Browsing: முகப்பு

உதயமுகம் வார இதழின் முதல் இதழ் 1 – உங்கள் பார்வைக்கு….

உதயமுகம் வார இதழின் முதல் இதழ் 1 – உங்கள் பார்வைக்கு…. முழுமையாக வாசிக்க இணைப்பை சொடுக்கவும்…. Uthayamugam first issue

அன்னை தெரஸா நிறுவனங்களுக்கு 78 லட்சம் உதவி! பாஜகவுக்கு எதிராக ஒடிஸா முதல்வர் அதிரடி!

அன்னை தெரஸா உருவாக்கிய ஆதரவற்றோர் மற்றும் தொழுநோயாளிகள் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு வரும் வெளிநாட்டு உதவிகளை மோடி அரசு நிறுத்தியது. மனிதாபிமானமற்ற இந்த நடவடிக்கைக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. ஆனால், வெளிநாட்டு நிதி பெறுவதை கட்டுப்படுத்தும் ஒன்றிய அரசின் சட்டத்திலிருந்து விலக்கு பெறும் முயற்சிகள் தோல்வியடைந்தன. இந்நிலையில் ஒடிஸாவில் உள்ள அன்னை தெரஸா நிறுவனங்கள் மாநில முதல்வர் நவீன்பட்நாயக்கிற்கு வேண்டுகோள் விடுத்தன. இதையடுத்து அவர் முதல்வர் நிவாரண நிதியிலிருந்து 78 லட்சம் ரூபாயை ஒதுக்கி உத்தரவிட்டார். அத்துடன்…

சீனாவின் ஆக்கிரமிப்பு பற்றி மோடி மவுனம் ஏன்? ராகுல் கேள்வி

இந்திய – சீனா எல்லைப் பகுதியில் தனது ராணுவத்தை விரைவாக கொண்டுபோகும் வகையில் பாங்காங் த்சோ ஏரியின் குறுக்கே பாலம் கட்டுகிறது சீனா. இதை கண்டிக்காமல், கேளாக் காதினராக மோடி இருப்பது ஏன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வினா எழுப்பினார். ஏரியின் வடக்கு கரையை தெற்குக் கரையுடன் இணைக்கும் வகையில் இந்த பாலத்தை சீனா கட்டுகிறது. இதுகுறித்து ஆதாரத்துடன் செய்தி வெளியாகியும் பதில் பேசாமல் மோடி மவுனம் காப்பது ஏன்? என்று அவர் ட்வீட்…

மாதம் ரூ.2 ஆயிரம், ஆண்டுக்கு 8 சிலிண்டர்கள்! பஞ்சாப் காங்கிரஸ் அதிரடி வாக்குறுதி!

பஞ்சாப் பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி தலைவர் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை என்று அறிவித்தார். ஆனால், காங்கிரஸ் தலைவர் சித்து, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகையும், ஆண்டுக்கு 8 சிலிண்டர்களும் வழங்கப்படும் என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இதுதவிர, கல்லூரி செல்லும் பெண்களுக்கு இரு சக்கர மோட்டார் சைக்கிள் வழங்கப்படும் என்றும், பிளஸ்டூ தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ரூ.20 ஆயிரம், 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ரூ.15…

தம்பி ராமையா மீது போலீஸில் மோசடி புகார்!

‘தண்ணி வண்டி’ திரைப்பட புரமோஷன் நிகழ்ச்சிகளில் தம்பி ராமையா பங்கேற்காததால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் சரவணன், நடிகர் தம்பி ராமையா மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். நான் 2015ல் படம் தயாரிக்க திட்டமிட்டேன். அப்போது நடிகர் தம்பி ராமையா தன் மகனை ஹீரோவாக நடிக்க வைக்க என்னை அணுகினார். சினிமா தயாரிப்புக்கான அனைத்து பொறுப்புகளையும் அவரே ஏற்றுக் கொள்வதாக கூறினார். அவரது மகனை வைத்து 2020ல் சினிமா எடுத்து முடித்தேன். ஆனால்…

எகிப்தில் கொட்டிய பனிக்கட்டி மழை!

எகிப்து நாட்டில் வானிலிருந்து ஐஸ் கட்டிகளாக ஆலங்கட்டி மழை பெய்தது. இதையடுத்து சாலைள் பனிக்கட்டிகளால் நிறைந்தது. எகிப்தில் குளிர்காலத்தின் போது பனி பொழிவு அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக கொட்டிய ஆலங்கட்டி மழையால் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் தங்கள் இருப்பிடத்திற்குள் முடங்கி இருந்தனர். சிறிய பந்து போன்று அதிவேகத்தில் கொட்டிய ஆலங்கட்டி மழையால் சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் கண்ணாடிகளும் சேதமடைந்தன.

இந்திய ஏரிக்கு குறுக்கே பாலம் கட்டும் சீனா – பிரதமர் மோடி என்ன சொல்லப் போகிறார்?

