ஜெர்மனியில் பயங்கரம்! பொதுமக்கள் மீது பயங்கரமாக மோதிய கார்: 2 பேர் பலி பலர் படுகாயம்
ஜெர்மனியில் பாதசாரிகள் மீது திடீரென்று கார் மோதியதால், இதில் 2 பேர் பலியாகியிருப்பதுடன் ஏராளமானோர் படுகாயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனியின் Trier நகரில் சற்று முன் பாதசாரிகள் மீது திடீரென்று கார் ஒன்று பயங்கரமாக மோதியுள்ளது. இந்த விபத்து காரணமாக இதுவரை 2 பேர் பலியாகியுள்ளதுடன், 15 பேர் காயமடைந்திருப்பதாக, Trier நகரின் மேயர் தெரிவித்துள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது போலீசார் முதற்கட்ட விசாரணையில், இரண்டு பேர் உயிரிழந்திருப்பதை உறுதிபடுத்துவதாக தெரிவித்துள்ளனர்.