Daily Archives: December 9, 2020

அற்புதங்களின் குவியல் அண்ணா!

தேசியம் என்பதே புரட்டு. அது காலிகளின் புகலிடம் என்று தந்தை பெரியார் சொன்னார். இன்றைக்கு இந்திய தேசியவெறியை தூண்டிவிடும் காவிகளின் கூடாரம் பெரியார் சொன்னது உண்மை என்பதை நிரூபிக்க போதுமானதாக இருக்கிறது. எல்லாவற்றையும் ஒற்றைமயமாக்கல் என்பதே தேசியத்தின் உள்ளடக்கம் என்பதை சமீபத்திய பாஜக ஆட்சி தெளிவாக உணர்த்தி வருகிறது. பல்வேறு இனக்குழுக்கள், பல்வேறு மொழிகள், பல்வேறு கலாச்சாரங்கள், பல்வேறு உணவுப்பழக்கங்கள் என்று வேறுபட்ட மக்கள் அடங்கிய இந்திய தேசியத்தை நோக்கி அண்ணா ஏராளமான கேள்விகளை எழுப்பியிருக்கிறார். இந்திய…

தலைமுறைகளை பாதுகாத்த தலைமுறை இடைவெளி!

தந்தை பெரியாருக்கும் அறிஞர் அண்ணாவுக்கும் இடையிலான தலைமுறை இடைவெளிதான் பல தலைமுறைகளுக்கு பாதுகாப்பளிக்க உதவியது என்பது எனது கருத்து. தந்தை பெரியாரின் கொள்கைகளில் வேறுபட்டு அண்ணா அவரிடமிருந்து விலகவில்லை. காலத்துக்கேற்ற மாற்றம் வேண்டும் என்ற அண்ணாவின் விருப்பத்தை பெரியார் தவறாக புரிந்துகொண்டார் என்பதே உண்மை. நமது கொள்கைகளை நிறைவேற்ற அரசுகளுக்கு எதிராக போராடி ஏன் சிரமப்பட வேண்டும்? விடுதலை நமக்கு அதிகாரத்தை பெறும் வாய்ப்பை பெற்றுக் கொடுத்திருக்கிறது. நாமே ஏன் ஆட்சியை அமைத்து நமது கொள்கைகளுக்கு சட்ட…

அன்னா ஹஸாரேயால் யாருக்கு லாபம்?

விவசாயிகளின் போராட்டம் இந்தியா முழுவதும் பரவவேண்டும் என்று கூறியபடி, உண்ணாவிரத நாடகத்தை மீண்டும் கையில் எடுத்திருக்கிறார் அன்னா ஹஸாரே என்ற ஆர்எஸ்எஸ் ஸ்லீப்பர் செல். இவர் கடந்த காலத்தில் சாதித்தது என்ன? யாருக்காக இவர் ஊழல் எதிர்ப்பு நாடகத்தை நடத்தினார் என்ற பிளாஷ்பேக்கை அறிந்து கொள்வது நல்லது. பிரதமர் உள்பட அனைவரையும் விசாரிக்கும் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும், என்று ஊழல் ஒழிப்பு நாயகராக மீடியாக்களால் அடையாளப்படுத்தப்பட்டவர் அன்னா ஹஸாரே. காங்கிரஸ் ஆட்சியின் கடைசி ஆண்டில் அந்த…

ஏலியன்கள் அமெரிக்காகவோடு இணைந்து செயல்படுகிறது – இஸ்ரேல் விஞ்ஞானி

ஏலியன்கள் இருக்கிறதா, இல்லையா என்பது பல ஆண்டுகளாக நடக்கும் நீண்ட விவாதம். மறைந்த விஞ்ஞானி, ஸ்டீபன் ஹாக்கிங், ஏலியன்கள் இருப்பதாக நம்புவதாகவும், மனித குலத்தின் இருப்பு அவற்றுக்குத் தெரிந்தால், அது நமக்கே ஆபத்தாக முடியும் எனவும் எச்சரித்திருந்தார். இந்தநிலையில், இஸ்ரேல் நாட்டின் விஞ்ஞானி ஒருவர், ஏலியன்கள் இருப்பதாகவும், அவை அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், மேலும் அவை கூட்டமைப்பு சேர்ந்து செயல்படுவதாகவும் கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார். இஸ்ரேல் நாட்டு விண்வெளி பாதுகாப்பு திட்டத்தின், தலைவராகக்…

தமிழ்நாடு நடப்பு விநியோகஸ்தர்கள் சங்கம் பதவி இழக்கும் T.ராஜேந்தர்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோஸ்தர்கள் சங்கத் தலைவராக தற்போதுடி.ராஜேந்தர் இருக்கிறார்.அந்தச் சங்கத்துக்கான தேர்தல் 2019 டிசம்பர் 22 ஆம் தேதி மீரான் சாகிப் தெருவில் உள்ள அந்ததிரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தில் நடைபெற்றது. அதில் வெற்றி பெற்ற டி.ராஜேந்தர், இந்தச் சங்கத்துக்குத் தலைவராக இருப்பதோடு, இந்தச் சங்கத்தின் தலைவராக இருப்பதால் தமிழ்த் திரைப்படக் கூட்டமைப்பு எனும் அமைப்பின் தலைவராகவும் ஆனார். ஃபெடரேசன் என்று திரையுலகினரால் சொல்லப்படும் தமிழ் திரைப்பட கூட்டமைப்பு என்பது, திரைப்படத் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள்…

