Daily Archives: December 2, 2020

“சின்னப்பம்பட்டி எக்ஸ்பிரஸ் புறப்பட்டுவிட்டது”

“இது ஒரு மனிதன் எடுத்துவைத்த சிறிய காலடி. ஆனால் மனிதக் குலத்தின் பெரும் பாய்ச்சல்” நிலவில் கால் வைத்தபோது, நீல் ஆர்ம்ஸ்ட்ராங் கூறிய வார்த்தைகள் இவை. நடராஜன் இன்று, இந்திய அணியில் இடம்பிடித்தது, சாதாரணமான ஒன்றாக இருக்கலாம். ஆனால், வரலாறு அறிந்தவர்களுக்கு, இது நிலவில் கால் வைப்பது போன்ற சாதனைதான் என்பது நன்றாகத் தெரியும். அதனால்தான், அவரின் ஒரு விக்கெட்டிற்குக்கூட இவ்வளவு பெரிய கொண்டாட்டம். நடராஜன் இன்று, ‘முதல்’ விக்கெட்டை வீழ்த்தியபோது, ‘கிரிக்பஸ்’ என்ற மிகப் பிரபலமான கிரிக்கெட் இணையதளம், “சின்னப்பம்பட்டி எக்ஸ்பிரஸ் புறப்பட்டுவிட்டது” என வர்ணித்தது. இதற்கு முன்பு இந்திய அணிக்கு, தமிழ்நாட்டிலிருந்து கிளம்பிய எக்ஸ்பிரஸ்கள், சென்னை போன்ற பெரும்…

அரசியல் ஆடு புலி ஆட்டத்தில் அதிமுக-பாமக

“பாமக சார்பில் நுங்கம்பாக்கத்தில் உள்ளTNPSC அலுவலகம் முற்றுகை போராட்டத்துக்காக டிசம்பர் 1ஆம் தேதி அதிகாலையும், நவம்பர் 30ஆம் தேதி மாலையிலேயும் வட மாவட்டங்களில் இருந்து பாமகவினர் திரண்டு சென்னையை நோக்கி படையெடுத்தனர். அவர்களை முதல் நாள் இரவு ஆங்காங்கே தடுத்து நிறுத்தி போலீஸார் அந்தந்த பகுதிகளில் இருக்கும் திருமண மண்டபங்களில் தடுத்து வைத்தனர். டிசம்பர் 1ஆம் தேதி காலை சென்னையை நெருங்க முயற்சி செய்த நூற்றுக்கணக்கான பாமகவினர் பெருங்களத்தூர் முதல் தாம்பரம் வரை கடுமையான நெரிசலை ஏற்படுத்தினர்.…

தனுஷ் நடிக்கும் படத்திலிருந்து ஜி.வி.பிரகாஷ் நீக்கம்

தனுஷ் நடிப்பில் இரண்டு படங்கள் தற்போது தயாரிப்பில் இருக்கிறது. பரியேறும் பெருமாள் இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் மற்றும் அக்‌ஷய்குமாருடன் இந்திப் படமான ‘அட்ராங்கிரே’. இவ்விரு படங்களுக்குமான படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜெகமே தந்திரம் படம் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது.இந்த நிலையில், தனுஷ் நடிக்க இருக்கும் அடுத்தப் படத்தை கார்த்திக் நரேன் இயக்க இருக்கிறார். தனுஷின் 43ஆவது படமாக இது தயாராக இருக்கிறது. இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாஸ்டர் நாயகி மாளவிகா…

வன்னியர் சங்கம் தடைசெய்யப்படுமா

வன்னியர் சங்கத்தை தடை செய்ய வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. வன்னியர்களுக்கு 20 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்பதை வலியுறுத்தி சென்னையிலுள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகம் அருகே பாமகவினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் அன்புமணி, ஜி.கே.மணி உள்ளிட்ட பாமக தலைவர்கள் கலந்துகொண்டனர். இதனிடையே கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து வந்த பாமகவினரை சென்னைக்குள் நுழைய விடாமல் பெருங்களத்தூரிலேயே காவல் துறையினர் தடுத்தி நிறுத்தினர். இதனால் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாமகவினர், சாலையில்…

செந்தில்பாலாஜி தொகுதி மாறுகிறாரா?

முன்னாள் அமைச்சரும் தற்போதைய திமுகவின் கரூர் மாவட்ட பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினராக தற்போது இருந்து வருகிறார். .இந்த நிலையில் கடந்த நவம்பர் 24ம் தேதி கரூரில் நடந்த வேல் யாத்திரை பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை…”செந்தில் பாலாஜி அவர்களே உங்களுக்கு சவால். நீங்கள் இப்போது அரவக்குறிச்சி எம்எல்ஏ. நீங்கள் வரும் தேர்தலிலும் அரவக்குறிச்சியிலேயே நிற்க வேண்டும். நீங்கள் தொகுதி மாறி நிற்கக்கூடாது‌. எங்களுடைய வேட்பாளரும் நிற்பார். அரவக்குறிச்சியில் யார்…

