அரசியலுக்கு வருவேனா, இல்லையா என்பது பற்றி ஆலோசிக்க உள்ளேன் – நடிகர் ரஜினிகாந்த்

Share

சென்னையில் இன்று செய்தியாளர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து மக்கள் மன்ற நிர்வாகிகளோடு நடக்க இருக்கும் சந்திப்பு குறித்து பேசியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்காவுக்கு மருத்துவ சோதனைகளுக்காக சென்று இந்தியா திரும்பியுள்ளார். இந்நிலையில் இன்று தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின.

ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க போவதில்லை என்று அறிவித்த பின் முதல் முறையாக மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்க உள்ளார் என்பதால் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில் இதுபற்றி இன்று காலை அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பல விஷயங்களை கூறிய அவர் ‘நான் எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேனா என்ற கேள்வியும் இருக்கிறது. அதுகுறித்தும் மக்கள் மன்ற நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்துவேன்’ எனக் கூறினார்.

இப்போதுதான் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இன்னும் 5 ஆண்டுகள் தேர்தலுக்கு உள்ளன. இந்நிலையில் ரஜினி மீண்டும் அரசியல் குறித்து பேசியிருப்பது விரைவில் ரிலிஸ் ஆக இருக்கும் அவரின் அண்ணாத்த திரைப்படத்துக்காகதானோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கடந்த 25 ஆண்டுகளாக தனது படங்கள் ரிலீஸ் ஆகும் போதெல்லாம் ரஜினி அரசியல் பற்றி கருத்து சொல்லி படத்துக்கான வியாபாரத்தை அதிகப்படுத்திக் கொள்கிறார் என்ற ஒரு குற்றச்சாட்டும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply