விவசாயம் செய்யும் வெற்றி மாறன்

Share

தனுஷின் நடிப்பில், பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் உள்ளிட்ட படங்களை இயக்கி ப்ளாக் ப்ஸ்டர் ஹிட் இயக்குனராக தமிழ் சினிமாவில் அவதாரமெடுத்திருப்பவர் இயக்குனர் வெற்றி மாறன். இவர் தற்போது சூர்யாவை வைத்து வாடிவாசல் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் ஷூட்டிங் இல்லாத சமயத்தில் வெற்றிமாறன் வேடந்தாங்கல் அருகேயுள்ள கட்டியாம்பந்தல் என்ற கிராமத்தில் 9 ஏக்கர் நிலம் வாங்கி பசுமை பண்ணை அமைத்து விவசாயம் செய்து வருகிறாராம்.

அதுமட்டுமில்லாமல் கூடிய விரைவில் அங்கேயே வீடு கட்டி செட்டில் ஆகப்போவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து கூறிய வெற்றி மாறன் , “வேடந்தாங்கலுக்கு வரும் பறவையினங்களும், பறவைகளுக்காக தீபாவளி கொண்டாட்டத்தையே தியாகம் செய்யும் மக்களின் மனசும் தான் வேடந்தாங்கலில் நிலம் வாங்கியதற்கு காரணம் என அவர் கூறியுள்ளார்.

Leave A Reply