ரஜினி மகளின் வேண்டுகோள்!

Share

சத்யராஜ் நடித்த ‘6.2’, அர்ஜுன் நடித்த ‘வாத்தியார்’ உட்பட ஆறேழு ஹிட் படங்களைத் தயாரித்தவர் வி.பி.பிலிம்ஸ் கார்டன் பழனிவேல். அந்த பழனிவேல் இப்போது வி.சி.வடிவுடையான் டைரக்ஷனில் ஜீவன், மல்லிகா ஷெராவத், யாஷிகா ஆனந்த் காம்பினேஷனில் ‘பாம்பாட்டம்’ படத்தின் ஷூட்டிங்கை சென்னையிலும் மும்பையிலுமாக 50% ஷூட்டிங்கை முடித்துள்ளார்.

‘பாம்பாட்டம்’ ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த போதே புதுமுக ஹீரோவை வைத்து ‘ரஜினி’ என்ற படத்தின் ஷூட்டிங்கையும் ஆரம்பித்தார் பழனிவேல். ‘வாத்தியார்’ படத்தின் டைரக்டர் ஏ.வெங்கடேஸ் தான் 14 வருடங்களுக்குப் பிறகு பழனிவேலுவுடன் கைகோர்த்து ‘ரஜினி’யை டைரக்ட் பண்ணி வருகிறார். படத்தின் ஷூட்டிங் பதினைந்து நாட்களுக்கு மேலாக புதுச்சேரியில் நடந்து வந்த நிலையில், இப்போது கொரோனாவால் சின்ன பிரேக் விட்டிருக்கிறார் பழனிவேல்.

இதற்கிடையே தயாரிப்பாளர் பழனிவேலை சமீபத்தில் தொடர்பு கொண்ட ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா, “அப்பா பேர்ல படம் வர்றது சந்தோஷம் தான். இருந்தாலும் அவரோட ரசிகர்கள் மத்தியில குழப்பம் வரும். அதனால ‘ரஜினி ப்ரியன்’, இல்லேன்னா ‘ரஜினி ரசிகன்’னு பேர மாத்திக்கலாமேன்னு” வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எந்தவித சர்ச்சையும் வேண்டாம். சூப்பர் ஸ்டார் மகளே பேசிவிட்டார் என்ற சந்தோஷத்துடன் ‘ரஜினி ப்ரியன்’ என்றே டைட்டிலை மாற்றிவிட்டார் பழனிவேல்.

–சீமராஜா

Leave A Reply