அதர்வா எதிர்நோக்கும் குருதி ஆட்டம் வெற்றி

Share

எட்டுதோட்டாக்கள்படத்தைத் தொடர்ந்து அதர்வா நாயகனாக நடிக்கும் ‘குருதி ஆட்டம்’ படத்தை இயக்கி உள்ளார் ஸ்ரீகணேஷ். பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்து வரும் இந்தப் படத்தை ராக் போர்ட் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் முருகானந்தம் தயாரித்து உள்ளார்

சில காரணங்களால் தாமதமான இந்தப்படம் இப்போது வெளியீட்டுக்குத் தயாராகியிருக்கிறது. இவ்வாண்டுத் தொடக்கத்தில் படத்தின் முதல்பார்வையை வெளியிட்டது படக்குழு. அதைத் தொடர்ந்து படத்தை வெளியிடும் முயற்சியில் ஈடுபட்ட நேரத்தில் கொரானா குறுக்கிட்டது.

இந்நிலையில், நேற்று ( டிசம்பர் 8 ) மாலை இப்படத்தின் இரண்டாம் பார்வை வெளியானது. முதுகில் ஏராளமான கத்திக்குத்துகளுடன் அதர்வா இருக்கும் அந்தப் புகைப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

‘குருதி ஆட்டம்’ படம் ஒரு விபத்துக்குப் பிறகு நாயகனுக்கும் ஒரு பெண் குழந்தைக்கும் ஏற்படும் உறவை, அவர்களது பயணத்தைக் கூறுவதாகும். ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் இந்தப் படம் இருந்தாலும் மிக அழுத்தமான சென்டிமென்ட்டும் இருக்கிறது. திரைக்கதை வலுவாக அமைந்திருக்கிறது என்கிறார்கள்.

2021 பிப்ரவரி 12 ஆம் தேதி வெளியாகவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.படத்தின் நாயகன் அதர்வாவுக்கு 2019 வெற்றி
படங்கள் வெளியானஆண்டாக
இருந்தது. 2019 மார்ச்சில் வெளியான பூமராங் படமும், மே மாதத்தில் வெளியான 100 படமும் வெற்றி அடைந்தது.அதற்கடுத்து வெளியாகவிருக்கும் இந்தப்படமும் நிச்சயம் வெற்றி பெறும் என்கிற நம்பிக்கையைப் பெற்றிருப்பதால் உற்சாகமாக இருக்கிறாராம்.

6 Comments

  1. Hello there. I found your blog via Google whilst looking for a similar subject, your site came up. It appears great. I have bookmarked it in my google bookmarks to visit then. Marketa Haley Nashner

  2. One of the best brokers of today is Admiral Markets, who has low operating costs and good trading platforms. Will this broker include trader in its operations? Raquel Doyle Camala

  3. I truly wanted to type a brief note to be able to express gratitude to you for some of the magnificent techniques you are placing at this site. My extended internet look up has at the end been paid with excellent information to exchange with my friends. I would assume that we readers are very endowed to be in a great network with very many perfect individuals with good tricks. I feel rather lucky to have come across your entire web pages and look forward to some more excellent times reading here. Thanks once again for all the details. Harmonia Hersch Diogenes

Leave A Reply