Daily Archives: July 9, 2021

இன்றைய ராசிபலன் (09-07-2021)

இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள். மேஷம்:இன்று நிலுவையில் உள்ள பணிகளை  விரைவாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீர எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.  கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர்  அனுசரித்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளைஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9  ரிஷபம்:இன்று குடும்பத்தின்  மீது பாசம் அதிகரிக்கும். அவர்களுடன் இனிமையான  பேசி பொழுதை கழிப்பீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும்.…

மதுரை மல்லிக்கு புவிசார் குறியீடு

மதுரை மல்லிகைப் பூ-விற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   புவிசார் குறியீட்டு பொருள்கள் சட்டம் 2003ல் அமல்படுத்தப்பட்டது. இந்த சட்டம் நடைமுறை படுத்தப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. கைவினை கலைஞர்களை பாதுகாக்கவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.   அந்த வகையில் தற்போது புகழ்பெற்ற மதுரை மல்லிகைப் பூ-விற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புவிசார் குறியீடு சான்றளிக்கப்பட்ட மதுரை மல்லி மற்றும் பிற பூக்கள் அமெரிக்கா மற்றும் துபாய்க்கு தமிழ்நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.…

வறட்டு இருமலை போக்க உதவும் மருத்துவ குறிப்புகள்

வறட்டு இருமல் உட்பட அனைத்து வித நோய்களுக்கும் நம் முன்னோர் சொன்ன சித்த மருத்துவ குறிப்புகள் ஏராளம். இருமலை நிரந்தரமாக குணப்படுத்தவும் நமது இந்திய பாரம்பரியத்தில் பலவகை சித்த வைத்தியங்கள் முன்னோர்களால் கூறப்பட்டுள்ளது. எலுமிச்சை: எலுமிச்சை சாற்றை மிதமான சூடுடன் கூடிய நீரில் கலந்து, ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து பருகி வந்தால் இருமல் சீக்கிரம் குணமாகும். எலுமிச்சையில் வைட்டமின் சி மிகுதியாக உள்ளது, சளி தொல்லை இருக்கும்போது உடலுக்கு வைட்டமின் சி மிகவும் அத்தியாவசியம். தூதுவளை:…

நடிகர் சிம்பு பாடிய பாடல் ரிலீஸ்….

நடிகர் சிம்பு பாடியுள்ள தப்பு பண்ணிட்டேன் என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சிம்பு. இவர் தற்போது ஹன்சிகாவும் மஹா என்ற படத்தில் நடித்துள்ளார். அடுத்து அவருடன் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இதையடுத்து, கவுதம் மேனன் இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும்இசை வீடியோவில் காளிதாஸ், நடிகை மேகா ஆகாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்பாடலுக்கு ஏ.கே.பிரியன் இசையமைத்துள்ளார். இந்த…

ரவுடி பேபி பாடல் படைத்துள்ள சாதனை

தனுஷ் மற்றும் சாய்பல்லவி நடிப்பில் வெளியான ரவுடி பேபி பாடல் தற்போது புதிய சாதனையைப் படைத்துள்ளது. பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் சாய்பல்லவி நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு ‘மாரி 2’ திரைப்படம் வெளியானது. அந்தப் படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் தற்போது வரை பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. ரவுடி பேபி பாடல் வெளியான போதே தமிழக ரசிகர்களால் அந்தப் பாடல் கொண்டாடப்பட்டது. பிரபுதேவாவின் நடன இயக்கம், யுவனின் இசை, தீயின் குரல் தனுஷ் மற்றும் சாய்பல்லவியின் …

சர்க்கரை நோயாளிகளுக்கு கருணை அளிக்கும் கருணை கிழங்கு

மனிதன் உண்ணும் உணவு வகைகளில் தாவரங்களிலிருந்து கிடைக்கும் காய், கனிகள் போன்று கிழங்குகளும் ஒரு உணவாக இருக்கிறது. பூமிக்கு அடியில் விளைவதால் இவை இன்னும் அதிக உயிர் சத்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் நமது நாட்டில் பரவலாக அதிகம் உண்ணப்படும் கிழங்கு வகையான கருணைக்கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். கருணை கிழங்கு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழவும், உடல் பிரச்சனைகளைத் தடுக்கவும் இது உதவும். . 1. நீரிழிவு நோய்க்கு கருணை கிழங்கு கருணை கிழங்கின் நன்மைகள்…

கேந்திரிய பள்ளிகளில் தமிழுக்கு இடமில்லை

நாடு முழுவதும் மத்திய அரசு சார்பில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 1 முதல் 6ஆம் வகுப்பு வரையில் அந்தந்த மாநில தாய்மொழிகளில் படிக்கலாம். ஆனால், 6ஆம் வகுப்புக்குப் பின் விருப்பப் பாடமாக ஒரு மொழியைத் தேர்வு செய்ய வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும், அந்த விருப்பப் பாடங்களுள் ஒன்றாகத் தமிழ் இருந்தது. ஆனால் தற்போது அது நீக்கப்பட்டுவிட்டதாகவும், அதற்குப் பதிலாக சமஸ்கிருதம் இணைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக விமர்சித்திருந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்…

ஜிகா வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை

கேரளாவின் திருவனந்தபுரத்தை சேர்ந்த 24 வயது கர்ப்பிணி பெண்ணுக்கு தொடர் காய்ச்சல், உடலில் சிவப்பு புள்ளிகள் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த 7ஆம் தேதி அந்தப் பெண்ணுக்கு குழந்தை பிறந்த நிலையில் அவரது ரத்த மாதிரிகள் புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனையின் முடிவில் அந்த பெண்ணுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அதே அறிகுறிகளையுடைய 19 பேரின் ரத்த மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதில் 15…

வழக்கறிஞர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க அவசியமில்லை

தமிழ்நாட்டில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்து, அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், தடுப்பூசி செலுத்த மாநில அரசுக்கு உத்தரவிடக் கோரி, மதுரையைச் சேர்ந்த ஜோதிபாசு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, தற்போது தடுப்பூசி மருந்துகள் சப்ளை குறைந்த அளவில் உள்ளதாகவும், தடுப்பூசி மருந்துகளை பெறுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டது. மேலும், நீதிமன்ற…

பெரியார் திடலில் ஒரு பெரியார் தொண்டரின் அனுபவம்!

ஜூலை 8. எனது வாழ்நாளில் மறக்க முடியாத நாள். 1998 ஆம் ஆண்டு இந்த நாளில் தான் பெரியார் திடலுக்கு பணியாளராக வந்தேன். 23ஆண்டுகள் உருண்டோடி விட்டன… 43 ஆண்டுகளில் 23 ஆண்டுகள் திடலில் கடந்துள்ளேன். ஆசிரியரின் சுற்றுப்பயணத்தில் உதவிக்கு செல்லும் தோழர்களில் ஒருவனாக பயணிக்க வேண்டும் என்ற ஆசையில் சில நாட்கள் பணியாற்ற அன்றைய துணை பொதுச்செயலாளர் சாமிதுரை அவர்களிடம் தோழர் சா.பகுத்தறிவாளன் வழியாக அணுகினேன். அவர் அப்போது அதற்கு வாய்ப்பில்லை என்றும், திடலில் வேறு…