Daily Archives: April 8, 2021

குடைமிளகாய் சட்னி

தேவையான பொருட்கள்: குடைமிளகாய் 2, வெங்காயம் 1, தக்காளி 3, புளி 25 கிராம், மிளகாய் வற்றல் 1, சீரகம் 1 தேக்கரண்டி, கொத்துமல்லி இலை 1 கப், சமையல் எண்ணெய் 1 தேக்கரண்டி, உப்பு தேவைக்கேற்ப. செய்முறை: தக்காளி, வெங்காயம், குடைமிளகாய் முதலியவற்றை நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணை விட்டு, சீரகம், மிளகாய் வற்றல், வெங்காயம், தக்காளி, குடைமிளகாய் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து மிதமான சூட்டில் வதக்கவும். பின் ஆறவைத்து, புளி, கொத்துமல்லி…

விண்கலம் வெடித்து சோவியத் வீரர் பலி (ஏப்ரல் 24, 1967) – History of space exploration

அமெரிக்க விண்கலம் புறப்படுவதற்கு முன் 3 வீரர்களை பலிகொண்ட சம்பவம் முடிந்து 3 மாதங்கள்கூட முடியவில்லை. சோவியத் யூனியனின் பங்குக்கு ஒரு விண்கலம் வெடித்து விண்வெளி வீரர் ஒருவரை பலி வாங்கியது. விளாடிமிர் கோமரோவ். 40 வயதான விண்வெளி வீரர் சோயுஸ்-1 விண்கலத்தில் விண்வெளிக்கு சென்றிருந்தார். மிகவும் அனுபவம் வாய்ந்த விண்வெளி வீரர் இவர். இரண்டாவது முறையாக சோயுஸ்-1 விண்கலத்தில் பயணம் மேற்கொண்டிருந்தார். விண்வெளியில் தனது ஆராய்ச்சிகளை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு பூமிக்குத் திரும்பினார். ஆனால், பூமியின்…

மனிதகுல வரலாறு – முக்கூட்டு அரசு

ஜூலியஸ் சீசரின் மறைவுக்குப் பின் ரோமானிய பேரரசு மூன்று நாடுகளாகப் பிரிக்கப்பட்டு, சீசரின் 3 படைத்தளபதிகளான ஆக்டேவியன், மார்க் ஆண்டனி மற்றும் மார்கஸ் லெபிடஸ் ஆகியோரால் ஆட்சி செய்யப்பட்டது. இவர்கள் மூவரும் மூவேந்தர்கள் எனப்பட்டனர். அவரவர் எல்லைக்குட்பட்ட பகுதியில் அவர்களுக்கு முழு அதிகாரம் இருந்தது. இருப்பினும், இந்த அரசுகள் நீண்டகாலம் நீடிக்கவில்லை. லெபிடசை நிர்ப்பந்தப் படுத்திய ஆக்டேவியன் அவரை பொது வாழ்வில் இருந்து ஒய்வு பெறச் செய்தார். பிறகு, மார்க் ஆண்டணிக்கு எதிராக உள்நாட்டுக் கலகத்தை ஏற்படுத்த…

மனிதகுல வரலாறு – ஜூலியஸ் சீசர்

கி.மு. 60ல் இளம் லட்சிய வீரானான ஜூலியஸ் சீசர் அரசியலில் நுழைந்தார். போர்க்களத்தில் வெற்றிகரமான தளபதியாக திகழ்ந்தவர் சீசர். ரோமாபுரியின் எல்லைகளை விரிவுபடுத்தியவர். ஜூலியஸ் சீசர் தனது படைபலத்தால் ரோம குடியரசுக்கு ஆபத்து எற்படுத்துவாரோ என்ற அச்சம் செனட் உறுப்பினர் களுக்கு ஏற்பட்டது. படை நடத்திக் கொண்டிருந்த சீசரை உடனே ரோமுக்கு திரும்பும்படி செனட் சபை உத்தரவிட் டது. ராணுவத்தை ரூபிகன் ஆற்றுப் பகுதியில் நிறுத்திவிட்டு ரோமிற்கு திரும்புமாறு பணித்தது. ஆனால், அவர்களது அதிகாரத்திற்கு அடிபணிய மறுத்த…

