Author ராமானுஜம்

அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்! – டி.யூ.ஜெ. வலியுறுத்தல்.

தி.மு.க. தலைமை நிலையமான, அறிவாலயத்தில், கையூட்டு,பெற்று கொண்டு, கேள்வி கேட்பதாக, பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்களை, அவதூறாக, கொச்சைப்படுத்தி பேசிய பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலை, மன்னிப்பு கேட்க வேண்டும் என்று டி.யூ.ஜெ. வலியுறுத்தியுள்ளது. இது குறித்து, சங்கதின் மாநிலத்தலைவர் பி.எஸ்.டி.புருஷோத்தமன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 26- ந் தேதி,பிரதமர் மோடி பல்வேறு நலத் திட்டங்களைத் துவக்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தமிழகத்திற்கு, தேவையான, கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். முதல்வரின்…

மக்கள் பிரதிநிதிகளா சமூக ஊடகங்கள்? – உதயமுகம் வார இதழ் தலையங்கம்!

எல்லாக் காலத்திலுமே பத்திரிகைகள் தங்களுக் கென்று ஒரு கருத்தை வைத்தே செயல்படுவது வழக்கம்தான். செய்திகளை முந்தித் தருவது, உண்மைச் செய்தியை தருவது என்றெல்லாம் சொல்லிக் கொண்டாலும், பத்திரிகைகள் எப்போதும் முதலாளிகளின் விருப்பப்படியே இயங்கின. இப்போதும் இயங்குகின்றன. ஆனால், மக்கள் கருத்துக்கு செவிசாய்த்து, மக்களின் எண்ணத்தை அரசுக்கு பிரதிபலிப்பதையும் அவை கடமையாகக் கொண்டிருந்தன. நெருக்கடிநிலைக் காலத்திலும், 1991 முதல் 1996 வரையிலான ஜெயலலிதாவின் காட்டாட்சிக் காலத்திலும் பத்திரிகைகள் மக்கள் எதிர்ப்பையும், கோபத்தையும் பிரதிபலித்தன. இத்தனைக்கும் அந்தக் காலகட்டத்தில் மிகப்பெரிய…

கோபேக் மோடி ட்ரெண்டிங்கும், வச்சி செய்த ஸ்டாலினும் – உதயமுகம் வார இதழ் கவர் ஸ்டோரி!

எடப்பாடி பழனிச்சாமி அரசில்கூட மோடிக்கு இப்படிப்பட்ட வரவேற்பு கிடைத்த தில்லை. ஆனால், எதிர்க்கட்சியாக இருந்தபோது மோடியை தெறிக்கவிட்ட திமுக, ஆட்சிக்கு வந்ததும் அடக்கி வாசிக்கிறது. திராவிட மாடல் அரசு என்று வார்த்தைக்கு வார்த்தை பேசும் முதல்வர் ஸ்டாலின் பின்வாங்கி விட்டாரா? முன்னர் மோடியை எதிர்ப்பதற்காக சொல்லப்பட்ட காரணங்கள் அனைத்தும் நிறைவேறி விட்டதா? என்றெல்லாம் கேள்விகளை கேட்டார்கள். நேரு உள் விளையாட்டு அரங்கில் என்ன நடக்கப் போகிறது என்பதை அறியாமலே இத்தகைய கேள்விகளை பரப்பினார்கள். விவாதித்தார்கள். மோடி வந்து…

உதயமுகம் வார இதழின் 19 ஆவது இதழ் உங்கள் பார்வைக்கு…

உதயமுகம் வார இதழின் 19 ஆவது இதழ் உங்கள் பார்வைக்கு… இதழை முழுமையாக வாசிக்க லிங்க்கைச் சொடுக்கவும்… uthayamugam 19 issue layout single

ராகுல் நடைபயணமும், மோடியின் நடுக்கமும் – உதயமுகம் வார இதழ் கவர் ஸ்டோரி!

இவரே கூட்டுவாராம்… கூட்டினதுல கொஞ்சூண்டு குறைப்பாராம்… அதை பெருமையா வேறு சொல்லிக்கிட்டிருப்பாராம்… சொந்த வீட்டுமீதே பெட்ரோல் குண்டு வீசிட்டு, தீவிரவாதிகள் வீசிட்டாங்கனு கத்துற பாஜக ஆட்களை பாத்திருக்கோம் இல்லையா? அதுமாதிரிதான் இதுவும். சொந்த ஜனங்களையே பெட்ரோல், டீசல், கேஸ் விலையை ஏத்தி கொடுமைப் படுத்துவதும், ஏற்றியதிலிருந்து கொஞ்சூண்டு குறைச்சுட்டு பெருமை பீத்திக்கிறதும் பாஜகவுக்கு புதுசில்ல. இன்னொரு கொடுமை என்னன்னா, பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கும் ஒன்றிய அரசுக்கும் சம்பந்தமில்லைனு சொல்லுவாங்க. ஆனால்,தேர்தல் அறிவிச்சிட்டா, முடிவு வர்ற வரைக்கும்…