இந்திய பகுதியான லடாக்கில் உள்ள பாங்காங் திசோ ஏரியின் குறுக்கே சீனா புதிய பாலம் ஒன்றை கட்டி வருகிறது. இந்த பாலத்தின் மூலம் சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிக்கு சீனா தனது படைகளை விரைவாக கொண்டு வந்து சேர்க்க முடியும். இந்தியா, சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லைப் பிரச்சனை தீவிரமடைந்துள்ளது. கடந்த 2020ல் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலைத் தொடர்ந்து, கிழக்கு லடாக்கில் டெப்சாங் சமவெளியில் இருந்து வடக்கேயும், தெற்கே டெம்சோக் பகுதியிலும் இரு தரப்பிலும்…

புதுவரவுகளுக்கு தங்கக்கிரீடம்… தியாகிகளுக்கு முள்கிரீடமா? திமுகவில் குமுறல்!

திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் விளைந்த காட்டுக் குருவிகளாக பிற கட்சிகளில் இருந்து கொள்ளையடித்த பணமூட்டையுடன் திமுகவுக்கு படையெடுப்பார்கள். ஆட்சிக்கு வரும்வரை தனது வியர்வையையும், பணத்தையும் செலவழித்து ஆட்சிக்கு வரும்வரை தலைமையின் கட்டளைகளை தலையில் சுமந்து, தனது குடும்பத்தைப் பற்றியே கவலை இல்லாமல் உழைப்பவர்கள் பின்னுக்கு தள்ளப்படுவார்கள். இவர் இன்ன கோஷ்டி என்று பாகுபாடு பார்ப்பதும் மாவட்ட அளவில், மாநில அளவில் உருவெடுக்கும். ஆனால், அந்தக் கோஷ்டிகளும் இணைந்தே திமுக என்பதையும், அந்தக் கோஷ்டிகள் அனைத்தும் தலைவர் தளபதிக்கு…

முன் வினைப் பட்டதாரிகள் – ஆதனூர் சோழன் கவிதைகள்

பயப்படுவதற்கன்றி வேறுபலவற்றுக்காகவும் நாம் பிறந்தோம். நேயங்கொள்வதற்கேயன்றி வேறெதற்கும் இல்லையில் வாழ்க்கை. விருப்பப் படுவதற்கேயன்றி வெறுத்துப் புறமோடி வீணாகப் போக்க அல்ல. மோட்சத்தை யோசிப்பதற்கன்றி அதை சிருஷ்டிப்பதற்காகவும் நாம் பிறந்தோம். அச்சத்தைக் கொஞ்சுவதன்றி கச்சைகட்டி எழுந்து கைகுலுக்கிக் கொள்வோம். உணர்வுடன் நரகத்துழல்தலன்றி உயிருடன் சொர்க்கத்தை ஸ்பரிஸித்துக் கொள்வோம். முஷ்டியின் இறுக்கத்தில் முதல்விழுங்கிகளின் மூச்சினையடக்குவோம். முன்வினைப்பட்டதாரிகள் மூச்சுவிட நாம் காற்றுத் தருவோம். தோழனே, தோளினைக்குலுக்கி தாழ்களை உடைத்தால் முன்வினைப் பயன்மாறும் புரி! -ATHANURCHOZHAN

காதல்! – ஆதனூர் சோழன் கவிதைகள்

இதத்தென்றல் என் தேகம் தழுவும் போது நிதமுன் நினைவென் உள்ளெரிக்கும். வெம்மையை மென்மை தழுவும்போது மயிர்க்கால் அடியில் கூச்சறியும். இரவுக்குள் அமிழும்போது உறவுக்குனை துணையழைக்கும் உன்உருவைக் கனவில்கண்டு உள்ளம்சற்று உயிர்பிழைக்கும். விழிகளை இமைகள் தாழிடும்போதும் இதயம் ஏனோ திறந்தபடி மலர்க்கள மமைத்து உன்னுடன்நான் மகரந்தக் கவிதை சுரந்தபடி. உன் சிறுநோவிலும் என்னுளம் நோகும் புன்சிரிப்பொன்றில் பூரணமாகும் கறுப்புச்சந்தன தோலின்மீது வாசம் நுகரும் வாழ்க்கை போதும்! -Athanur chozhan

திமுக அரசு ஏன் பொங்கலுக்கு பணம் தரவில்லை? – Muralidharan Pb

போன வருடம் அதிமுக அரசை கொடுக்க சொன்னாரே எதிர்கட்சி தலைவராக இருந்த இப்போது முதல்வராக இருக்கும் ஸ்டாலின்? இப்ப பணம் பற்றிய பேச்சே இல்லை என முட்டாள்தனமாக கேள்வி எழுப்புகின்ற சங்கி, அதிமுக, செருப்பு உள்ளிட்ட அரை மண்டைகளுக்கு… திமுக தலைவர் அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்த போது முதல்வராக இருந்த பழனிச்சாமிக்கு வைத்து கோரிக்கையை கொஞ்சம் ரீவைண்ட் செய்து பாருங்க. தொடர்ச்சியாக இரண்டு மாதங்களாக அதாவது 2020 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் முழு ஊரடங்கு…

1 2 3 62