பாரதியார் நினைவு தினம்.. பார்த்திபன் பதிவு

Share

மகாகவி பாரதியாரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு நடிகர் பார்த்திபன் போட்டுள்ள ட்விட்டர் பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

பீரங்கிகளையும், துப்பாக்கிகளையும் வைத்திருந்த ஆங்கிலேயர்களை, தனது பேனா முனை மூலம் எதிர்த்து துரத்தி அடித்தவர் மகாகவி பாரதியார்.

ஏகப்பட்ட சுதந்திர தாகத்தை வளர்க்கும் பாடல்களை எழுதியுள்ள பாரதியார், தமிழ் மொழியின் சிறப்பையும், அதன் தனித்துவத்தையும் வெகுவாக புகழ்ந்து தள்ளி உள்ளார்.

இந்நிலையில், தற்போது நடிகர் பார்த்திபன், “மதம் கொண்ட யானைகள் பல மிதித்தாலும் தமிழ் சாகாது!” என தமிழின் சிறப்பை உயர்த்தி பாரதியார் எழுதிய கவிதையை சுட்டிக் காட்டி பாரதியாரின் நினைவு நாளை நினைத்து வருகிறார்.

Leave A Reply