100 நபர்களுடன் படப்பிடிப்பு நடத்த அனுமதி

Share

100 நபர்களுடன் சினிமா மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புகள் நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது

கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக தமிழ்நாட்டில் தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. தற்போது கொரோனா தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருவதால் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.

தற்போது அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புகள் 100 நபர்களுடன் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி படப்பிடிப்பு நடத்தலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் படப்பிடிப்பு நடத்துவதற்கு முன் படக்குழுவினர் அனைவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் படங்களின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே விஷால் துப சரவணன் இயக்கத்தில் நடித்து வரும் புதிய படம் ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளுடன் துவங்கப்பட்டுள்ளது. 

தற்போது அரசு அனைவர்க்கும் அனுமதி அளித்துள்ளதால் முடங்கியிருந்த பல படங்கள் மீண்டும் படப்பிடிப்பை முழுவீச்சில் துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Leave A Reply