பிரபாஸ் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் சலார்

இந்திய அளவில் ‘கே.ஜி.எஃப்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் பிரபலமடைந்த தயாரிப்பு நிறுவனம் ஹொம்பாளே பிலிம்ஸ். வித்தியாசமான களங்கள், பிரம்மாண்டமான படைப்புகள் என தொடர்ச்சியாக வெற்றிகரமாகப் பயணித்து வருகிறது. தற்போது ‘யுவரத்னா’ மற்றும் ‘கே.ஜி.எஃப் சேப்டர் 2’ ஆகிய படங்களைப் பிரம்மாண்டமாகத் தயாரித்து வருகிறது. ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனர் விஜய் கிரகண்தூர் தங்களது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பை அறிவித்துள்ளார்.  இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ் நாயகனாக நடிக்கவுள்ள இப்படத்தை ‘கே.ஜி.எஃப்’ படங்களின் மூலம்  அசரவைத்த இயக்குநர் பிரஷான்த் நீல்…

வட சென்னை வாழ்வியலை கூறும் சார்பட்டா பரம்பரை

பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வந்த திரைப்படத்திற்கு “சார்பட்டா பரம்பரை” என்று பெயர் வைத்திருக்கிறார்கள். “K9 Studios” மற்றும் “நீலம் புரடொக்‌ஷன்ஸ்” இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள். வடசென்னை பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வியலுக்குள் பிரிக்க முடியாத விளையாட்டாக இருக்கும் குத்துச்சண்டையை மையமாக வைத்து முழுக்க முழுக்க அனல் பறக்கும் ஆக்சன் திரைப்படமாக உருவாக்கியிருப்பதாக கூறுகிறார் பா.ரஞ்சித்  இந்த திரைப்படத்திற்காக நடிகர் ஆர்யா கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு  தனது உடலமைப்பை முற்றிலுமாக மாற்றிக்கொண்டு நடித்திருக்கிறார். அவர் மட்டுமல்லாமல், அவரோடு…

தலித் என்பதால் பொறுப்பு பறிப்பா?

காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய செயலாளராக பொறுப்பு வகித்த ஜி.செல்வம் எம்.பி.யை அந்த பொறுப்பிலிருந்து திடீரென்று விடுவிப்பதாக துரைமுருகன் அறிவித்துள்ளார். இத்தனைக்கும் ஒன்றிய செயலாளராக அவருடைய பணி சிறப்பாகத்தான் இருந்திருக்கிறது. அப்படியிருந்தும் ஒரு எம்.பி. என்றும் பாராமல் அவருடைய பொறுப்பை ஏன் பறித்தார்கள் என்பது பெரிய குழப்பமாக இருக்கிறது. அதுவும், செல்வம் தன்னை பொறுப்பிலிருந்து விடுவித்துக் கொள்வதால் என்று அடைமொழி போட்டு அறிக்கை வந்திருக்கிறது. அவராக விடுவிக்கக் கேட்கவில்லை. அப்படி கேட்கும்படி வற்புறுத்தப்பட்டுள்ளார். எம்.பி.…

முகக்கவசம் அணியாததால் அந்தரத்தில் விமானத்துக்குள் அடிதடி!

ஆம்ஸ்டெர்டாமிலிருந்து இபிஸா நகருக்குச் சென்ற விமானத்தில் இருந்த பயணிகளுக்கிடையே முகக் கவசம் அணிவது தொடர்பான பிரச்னை வன்முறையில் சென்று முடிந்துள்ளது. பலர் தடுக்க இரு ஆண்கள் கோபமாகச் சண்டையிடும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சட்டையில்லாத ஒருவரை பலர் தடுத்துப் பிடிக்கிறார்கள். அவரை மற்றொருவர் தாக்குகிறார். அங்கிருப்பவர்கள் “நிறுத்துங்கள், இங்கே குழந்தைகள் உள்ளனர்.” என்று கத்துகின்றனர். அந்த வீடியோவின் கடைசியில் சட்டையில்லாத அந்த நபர் கீழே தள்ளப்பட்டு மற்றவர்களால் தரையில்…

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுத்த உச்சநீதிமன்றம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை இடைக்காலமாக திறக்க அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை இடைக்காலமாக திறக்க அனுமதிக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்க மறுத்துள்ளது உச்சநீதிமன்றம். பல்வேறு கட்ட போராட்டங்கள், அரசால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் உள்ளிட்ட சம்பவங்களையடுத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. இதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை…

பட்டாசு வெடிக்கத் தடை நீட்டிப்பு..!

கொரோனா காலத்தில் டெல்லியில் காற்று மாசு அதிகம் உள்ள நகரங்களில் பட்டாசு வெடிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. பட்டாசு வெடிக்க ஏற்கனவே விதித்த தடையை நீட்டித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. தீபாவளியையொட்டி ஏற்படும் காற்று மாசு மற்றும் அதனால் கொரோனா நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் ராஜஸ்தான், ஒடிசா, டெல்லி, கர்நாடகம் போன்ற மாநிலங்கள் பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ளது. டெல்லியில் கொரோனா பரவலின் 2-வது அலை ஏற்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்தில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.…

நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை காலை 10.30 மணி அளவில் காணொலி வாயிலாக நடைபெறும். டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் குறித்து பேச நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

1 2 3 4