உதயமுகம் வார இதழின் 18 ஆவது இதழ் உங்கள் பார்வைக்கு…

உதயமுகம் வார இதழின் 18 ஆவது இதழ் உங்கள் பார்வைக்கு… இதழை முழுமையாக வாசிக்க லிங்க்கைச் சொடுக்கவும்… uthayamugam 18 issue layout single

இந்திப் பிரச்சாரத்தை மூடிட்டு ஓடு – உதயமுகம் வார இதழ் கவர் ஸ்டோரி!

இந்தி ஒழிக, தமிழ் வாழ்க! இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்! வழக்கமாக இந்த முழக்கங்களை தமிழ்நாட்டில் தமிழர்கள் மட்டுமே எழுப்புவார்கள். ஆனால், மொழித் திணிப்பால் தனது சுயத்தை இழந்து கரைந்துபோன மொழிகளுக்கு சொந்தக்காரர்களுக்கு காலம் சரியான பாடத்தை கற்பித்திருக்கிறது. தமிழ்நாடு மட்டுமே இந்தியை எதிர்க்கிறது. திராவிட மொழிக்குடும்பத்தின் தாய் என்று தமிழை சொல்கிறீர்கள். ஆனால், கேரளாவோ, ஆந்திராவோ, கர்நாடகாவோ, தெலங்கானாவோ இந்தியை எதிர்க்கவில்லையே என்று ஒன்றிய ஆளும் கட்சியினர் கேட்பார்கள். வட இந்தியாவில் மராட்டியம், ராஜஸ்தான், ஒடிஸா,…

உதயமுகம் வார இதழின் 17 ஆவது இதழ் உங்கள் பார்வைக்கு…

உதயமுகம் வார இதழின் 17 ஆவது இதழ் உங்கள் பார்வைக்கு… இதழை முழுமையாக வாசிக்க லிங்க்கை சொடுக்கவும்… uthayamugam 17 issue layout single

தமிழ்நாடு போக்குவரத்துதுறையின் பொற்காலம்! – உதயமுகம் வார இதழின் கவர் ஸ்டோரி

2004 ஆம் ஆண்டுக்கு முன் இந்திய ரயில் கள் நாற்றமெடுத்தவையாக இருந்தது. உலகின் மிகப்பெரிய ரயில்வே என்ற அந்தஸ்த்தை பெற்றிருந் தாலும், ஒவ்வொரு ரயில்வே பட்ஜெட்டிலும் பயணிகள் ரயில், சரக்கு ரயில் ஆகியவற்றின் கட்டணம் உயர்வதே வாடிக்கையாக இருந்தது. 2004ல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ரயில்வே அமைச் சராக நியமிக்கப்பட்டார் லாலுபிரசாத் யாதவ். காலந்தோறும் நஷ்டத்திலேயே இயங்கிய ரயில்வே துறையில் லாலு என்ன செய்யப்போகிறார் என்றே பலரும் நினைத்தார்கள். ரயிலில் வசதிகளை கூட்டாமல்,…

காவல்துறை அமைச்சருக்கு கட்சிக்காரனின் கதறல் கேட்குமா?

இது ஒரு கட்சிக்காரனின் கதறல்… அப்படியே தருகிறோம்… 2022சனவரி 10 ந்தேதி ஒரு சாலை விபத்து. நான் சென்ற ஸ்கூட்டர் மீது என்பீல்டு வண்டியில் அதி வேகமாக வந்த ஒருவர் மோதி விட்டார். நான் என் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயிலாடுதுறை தனியார் சிறப்பு எலும்பு முறிவு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு அங்கு சிகிச்சை மேற்கொண்டு செய்ய முடியாத சூழ்நிலையில் உடல்நிலை இருந்தால் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 30 நாட்கள் உள் நோயாளியாக இருந்து…

சொன்ன சொல்லை காப்பாற்றுவார் முதல்வர் என நம்புகிறோம் – ஜாக்டோ ஜியோ விரிவான அறிக்கை

தேர்தலுக்கு முன் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிச்சயமாக முதலமைச்சர் நிறைவேற்றுவார் என்று நம்புவதாகவும், சங்கத்துடன் பேச்சு நடத்த நேரம் ஒதுக்கும்படியும் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். ஜாக்டோ ஜியோ மாநில மாநில ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஆ.செல்வம், சி. சேகர், ஜெ.காந்திராஜன் தலைமையில் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் புதனன்று நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கை விவரம் வருமாறு… தமிழக முதல்வராக திரு.…

1 2 3 306