விவேக் நினைவாக…..

Share

சின்னக் கலைவாணர் விவேக் மறைந்து ஒரு வாரத்திற்கு மேலாக்விட்டது. திரைத்துறை சார்பில் அவருக்கு நினைவஞ்சலிக் கூட்டமும் நடந்தது. ஆனால் மரங்களை நடுவதில் அதி தீவிரமாக இருந்த விவேக் இதுவரை தமிழகம் முழுவதும் 33 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளார்.

மரங்கள் நடுவதற்காகவே பசுமை கலாம் என்ற அமைப்பை உருவாக்கியிருந்த விவேக் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை லட்சியமாகக் கொண்டிருந்தார். அவரின் லட்சியத்தை நிறைவேற்றும் பணிகளில், விவேக்குடனேயே பதினைந்து வருடங்களுக்கும் மேலாக பயணித்த செல் முருகன் மற்றும் தயாரிப்பாளர்கள் லாரன்ஸ், அசோக் ஆகியோர் உட்பட இன்னும் சில குழுவினர், தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதே போல் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, டைரக்டர் வெங்கட் பிரபு, ஹீரோ சிம்பு, ஹீரோயின் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் ‘மாநாடு’ படத்தின் ஷூட்டிங் நிறைவுக் கட்டத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.
இளம் ஹீரோயின் ஆத்மிகாவும் தனது வீட்டிலேயே மரக்கன்றுகளை நட்டார்.

–சீமராஜா

Leave A Reply