Daily Archives: April 14, 2021

காய்கறி எலுமிச்சை சாதம்

தேவையான பொருட்கள் பச்சரிசி – 2 கப், எலுமிச்சம் பழம் – 2, கேரட் – 1, பீன்ஸ் – 10, காலிஃப்ளவர் – 1 துண்டு, பட்டாணி – அரை கப், இஞ்சி – 1 துண்டு, பச்சை மிளகாய் – 3, மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன், பெருங்காயத் தூள் – 1 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – 1 டீஸ்பூன், கடலைப் பருப்பு…

எளிய மருத்துவக் குறிப்புகள் – 4.மலச்சிக்கல், சிறுநீரகக்கல், நார்த்தம் பழம்!

நார்த்தம் பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது. இதன் பழங்கள் பெரிதாக அளவில் காணப்படும். காய்கள் நன்கு பச்சையாக இருக்கும். நார்த்தம் பழத்தின் மணத்திற்கு மற்ற மணங்களைக் கட்டுப் படுத்தும் குணமுண்டு. நார்த்தம் பழத்தில் நன்கு கனிந்த பழமே சாப்பிட உகந்தது. இந்தப் பழம் எல்லாக் காலங்களிலும் கிடைக்கும். நன்கு பழுத்த பழம் மஞ்சள், பச்சை கலந்து காணப்படும். பழத்தின் தோல்பகுதி கனமானதாக இருக்கும். இவற்றில் நீர் நிரம்பியிருக்கும். புளிப்பு சுவை மிகுதியாக இருப்பதால் இந்தப் பழத்தை சிலர்…

சினிமா பிட்ஸ்….பிட்ஸ்….பிட்ஸ்……

இந்தியில் ஹிட்டடித்த ‘அந்தாதூன்’ படத்தினை ‘அந்தகான்’ என்ற பெயரில் தமிழில் ரிமேக் பண்ணுகிறார் மம்பட்டியான் தியாகராஜன். பிரசாந்த்—சிம்ரன், சமுத்திரக்கனி நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பில் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார் ஹீரோ பிரசாந்த். ரேஸ் என்ற கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனத்தை வாங்கினார் சினிமா தயாரிப்பாளரான ஏஜிஎஸ் கல்பாத்தி அகோரம். விஜய் நடித்த ‘பிகில்’ படத்திற்குப் பின் இப்போது காமெடி நடிகர் சதீஷ் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்தினை சில நாட்களுக்கு முன்பு பூஜையுடன் ஆரம்பித்துள்ளது ஏஜிஎஸ். டிவியில்…

எளிய மருத்துவக் குறிப்புகள் – 3.நெய்யின் அளவற்ற பயன்கள்!

நெய்யில்லா உண்டி பாழ் என்பது சித்தர்கள் வாக்கு. இதை இன்றைய அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் அதன் மருத்துவ குணங்கள் நமக்கு வியப்பளிக்கும். பாலை நன்றாக காய்ச்சி ஆறிய பின் அதில் சிறிதளவு தயிரை கலந்து மூடிவைத்து 6 அல்லது 8 மணி நேரத்திற்குப் பின் எடுத்துப் பார்த்தால் அது முழுவதும் தயிராக மாறியிருக்கும். இந்த தயிரில் சிறிது நீர்விட்டு மத்தால் கடைந்தால் வெண்ணெய் தனியாக பிரிந்துவிடும். இதனை சட்டியில் இட்டு காய்ச்சும் போது அது உருகும். அதில்…

சினிமாவுக்கு இனிமா கொடுத்த மோடி?

ஆதம் பாவா ஆவேசமான அதே நாள்ல தான் ஒட்டு மொத்த இந்திய சினிமாவுக்கே இனிமா கொடுத்திருக்கார் நம்ம மாண்புமிகு பிரதமர் மோடி. அதாவது அந்தந்த மாநில சென்சார் போர்டு அதிகாரிகள், சில படங்களின் பெரும்பான்மையான காட்சிகளுக்கோ அல்லது ஒட்டு மொத்தப் படத்திற்கோ தடை விதித்தால் மும்பையில் இருக்கும் ரீவைசிங் கமிட்டிக்குச் சென்று சர்ட்டிபிகேட் வாங்கி படத்தை ரிலீஸ் செய்வார்கள். ஆனா இப்ப மேட்டர் என்னன்னா அந்த ரீவைசிங் கமிட்டியையே கலைத்துவிட்டது ஆப் கி மோடி சர்க்கார். இனிமேல்…

நிலவில் இறங்க ஒரு முன்னோட்டம் (மே 22, 1969) – History of space exploration

அப்பலோ-8 விண்கலத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அப்பலோ-9 விண்கலம் நிலவுக்கு அனுப்பப்பட்டது. அந்த விண்கலம் தன்னுடன் ஒரு துணைக் கோள் ஒன்றை எடுத்துச் சென்றது. தாய்க் கலத்திலிருந்து அந்த துணைக் கோள் நிலவின் மேற்பரப்புக்கு விடுவிக்கப்பட்டது. பின்னர் அந்த துணைக் கோள் தாய்க் கலத்துடன் இணைந்து பூமிக்குத் திரும்பியது. இந்த சோதனையை அடுத்து அப்பலோ-10 விண்கலம் தன்னுடன் ஒரு துணைக் கோளை எடுத்துக் கொண்டு நிலவுக்கு பயணம் மேற்கொண்டது. 1969ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி…

இந்தியப் பிரதமர்கள் – 2.குல்சாரி லால் நந்தா

விடுதலைக்கு முந்தைய பஞ்சாப் மாநிலம் மிகப்பெரியது. பிரிவினைக்குப் பிறகு மாநிலத்தின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் இணைந்துவிட்டது. நாடு ஒன்றுபட்டிருந்த காலத்தில், 1898 ஜூலை 4ஆம் தேதி ஒன்றுபட்ட பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சியால்கோட் நகரில் குல்சாரி லால் நந்தா பிறந்தார். தற்போது சியால்கோட் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது. லாகூர், ஆக்ரா, அலகாபாத் ஆகிய நகரங்களில் நந்தா கல்வி பயின்றார். 1920-21ல் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் தொழிலாளர் பிரச்சனைகள் தொடர்பாக ஆராய்ச்சி மாணவராக அவர் பணியாற்றினார். பின்னர்,…