திரைத்துறைக்கு ஆக்சிஜன் கிடைக்குமென எதிர்பார்க்கிறேன்… ஸ்டாலினுக்கு வாழ்த்துத் தெரிவித்து விஷால் ட்வீட்!

Share

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 சட்டமன்றத் தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 75 சட்டமன்றத் தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

இதில் திமுக கூட்டணி, ஆட்சி அமைப்பதற்குத் தேவையான இடங்களைவிட அதிக இடங்களைக் கைப்பற்றியதையடுத்து, தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்க உள்ளது.

இதனையடுத்து, முதல்வராக பதவியேற்கவுள்ள மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து வாழ்த்துகள் குவிந்துவருகின்றன.

அந்த வகையில், நடிகர் விஷால் ஸ்டாலினுக்கு வாழ்த்துத் தெரிவித்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சிறப்பான வெற்றியைப் பெற்ற திமுக கட்சியினருக்கும் என்னுடைய நண்பர்கள் உதயநிதி மற்றும் அன்பில் மகேஷுக்கும் வாழ்த்துகள்.

நம்முடைய முதல்வர் ஸ்டாலினை வரவேற்கிறேன். அடுத்த சில ஆண்டுகளில் நல்ல விஷயங்கள் பெற்று தமிழகம் செழிக்கட்டும். மேலும், உடைந்துபோயிருக்கும் நம் திரைத்துறைக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply