயர் நீதிமன்றம், வி.சி.க தலைவர் தொல் திருமாவளவனை நாடாளுமன்ற உறுப்பினராக தகுதி நீக்கம் செய்ய மறுத்துவிட்டது. “திருமாவளவன் மனுஸ்மிருதியை தனது வழியில் விளக்கியுள்ளார். அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? இங்கு அனைவருக்கும் கருத்துச் சுதந்திரம் உள்ளது” என்று நீதிபதிகள் எம். சத்தியநாராயணன் மற்றும் நீதிபதி ஆர்.ஹேமலதா…

‘ஆஸ்திரேலியாவில் சந்திப்போம் நட்டி’ – டேவிட் வார்னர்

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று. இது முடிந்ததும் இம்மாத இறுதியில் ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ள விருக்கிறது. அங்கு மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று டி20 போட்டிகள், நான்கு டெஸ்ட் போட்டிகளில் மோதுகின்றன இரு அணிகளும். இதற்கான அணிகளும் வீரர்களும் அறிவிக்கப்பட்டு விட்டனர். டி20 அணியில் இருந்த தமிழக வருண் சக்கரவர்த்தி காயம் காரணமாக நீக்கப்பட்டு, அவருக்குப் பதில் தமிழக வீரர் நடராஜன் தங்கராசு சேர்க்கப்பட்டிருக்கிறார். காயம் காரணமாக, ஒருநாள், டி20 போட்டிகளில் ஆடாத ரோஹித்…

காமெடி சேனல் நடத்திக்கொண்டிருக்கிறார் செல்லூராஜூ – மு.க.ஸ்டாலின்

மதுரையில் நடந்த திமுக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் காணொளிகாட்சி மூலமாக பங்கேற்று பேசிய மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் செல்லூர்ராஜுவையும், உதயகுமாரையும் பேசி கலகலப்பூட்டினார். ’’அமைச்சர்கள் செல்லூர் ராஜூவும் , உதயகுமாரும் தங்களது துறையில் என்ன சாதனைகள் செய்தார்கள் என்று கேட்டால் யாருக்கும் சொல்லத்தெரியாது. ஆனால், என்ன காமெடி செய்தார்கள், நகைச்சுவை பேட்டிகள், இன்றைக்கு புதிதாக என்ன தத்துவ முத்துக்கள் உதிர்த்துள்ளார்கள் என்று கேட்டால், மக்கள் பட்டியல் போட்டு சொல்லிவிடுவார்கள். வைகை ஆற்று நீரை தெர்மாகோல் கொண்டு மூடியது முதல்…

இந்திய அணிக்கு தேர்வான நடராஜனுக்கு முதல்வர் வாழ்த்து !

சமீபத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் கவனிக்கத்தக்க ஒருவராக அமைந்திருந்தார் சேலத்தை சேர்ந்த நடராஜன். தன்னுடைய சிறு வயது கனவினை நினைவாக்க அவர் செய்த முயற்சிகள் மற்றும் அதற்கு கிடைத்த பலன்கள் பற்றி இந்த சீசன் முழுவதும் பல்வேறு சமூக ஊடகங்கள் வாயிலாகவும் நாம் அறிந்து கொண்டோம். அவரின் உழைப்பிற்கு தக்க பலனாக அமைந்தது இந்திய அணியில் அவருக்கான இடம். இந்த அறிவிப்பு வெளியாகி நாட்கள் ஆன நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய…

சுவையான இறால் 65 செய்ய

தேவையான பொருட்கள்: இறால் – 1/2 கிலோ, அரிசி மாவு – 2 ஸ்பூன், கான்ப்ளார் – 1 ஸ்பூன், மைதா – 1 ஸ்பூன், முட்டை – 1இஞ்சி, பூண்டு விழுது – 1 ஸ்பூன், எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன், கறிவேப்பிலை – தேவையான அளவு, எண்ணெய் – தேவையான அளவு, சீரகப் பொடி – 1/2 ஸ்பூன், மிளகாய் தூள் – 2 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்,…

மேக் சேஃப் டுயோ சார்ஜர்

ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களை சார்ஜ் செய்ய உதவிடும் மேக் சேஃப் டுயோ சார்ஜரை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 12க்கு சார்ஜர் தனியாக தரப்படவில்லை என்ற சர்ச்சை எழுந்தது. சுற்றுச்சூழலை காரணம் காட்டி ஐபோன் 12 பாக்ஸில் சார்ஜர் கொடுக்கப்படவில்லை என ஆப்பிள் தரப்பில் விளக்கம் தரப்பட்டது. இதையடுத்து ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12க்கு தனியாக சார்ஜர் ஒன்றை சியோமி நிறுவனம் கூட அறிமுகப்படுத்தி இருந்தது. இந்நிலையில்…

நாகை மீனவர்கள் 14 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

நாகையில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 14 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை தாக்குதல் எல்லை மீறிக் கொண்டிருப்பதாக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மீனவர்களை கத்தி முனையில் விரட்டி அடிப்பதும், படகுகளை சேதப்படுத்தி லட்சக் கணக்கில் மதிப்புள்ள பொருட்களை இலங்கை கடற்படை நாசமாக்குவதும் தொடர்கதையாகி வருகிறது. அண்மையில், ராமேஸ்வர மீனவர் ஒருவர் இலங்கை கடற்படையால் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை…

பாஜக கூட்டணி முன்னிலை

பீகார் சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில், பாஜக கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. பீகார் சட்டப்பேரவை தேர்தல் 3 கட்டங்களாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில், ராஷ்டிரிய ஜனதா தள கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தும், ஆளும் ஜனதா தளம் கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்தும் நேரடியாக களம் கண்ட நிலையில், இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில், தற்போது முதல்வராக இருக்கும் நிதிஷ் குமார் மீண்டும் அரியணை…

தங்கம் விலையில் ரூ.1,248 வீழ்ச்சி

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,248 குறைந்துள்ளது. பொதுமுடக்க காலத்தில் வரலாறு காணாத அளவுக்கு தங்கம் விலை ஏற்றத்தை சந்தித்தது ஏழை, எளிய மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு இறுதியில் ரூ.29 ஆயிரம் வரையிலேயே நீடித்து வந்த தங்கம் விலை, இந்த ஆண்டு ரூ.43 ஆயிரத்துக்கு மேல் எட்டியது. இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.156 குறைந்து, ரூ.4,766க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ. 1,248…

பீகார் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

பீகார் 243 தொகுதிகளை கொண்ட சட்டப்பேரவை தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை இன்று தொடங்கியது. 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டப்பேரவை தேர்தல் கடந்த மாதம் தொடங்கி 3 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான கூட்டணி, நிதிஷ் குமார் தலைமையிலான பாஜக கூட்டணி என நேரடியாக களம் கண்டனர். இதில் தேஜஸ்வி யாதவ் கூட்டணி வெற்றிபெறும் என கருத்து கணிப்பு சொல்கிறது. இந்நிலையில் தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்படுகின்றன. 38 மாவட்டங்களில் 55…