அதர்வா எதிர்நோக்கும் குருதி ஆட்டம் வெற்றி

எட்டுதோட்டாக்கள்படத்தைத் தொடர்ந்து அதர்வா நாயகனாக நடிக்கும் ‘குருதி ஆட்டம்’ படத்தை இயக்கி உள்ளார் ஸ்ரீகணேஷ். பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்து வரும் இந்தப் படத்தை ராக் போர்ட் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் முருகானந்தம் தயாரித்து உள்ளார் சில காரணங்களால் தாமதமான இந்தப்படம் இப்போது வெளியீட்டுக்குத் தயாராகியிருக்கிறது. இவ்வாண்டுத் தொடக்கத்தில் படத்தின் முதல்பார்வையை வெளியிட்டது படக்குழு. அதைத் தொடர்ந்து படத்தை வெளியிடும் முயற்சியில் ஈடுபட்ட நேரத்தில் கொரானா குறுக்கிட்டது. இந்நிலையில், நேற்று ( டிசம்பர் 8 )…

ரஜினிகாந்த் பாஜக பினாமியா? மாநில தலைவர் முருகன் பதில்

நடிகர் ரஜினிகாந்த்பாஜகவின் பி டீம் என முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் விளக்கம் அளித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் வரும் ஜனவரி மாதம் தனது அரசியல் கட்சியைத் துவக்க இருக்கிறார். தற்போது கட்சி ஆரம்பிப்பதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும், தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தியையும் நியமனம் செய்தார். இந்த அர்ஜுன மூர்த்தி பாஜகவின் அறிவுஜீவிகள் பிரிவின் தலைவராக இருந்துவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் பாஜகவிலிருந்து ஒருவரை தனது கட்சியின்…

பைக்கில் சென்ற தாய், மகள் உயிரிழப்பு: மழைநீர் வடிகால்வாயை மூடுமாறு வலியுறுத்தும் ஸ்டாலின்

பைக்கில் சென்ற தாய் மற்றும் மகள் உயிரிழந்தமையைத் தொடர்ந்து, மழைநீர் வடிகால்வாயை உடனே மூட வேண்டும் என அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். திமுக தலைவரும் சட்டமன்ற எதிர் கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின்நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; சென்னையில் பைக்கில் இருந்து தவறி மழைநீர் வடிகால் கால்வாயில் விழுந்து தாய் கரோலினா, அவரது மகள் இவாலின் ஆகிய இருவரும் உயிரிழந்த கொடூரமான நிகழ்வு அதிர்ச்சி அளிக்கிறது. திறந்தவெளி மழைநீர் வடிகால் கால்வாய்களை மூடி மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்திட…

அதிகரிக்கும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அந்தவகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 32 ஆயிரத்து 67 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 97 இலட்சத்து 35 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 92 இலட்சத்து 14 ஆயிரத்து 806 பேர் குணமடைந்துள்ளனர். அத்துடன் 3 இலட்சத்து 79 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தொற்றாளர்கள் அதிகமாக குணமடையும் நாடுகளின் வரிசையில் இந்தியா முன்னிலை வகிக்கின்றது. மேலும்…

கொரோனாத் தடுப்பூசி பெறுபவர்களுக்கு அவசர எச்சரிக்கை

கொரோனா தடுப்பூசி போடுவதற்கு 2 வாரங்களுக்கு முன்பும், தடுப்பூசி போட்ட 42 நாட்கள் வரையிலும் மதுபானம் அருந்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய பொதுசுகாதார கண்காணிப்பு அமைப்பு ஒன்றின் தலைவரான அனா போபோவா இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். கொரோனா தடுப்பூசியான ‘ஸ்புட்னிக்’கை மக்களுக்கு இந்த வாரம் செலுத்த ரஷ்ய அரசாங்கம் தயாராகியுள்ளது. முதல்கட்டமாக, மருத்துவ ஊழியர்கள், சமூக பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த தடுப்பூசி போடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொரோனா தடுப்பு மருந்தை 21 நாட்கள் இடைவெளியில் இருதடவைகள் செலுத்த…

3 வேளை உணவு தமிழர்களுக்குப் போதும்: கூட்டமைப்புக்கு எச்சரிக்கை

மூன்று வேளையும் நன்றாகச் சாப்பிட்டு சுதந்திரமாக வாழும் சூழ்நிலையை வடக்கு தமிழ் மக்கள் விரும்புகின்றனர். எனவே, இனவாதத்தைத் தூண்டும் வகையில் செயற்பட வேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் நாம் கேட்டுக்கொள்கின்றோம் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் ஆகிய திட்டங்களின் ஊடாக வடக்கு, கிழக்கு மாகாணங்களைக் கட்டியெழுப்புவதற்கு மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தமிழீழ…

மதுரை தெப்பக்குளம் தொடர்ந்து 3 -வது ஆண்டாக நிரம்பியுள்ளது: அமைச்சர் செல்லூர் ராஜு

மதுரை தெப்பக்குளம் தொடர்ந்து 3 -வது ஆண்டாக நிரம்பியுள்ளது என அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார். வடகிழக்கு பருவமழையால் வைகையாற்றில் வரும் நீர் பனையூர் கால்வாய் மூலம் தெப்பக்குளத்திற்கு செல்கிறது. தெப்பக்குளத்தில் 12 நாளில் 15 அடிக்கு தண்ணீர் நிரம்பியுள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜு தகவல் தெரிவித்துள்ளார்.

1 2 3