Daily Archives: November 25, 2020

சென்னைக்குள் வெளி மாவட்ட நபர்கள் நுழைய தடைவிதித்தது காவல்துறை

இரவு 10 மணிக்கு மேல் சென்னைக்குள் வெளிமாவட்ட நபர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பிற பகுதிகளில் இருந்து சென்னைக்கு வருபவர்களுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை நகரில் பிரதான சாலைகள் மூடப்பட்டன. மறு அறிவிப்பு வரும் வரை பிரதான சாலைகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம், போரூர். மணலி, ஈசிஆர், ஓம்ஆர் போன்ற பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளன. வங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் இன்று பிற்பகலில் அதி தீவிர…

என்னை பற்றி வந்த செய்தி தவறானது நடிகை -அதுல்யா ரவி

2017 ஆம் ஆண்டு வெளியான காதல் கண் கட்டுதே படம் மூலம் நாயகியாக தமிழ்த்திரைப்படத்துறைக்கு அறிமுகமானவர் அதுல்யாரவி.அதன்பின் ஏமாளி,அடுத்த சாட்டை, நாடோடிகள் 2 உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது அதுல்யாரவி, அமலாபால் தயாரிப்பில் காடவர், டிரீம்வாரியர் தயாரிக்கும் வட்டம், முருங்கைக்காய் சிப்ஸ் மற்றும் எண்ணித்துணிக உட்பட சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் நடித்த என் பெயர் ஆனந்தன் படத்தின் விளம்பரங்களுக்கு ஒத்துழைக்க மறுக்கிறார் என்று இவர் மீது புகார் சொல்லப்பட்டது இதுகுறித்து அதுல்யாரவியிடம் கேட்டபோது…

அமித்ஷாவை நள்ளிரவில் சந்தித்த தேமுதிக தலைவர்

பாஜக முதன்மைத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா நவம்பர் 21 பிற்பகல் முதல், நவம்பர் 22 ஆம் தேதி முற்பகல் வரை சென்னையில் இருந்தார். 21 ஆம் தேதி அவர் கலந்துகொண்ட கலைவாணர் அரங்கத்தில் நடந்த அரசு விழாவில் கூட்டணிக் கட்சிகளான பாமக சார்பில் ஏ.கே.மூர்த்தி, தேமுதிக சார்பில் இளைஞரணிச் செயலாளர் சுதீஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். அரசு நிகழ்ச்சி முடிந்து அமித் ஷா மீண்டும் தான் தங்கிய லீலா பேலஸ் ஹோட்டலுக்குச் சென்றுவிட்ட நிலையில்,…

டெல்டா மக்களுக்கு கஜா புயல் கற்றுதந்த பாடம்

டெல்டா மக்கள் கஜா அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாததால், தற்போதைய நிவர் புயலை முன்னிட்டு தாங்களாகவே பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். 2018 நவம்பர் மாதம் டெல்டாவைத் தாக்கிய கஜா புயலால் சுமார் பத்து நாட்கள் மின்சாரம் இல்லாமல், மளிகைப்பொருட்கள், காய்கறிகள் இல்லாமல் டெல்டா மக்கள் கடும் துயரப்பட்டார்கள். புயலால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் ஒருபக்கம் என்றால், இன்னொரு பக்கம் அதிகமாக பாதிப்பு இல்லையென்றாலும் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் பொருட்கள் வாங்க முடியாமல் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.…

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகள்

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் கண்காணிப்பு, கட்டுப்படுத்துதல் மற்றும் எச்சரிக்கையுடன் இருக்க புதிய வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. டிசம்பர் 1 முதல் அமல்படுத்தப்படும் வகையில் வெளியிடப்பட்டுள்ள புதிய உத்தரவின் படி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பல்வேறு நடவடிக்கைகள் கொரோனாவுக்கு பொருத்தமான நடத்தை மற்றும் எச்சரிக்கையுடன் செயல்படுதல் கூட்டத்தை ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், நிலையான இயக்க நடைமுறைகளை பின்பற்றுதல் ஆகியவற்றை கண்டிப்பாக அமல்படுத்த கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன. கட்டுப்பாட்டு மண்டலங்களில் அத்தியாவசிய நடவடிக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட…

