கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட சூர்யா- ஜோதிகா

Share

சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். 

18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் பெரும்பாலோனோர் தாமாக முன்வந்து கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர். இருப்பினும் மக்கள் மத்தியில் கொரோனா அச்சம் நிலவி வருகிறது.

கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் திரைத்துறை பிரபலங்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றனர். 

பிரபல நடிகர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் போது அவரது ரசிகர்களுக்கும் அது சிறந்த முன்னுதாரணமாக இருக்கும்.

தற்போது சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் ஜோடியாக முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சில மாதங்களுக்கு முன்பு சூர்யா கொரோனவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply