Daily Archives: March 25, 2021

முட்டாள் சீமானின் முட்டாள் தம்பிக்கு ஒரு பெண்ணின் பதிலடி!

புத்தம் புதியதாக பருவம் எய்தி, பீரியட் சைக்கிள் இன்னும் சரிவர செட்டாகாத நிலையில், நெடுந்தூர பேருந்து பயணத்தின் முடிவில் சந்தன நிற பாவாடையில் குருதி அடர்த்தியாய் படிந்திருக்க, சக பயணிகளின் குறுகுறுப்பும் கேலி கலந்த பார்வைகளை என்றாவது எதிர்கொண்டு இருக்கிறீர்களா? பின்பக்க பாவாடையை முன் பக்கமாக மடித்து ஓட்டமும் நடையுமாக வீட்டிற்கு வந்திருக்கிறீர்களா? பெண்களுக்கான பள்ளியென்றாலும் உதிரம் பட்ட நேப்கின்களை தூக்கியெறிய குப்பைத்தொட்டிகள் ஏதுமில்லா காரணத்தால், நேப்கின்களை ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து மாற்றி உபயோகித்தி, எப்பொழுது…

வானதி சீனிவாசன் ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும்..?

கோவை தெற்கு தொகுதி என்பது கோவையின் இதயமாய் இருக்கக்கூடிய பகுதி முறைசாரா தொழிலாளர்கள் தங்க நகைத் தொழிலாளர்கள் கோவை மாவட்டத்தின் ஒட்டுமொத்த மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் மொத்த சில்லறை வர்த்தகர்கள் நிறைந்த பகுதி. சிறுபான்மை மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதி. பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு ஜிஎஸ்டி என்ற பெயரால் பெரும அளவு வர்த்தக பாதிப்பு ஏற்பட்டு வர்த்தகர்கள் நிலைகுலைந்து போயுள்ளனர். தங்க நகை தொழிலாளிகளின் வாழ்க்கை என்பது அனேகமாக முடிந்து போய்…

அஸ்பக்குல்லா கான் (அக்டோபர் 22, 1900 – டிசம்பர் 19,1927)-freedom fighters

நாட்டின் விடுதலைக்காக தனது இன்னுயிரை தியாகம் செய்த மகத்தான தியாகிகளில் ஒருவர் அஸ்பக்குல்லா கான். உத்திரப்பிரதேச மாநிலம் ஷாஜகான் பூர் மாநிலம் 19 நூற்றாண்டின் பிற்பகுதியில் அவர் பிறந்தார். அவரது தந்தை பெயர் சதிகுல்லா கான். 1922ல் அஸ்பக்குல்லா கான் புரட்சியாளர்களின் குழுவில் இணைந்தார். பிரிட்டிஷாரின் நுகத்தடியிலிருந்து இந்தியாவை விடுதலை செய்யும் தீர்மானத்தோடு இவர்கள் போராடினர். ஒரு ஒழுக்கநெறி மிகுந்த வீரனாக, கக்கோரி எனுமிடத்தில் பிரிட்டிஷ் ரயிலில் கொள்ளையடிக்கும் போராட்டத்தை திட்டமிட்ட புரட்சியாளர்களோடு தன்னை இணைத்துக் கொண்டான்…

மனிதகுல வரலாறு – ட்ரோஜன் குதிரை

இலியட், ஒடிஸி என்ற இரண்டு புரணாங்களை கிரேக்கர்கள் நம்பினர். இந்த புராணங்கள் பள்ளியிலேயே கற்பிக்கப்பட்டன. இவற்றிலிருந்து உதாரணங்கள் எடுத்தாளப்பட்டு, தனிமனித வாழ்க்கை சிறப்பாக அமைய அவை உதவுவதாக கற்பிக்கப்பட்டது. இந்த புராணங்களில் இலியட் என்ற புரா ணத்தில் வரும் கதையில் ஒரு மிகப்பெரிய மரக்குதிரை வரும். ஹெலன் ஆஃப் ட்ராய் என்ற அந்த கிளைக் கதையில், ட்ராய் நகரின் இளவரசன் பாரீஸ், கிரேக்க நாட்டின் ஸ்பார்ட்டா மன்னரின் மெலனஸின் மனைவி ஹெலனை கடத்திவிடுவார். இதையடுத்து, ஹெலனை முன்பு…

மனிதகுல வரலாறு – புது விதமான மதம்

கிரேக்கர்களுக்கு முன்பு பல்வேறு காலகட்டத்தில் பல்வேறு நாகரிகத்தைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்தனர். அவர்கள் ஆண் கடவுளரையும் பெண்வழிக் கடவுளரையும் வணங்கினர். அவையும் அச்சமூட்டும் வகையில் உருவகப் படுத்தப்பட்டன. அந்த கடவுளரையே மிக முக்கியமாக மதித்தனர். வினோதமான விலங்குகளைப் போலவும், அரக்கர்களைப் போலவும் முரட்டுதனமான தோற்றத்துடன் அந்த கடவுளர்கள் வடிவமைக்கப்பட்டனர். கடவுளுக்கு தொண்டு செய்து, அவற்றை சாந்தப்டுத்துவதே தங்கள் வாழ்வின் முழுக் கடமை என்பதாக மக்கள் நம்பினர். கிரேக்கர்களுக்கு மதம் குறித்து புதிய பார்வை இருந்தது. கடவுளும், மனிதனும்…

நெல்லிக்காய் சாதம்

என்னென்ன தேவை? உதிராக வடித்த சாதம் – 1 கப், துருவிய நெல்லிக்காய் – 2, துருவிய இஞ்சி – 1 டீஸ்பூன், நீளவாக்கில் நறுக்கிய பச்சைமிளகாய் – 2, மஞ்சள் தூள்-தேவையானால், வறுத்துப் பொடித்த வெந்தயத்தூள் – 1/4 டீஸ்பூன், உப்பு – தேவைக்கு. தாளிக்க… கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா 1 டீஸ்பூன், நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன், கறிவேப்பிலை – 5 இலைகள், பெருங்காயம் – 1/4 டீஸ்பூன். அலங்கரிக்க… வறுத்த…

விண்வெளியைச் சுற்றிய அமெரிக்க வீரர் (பிப்ரவர் 20, 1962) – History of space exploration

எல்லா வகையிலும் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி சோவியத் யூனியன் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருந்தது. ஒருநாள் முழுவதும் விண்வெளியில் தங்கி பூமிக்குத் திரும்பினார் சோவியத் விண்வெளி வீரர். ஆனால் 1962ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி பூமியை மூன்றுமுறை சுற்றிவிட்டு திரும்பினார். அமெரிக்க வீரர் ஜான் கிளென். அட்லஸ் என்ற ஏவுகலம் ஃப்ரண்ட்ஷிப் செவன் என்ற செயற்கைக் கோளில் இவர் பூமியைச் சுற்றினார். 40 வயதான ஜான் கிளென் 4 மணிநேரம் 56 நிமிடங்கள் விண்வெளியில் பூமியை…

ஆதரிப்பீர் உதயசூரியன்!

திமுக மீது உங்களுக்கு விமர்சனமே இல்லையா. உங்க மனசாட்சி சரிதானா? மற்ற கட்சிகளை எல்லாம் கடுமையா விமர்சிக்கிறீர்களே..திமுக மீது உங்களுக்கு கொஞ்சம் கூட விமர்சனமே இல்லியா.. ஏன் இல்ல..நிறைய விமர்சனம் உண்டு.. தொடர்ச்சியா தேர்தலுக்கு முந்தைய காலம் வரை கடுமையா விமர்சித்தது உண்டு. ஆனால் இது மிக மிக முக்கியமான தேர்தல் களம். இதுல கடந்த இருபத்து ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளன் என்ற முறையிலும் கடந்த முப்பது ஆண்டுகளாக பத்திரிக்கை அரசியல் வார…

எடுபிடி அரசின் தலாடி சாதனைகள்!

⬇️ தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றிலேயே தலைமைச் செயலகத்தில் ரெய்டு நடந்தது. ⬇️ தமிழ்நாட்டு காவல் துறை தலைவர் டிஜிபி அலுவலகத்திலேயே சிபிஐ ரெய்டு நடத்தியது. ⬇️ நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கி அதிமுக அரசு சாதனை செய்தது. ⬇️ எட்டு வழிச்சாலை அமைந்த பின்னர் மக்களுக்கு பிடிக்கவில்லை என்றால், சாலையை பூட்டு போட்டு பூட்டிவிடுவோம் என்று பேசியது. ⬇️ எட்டு வழிச்சாலைக்கு எதிராக மக்கள் போராடிய போதும், யாருமே இந்த திட்டத்தை எதிர்க்கவில்லை…

தமிழ்நாடு கலைஞரிடம் ஒப்படைக்கப்பட்டபோது எப்படி இருந்தது தெரியுமா?

எங்கயும் கரண்ட் கிடையாது. சிம்னி விளக்கு தான்.. எந்த ஊருக்கும் சாலை வசதி கிடையாது.. நடை தான்.. கவுரவமான வேலை வாய்ப்பெல்லாம் கிடையாது.. அங்கங்க பெரிய பெரிய நிலசுவான்தார்கள் ஜமீன்தார்கள்தான்… பெருவாரியான மக்கள் அவங்க கிட்ட அடிமைகளா இருக்கணும்.. அவங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. ஒரு வேள சோத்துக்கு நாள் பூரா குடும்பமே வேலை செய்யணும்.. தண்ணீர் வசதி கிடையாது. பல மைல் தூரம் குடத்த தூக்கிட்டு நடந்து போகணும்.. பெண்களுக்கான எந்த உரிமையும் கிடையாது.. போகப்பொருளாக…

தந்தை பெரியார் இதற்காகத்தான் நாய் வளர்த்திருப்பாரோ?

இந்த புகைப்படத்தை பார்க்கும் பொழுது நினைவுகள் பின்னோக்கி இழுக்கின்றன. மேடையில் பேசுவது என் தந்தை இறையனார். எனக்கு 5 அல்லது 6 வயது இருக்கலாம், தந்தை பெரியார் தேவகோட்டை வந்திருந்தார். (அதுதான் அவர் கடைசியாக தேவகோட்டை வந்ததும்) அரசு பயணியர் விடுதியில் தங்கியிருந்தார். எங்கள் அம்மா அய்யாவுக்காக பகலுணவை தயார் செய்துகொண்டு என்னையும் இழுத்துக்கொண்டு விடுதிக்கு விரைந்தார். பகல் 2 மணிக்கு மேலாகிவிட்டதால் அய்யாவின் பசியறிந்து உணவை எதிர் பார்த்து கொண்டிருந்த என் அப்பா இறையனார் என்…