நிவர் புயல் கட்டுபாட்டில் சென்னை களமிறங்கிய காவல்துறை

நிவர் புயல் காரணமாகச் சென்னையில் பல்வேறு பகுதிகளும் வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கிறது. சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் வீடுகளிலும் மழை நீர் புகுந்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து வினாடிக்கு 4,400 கன அடி வருவதால், அடையாற்றில் 3,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் அடையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பொதுப்பணித் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், சென்னை காவல்துறையினரும் தண்ணீரை வெளியேற்றுவது, மரங்களை…

மீட்புப்பணிக்காக சுமித்ரா, ஐ.என்.எஸ். ஜோதி கப்பல்கள் வந்தடைந்தன

தமிழகத்தில் 16 கிலோ மீட்டர் வேகத்தில் நிவர் புயல் நகர்ந்துவருகிறது. அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில் காற்றின் வேகம் அதிகரித்துவருகிறது. இதனையடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மணிக்கு 40- 50 கிமீ வேகத்தில் கடல்காற்று வீசுகிறது. நிவர் புயல் எதிரொலியால் அத்தியாவசியப் பணிகள் தவிர, அரசு அலுவலகங்களுக்கு நாளையும் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேருந்து, புறநகர் ரயில் சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நிவர் புயல்…

கொசஸ்தலை ஆறு கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க, ஆட்சியர் அறிவுறுத்தல்

கொசஸ்தலை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா வேண்டுகோள் விடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே ஆந்திர எல்லையில் அமைந்துள்ள கிருஷ்ணாபுரம் நீர்தேக்கம் முழுக்கொள்ளளவை எட்டி வருவதால் உபரிநீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நிவர் புயல் காரணமாக, நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று இரவு முதல் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு…

தமிழகத்தில் மேலும் 1,534 பேருக்கு கொரோனா

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 5 கோடியே 98ஆயிரமாக அதிகரித்துள்ளது. 14லட்சத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா வைரஸ்கான தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 1,534 கொரோனா…

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இரவு 8 மணியுடன் நிறுத்தம்

தமிழகத்தில் 16 கிலோ மீட்டர் வேகத்தில் நிவர் புயல் நகர்ந்துவருகிறது. அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில் காற்றின் வேகம் அதிகரித்துவருகிறது. இதனையடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மணிக்கு 40- 50 கிமீ வேகத்தில் கடல்காற்று வீசுகிறது. நிவர் புயல் எதிரொலியால் அத்தியாவசியப் பணிகள் தவிர, அரசு அலுவலகங்களுக்கு நாளையும் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேருந்து, புறநகர் ரயில் சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நிவர் புயல்…

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 5000 கன அடி நீர் திறப்பு

நிவர் புயல் காரணமாக சென்னையில் பெய்துவரும் தொடர் மழையால், செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக முழுக்கொள்ளளவை எட்டும் நிலையை நோக்கி சென்றுகொண்டுள்ளது. இதனிடையே, மழை காரணமாக இன்று காலை நிலவரப்படி, செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21.55 அடியாகவும், மொத்த கொள்ளளவு 2 ஆயிரத்து 999 கனஅடியாகவும் உயர்ந்தது. 24 அடி நீர்மட்டம் கொண்ட ஏரி, 22 அடியை எட்டியவுடன் நீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி 12 மணியளவில் 1000 கன அடி நீர் திறக்கப்பட்டது. அதன்பின்னர் 1500…

நிவர் புயல் குறித்து கவிஞர் வைரமுத்து கவிதை

நிவர் புயல் குறித்து குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கவிஞர் வைரமுத்து எழுதியுள்ள கவிதையில் சுகமாய்க் கடந்துவிடு சுவாசமாகி விடு ஏழையரின் பெருமூச்சை விடவா நீ பெருவீச்சு வீசுவாய்? என்று எழுதியுள்ளார் https://twitter.com/Vairamuthu/status/1331449562431512582

1 2 3