Daily Archives: December 3, 2020

மின்சார கார்- புதிய அத்தியாயத்தை தொடங்கிய ஹூண்டாய்

மின்சார கார்களுக்காக பிரத்யேக கட்டமைப்புக் கொள்கையை உருவாக்கியுள்ளது ஹூண்டாய் மோட்டார் நிறுவனம். மின்சாரக் கார்களுக்கான சந்தை சமீபகாலமாக அதிக கவனத்தைப் பெற்று வருகின்றது. இனி மின்சாரக் கார்கள்தான் சாலைகளை அலங்கரிக்கப் போகின்றன. இதனால், பல முன்னணி நிறுவனங்கள் மின்சார கார் தயாரிப்பில் தீவிரமாக இறங்கியுள்ளன. தற்போது நடைமுறையில் உள்ள பெட்ரோல், டீசல் கார்களின் கட்டமைப்புக் கொள்கையைப் பின்பற்றியே உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மின்சார கார்களுக்கான பிரத்யேக கட்டமைப்புக் கொள்கையை ஹூண்டாய் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இது ஹூண்டாய் இ-ஜிஎம்பி…

காயத்ரி மந்திரம் -பொருள் என்ன?

காயத்ரி மந்திரம், சூரியனை நோக்கி பாடப்படுவதாகும். இதை காலையில், நீராடிய பிறகு கேட்க வேண்டும். அல்லது வார்த்தை பிறழாமல் சொல்ல வேண்டும். ‘ஓம் – பூர்புவஸ்ஸிவஹ தத் சவிதூர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ நப்ரசோத யாத்’ என்ற காயத்ரி மந்திரத்தைக் கேட்டிருப்பீர்கள். இதன் பொருள் தெரிந்து கேட்பது மிகவும் நல்லது. ஓம் – பர பிரம்மாகிய தெய்வம், பூர் – பூலோகம், புவ – வானத்துக்கும், பூமிக்கும் இடைப்பட்ட உலகம். கவஹ-சுவர்க்கம், தத்…

நந்தி பார்க்கும் திசை எது?

நந்தி இறைவனைப் பார்த்தபடியே அமைக்கப் பட்டிருக்கும். (ஒருசில தலங்களில் சிறப்பாக நந்தி எதிர்புறமாகவும் சற்று விலகியும் அமைந்திருக்கும்) நந்தி ஆன்மாவைக் குறிப்பது, பசு எப்போதும் பதியையே நாட வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகவே இறைவனை நோக்கியபடி நந்தி அமைக்கப்பட்டுள்ளது. மலநீக்கம் பெற்ற முக்தி பெற்ற ஆன்மாவே நந்தியாகும்.

தர்மத்திற்கு அழிவு இல்லை ஏன்?

தர்மதேவதை தான் அழியாமல் என்றும் நித்தியமாய் இருக்க விரும்பினாள். அதற்காக ரிஷப ரூபம் கொண்டு சிவனை வணங்கி தன்னை வாகனமாக ஏற்கும்படி வேண்டினாள். அதனை ஏற்று சிவபெருமான் வாகனமாக்கிக் கொண்டார். தர்மத்திற்கு அழிவு இல்லை என்பதும் இறைவனை தர்மத்தை வாகனமாகக் கொண்டார் என்பதனையும் இது உணர்த்துகின்றது.

திருமணமான பெண்கள் மெட்டி அணிவது ஏன் ? தமிழர்களின் அறிவியல்

நமது முன்னோர்கள் எப்போதுமே அறிவியலும் ஆன்மீகமும் கலந்த விசயங்களையே அறிமுகம் செய்கின்றனர். ஒரு பெண் திருமணமானவர் என்பதை உணர்த்துவது அவர் கால் விரல்களில் அணிந்திருக்கும் மெட்டிதான். நெற்றி உச்சி வகிட்டில் பொட்டு வைத்திருப்பார். கழுத்தில் மாங்கல்யம், கால்களில் மெட்டி அணிவது கூட அடையாளம் என்பதை விட ஆரோக்கியம் உள்ளது என்பதை உணர்ந்துதான் அதை அணியச் சொல்கின்றனர். பெண்களது கருப்பைக்கான முக்கிய நரம்புகள் கால் விரல்களிலேயே இருக்கிறது. வெள்ளியில் மெட்டி அணிவதால் வெள்ளியில் இருக்கும் ஒருவித காந்த சக்தி…

