‘டாக்டர்’ படத்தைத் தட்டி தூக்கிய ஓடிடி நிறுவனம்

Share

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்டர்’ திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. 

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் திரைப்படம் உருவாகியுள்ளது. மலையாள நடிகை பிரியங்கா அருள் மோகன் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

அனிரூத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

இப்படத்திலிருந்து வெளியான அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளன. எனவே டாக்டர் படத்திற்கு கோலிவுட்டில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 

டாக்டர் மார்ச் 26-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு முன்னதாக அறிவித்தனர். ஆனால் தேர்தல் மற்றும் கொரோனா காரணமாக ரிலீஸ் தேதியைத் தள்ளி வைத்தனர். பின்னர் மே 13-ம் தேதி ரம்ஜான் தினத்தில் படம் வெளியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அதுவும் நடக்கவில்லை.  

பின்னர் டாக்டர் படத்தை ஓடிடி-யில் வெளியிட படக்குழுவினர் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்பட்டது. பின்னர் மீண்டும் தியேட்டரில் வெளியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இப்படியாக இப்படத்தின் ரிலீஸ் இழுபறியாக இருந்து வந்தது. 

இந்நிலையில் தற்போது டாக்டர் திரைப்படம் ஓடிடி-யில் ரிலீஸ் ஆக உள்ளது. டிஸ்னி ஹாட்ஸ்டாரில் டாக்டர் திரைப்படம் நேரடியாக வெளியாக இருப்பதாக நம்பத்தகுந்த சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Leave A Reply