தெலுங்கு இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் தனுஷ்!?

Share

தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா உடன் தனுஷ் கூட்டணி அமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

தற்போது தமிழ் நடிகர்கள் தெலுங்கு இயக்குனர்களுடன் கூட்டணி வைப்பதும், தமிழ் இயக்குனர்கள் தெலுங்கு நடிகர்களுடன் கூட்டணி வைப்பதும் அதிகமாகி வருகிறது. ஏற்கனவே விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நடிகர் தனுஷ் தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலாவுடன் கூட்டணி அமைக்க இருப்பதாகத் தற்போது கூறப்படுகிறது.

சேகர் கம்முலா மிகவும் பிரபலமான தெலுங்கு இயக்குனர். அவரது இயக்கத்தில் வெளியாகியுள்ள ஹேப்பி டேஸ், லீடர், பிடா போன்ற படங்கள் சூப்பர் ஹிட்டாகின.

தற்போது நாகசைதன்யா மற்றும் சாய்பல்லவி நடிப்பில் ‘லவ் ஸ்டோ’ரி என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தை அடுத்து சேகர் கம்முலா தனுசுடன் கூட்டணி அமைக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தை ஏசியன் குரூப்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இதற்கிடையில் தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் நாளை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

Leave A Reply