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை திடீர் உயர்வு- அதிருப்தியில் மக்கள்

நாடு முழுவதும் சமையல் எரிவாயு விலை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் 1-ந்தேதி விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.50 அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றமானது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை பொருத்து அமையும். மார்ச் மாதம் கொரோனாவால் கச்சா எண்ணெய் விலை குறைந்தது. இதனால் ஏப்ரல், மே மாதங்களில் சமையல்…

நான் நேசிப்பது உன்னை

பகல் நேசிப்பது இரவை. மழை நேசிப்பது பூமியை. காதல் நேசிப்பது இதயத்தை. நான் நேசிப்பது உன்னை. நீ நேசிப்பது என்னை மட்டுமா இருக்க ஆசை கொள்கிறேன் என் அன்பே

சுவையான உருளைக்கிழங்கு வெங்காய வடை

உருளைக்கிழங்கு வெங்காய வடை சிறிது நேரத்தில் சட்டென்று செய்யக் கூடிய ருசியான உணவு. எப்படி செய்வது என்று தெரிந்துகொள்வோம் தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு – 1/4 கிலோ பெரிய வெங்காயம் – 2 கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன் சோள மாவு – 2 ஸ்பூன் மிளகாய் வற்றல் பொடி – 1/2 ஸ்பூன் மஞ்சள் பொடி – 1 டீஸ்பூன் கரம் மசாலா பொடி – 1 ஸ்பூன் உப்பு – தேவையான…

ரஜினியின் அரசியல் பிரவேசம்.. குழப்பமான முயற்சி- கூறுவது யார் தெரியுமா?

ஆன்மீகம் வேறு, அரசியல் வேறு. இரண்டையும் ஒன்றாக இணைப்பது குழப்பமான முயற்சி என ரஜினியை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், விமர்சித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது இன்னும் ஒரு சில நாட்களில் அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்று கூறியிருந்தார். அதன்படி சற்றுமுன் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் தனது அரசியல் கட்சி தொடங்கும் தேதியை அறிவித்துள்ளார். டிசம்பர் 31 ஆம் தேதி அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும்…

ரஜினி கொடுத்த பதவி: பா.ஜ.கவைத் தூக்கியெறிந்தார் அர்ஜுன மூர்த்தி!

ரஜினி தொடங்க உள்ள கட்சியில் அர்ஜுன மூர்த்திக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர் பாஜகவிலிருந்து பதவி விலகியுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது குறித்து திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினியின் இந்த அறிவிப்பை தொடர்ந்து அவரது தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் தான் தொடங்கபோகும் புதிய…

போலிச் சாமியார் செய்த வேலை: மருத்துவமனையில் பெண் அனுமதி

ராஜஸ்தான் மாநிலத்தில் மூடநம்பிக்கையால் பெண் ஒருவர் உடல் முழுவதும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த குறித்த மத்திய வயது பெண் தனது குடும்பத்துக்கு தொடர்ந்து கஷ்டங்களாக வருவதாக சொல்லி அந்த பகுதியில் இருக்கும் பெண் சாமியாரான சந்தோஷி தேவி என்பவரிடம் சென்றுள்ளார். இதையடுத்து அவருக்கு யாரோ செய்வினை (சூனியம்) வைத்திருப்பதாக கூறிய போலிச்சாமியார் 1000 ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு மறுநாள் வர சொல்லியுள்ளார். மறுநாள் அந்த பெண் சென்ற போது சூனியம் எடுப்பதாகக் கூறி…

கொடைக்கானலுக்கு வாகனங்கள் செல்ல தடை

புரெவி புயல் காரணமாக, பாதுகாப்பு கருதி இரவு 7 மணி முதல் கொடைக்கானல் மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. புரெவி புயலால் தென் தமிழகத்தில் கனமழை பெய்து வருகின்றது. இதனால், அசம்பாவிதங்களை தடுப்பதற்காக பலவேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மழை பாதிப்பு அதிகம் இருக்கும் பகுதிகளுக்கு பேரிடர் மீட்புக் குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர். கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கும் மீனவர்களுக்கும் பாதுகாப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில், புரெவி புயலால் கொடைக்கானல் பகுதியில், சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகின்றது.…

1 2 3