மனிதகுல வரலாறு – ரோமில் உள்நாட்டுக் குழப்பம்

சிறு பகுதியாக இருந்த ரோம் அரசு மிகக் குறுகிய காலத்தில் சர்வதேச அளவில் பேரரசாக மாறியது. பல்லாயிரம் மைல் பரப்பளவில் பேரரசின் எல்லை பரந்து விரிந்தது. பேரரசில் பல்வேறு கலாச்சாரங்களும், மொழிகளும் இடம்பெற்று இருந்தன. நிலப்பரப்பு விரிவடைந்தவுடன் பேரரசை நிர்வகிப்பதும் பாதுகாப்பதும் கடினமாகியது. நாட்டைப் பாதுகாப்பதற்கு போராட வேண்டியிருந்தது. அமைதியை நிலைநாட்டுவதற்காக பேரரசின் மூலை, முடுக்குக்கெல்லாம் ரோமானியப் படை அனுப்பப்பட்டது. இந்த ராணுவமும், ஊழல் அரசு அதிகாரிகளும் சேர்ந்து மக்களை பெருந் துன்பத்திற்கு உள்ளாக்கினர். செல்வத்தையும் நிலத்தையும்…

தம்பிகளின் தல வரலாறு . பாகம் 2.

கிறிஸ்தவத்தில் உலகலாவிய அதிகாரம் அமைப்பு கொண்டது ரோமன் கத்தோலிக்க பிரிவு. அதன் தலைமை பீடம்தான் ரோம். அதன் தலைவர் பாப்பரசர் எனப்படும் போப்பாண்டவர். இவர் மேற்கொள்ளும் சர்வதேச பயணங்கள் அனைத்தும் அமெரிக்க அதிபரின் பயண ஏற்பாடுகளுக்கு சற்றும் குறைவில்லாதது. கிறிஸ்தவ பாதிரியார்கள் திருமணம் செய்துகொள்ள கூடாது என்று பைபிளில் எங்குமே சொல்லப்படவில்லை. ரோமன் கத்தோலிக்கப் பிரிவின் கிறித்தவ பாதிரியார்களுக்கு குடும்ப வாழ்க்கையை தடை செய்திருக்கும் காரணம் பலருக்கும் புரிவதில்லை. பல்வேறு அதிகார அமைப்புகளை இந்தப் பாதிரியார்களே நிர்வாகம்…

தம்பிகளின் தல வரலாறு. பாகம் # 1

இடம்: சவூதி அரேபியா, கிழக்கு மாகாணம். ரெண்டு வருடத்துக்கு முன்பு. நான் எங்க கம்பெனி சைட்ல இருந்தப்போ, நாகரீகமா ட்ரெஸ் போட்ருந்த 30 வயது மதிக்கத்தக்க ஒரு தமிழர் என்னய பாக்க வந்தாரு. இங்கே ஏதோ கம்பெனிக்கு ஒன்றரை வருடத்துக்கு முன்னாடி ட்ரைவர் வேலைக்கு வந்தாராம். இவருடைய தவறால் ஏற்பட்ட விபத்துக்கு உரிய இழப்பீட்டை இவருடைய சம்பளத்தில் பிடித்தார்களாம். அடுத்த இரண்டு மாதங்களில் இந்த இழப்பீட்டு பிரச்சினையை தீர்த்துவிட்டு ஊருக்கு போய்விடுவேன் என்றும் சொன்னார். எனவே ஐந்து…

வாக்குப்பதிவு எந்திரத்தை மாற்றிவிடுவார்களா?

அந்தக்கால வாக்குப்பதிவு முறையை புகழ்ந்தும்… இந்தக்கால வாக்குப்பதிவு முறையை கேலி செய்தும் பேசுகிறவர்கள் ஒன்றை மறந்துவிடுகிறார்கள்… இந்தியா முழுவதும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் முறை எப்போது, எதற்காக மாற்றியமைக்கப்பட்டது? என்பதை புரியாதவர்கள்தான் இப்படியெல்லாம் புலம்புவார்கள்… மாநிலங்கள் அனைத்திலும் ஒரே நாளில் தேர்தல் அறிவிக்கும் முறை ரத்தானது ஏன்? பகுதி பகுதியாக ஏன் மாநிலங்களுக்குத் தேர்தல் நடத்தப்படுகிறது என்பதை உணர்ந்தாலும் இப்படி வியாக்யானம் கொடுக்க மாட்டார்கள்… இன்றைய நிலையில் எல்லைப்புற மாநிலங்களில் பலகட்டத் தேர்தல் தவிர்க்க முடியாதது…