‘கன்னிராசி’க்குத் தடை நீங்கியது- தயாரிப்பாளரின் புதிய அறிவிப்பு

Share

விமல், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருகியுள்ள ‘கன்னிராசி’ படத்திற்கான தடை நீங்கியதால், படம் வெளியாவதாக தயாரிப்பானர் அறிவித்துள்ளார்.

கிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம் தயாரிப்பில் எஸ்.முத்துக்குமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கன்னி ராசி’. இதில், விமல் கதாநாயகனாகவும், வரலட்சுமி சரத்குமார் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சிரிப்பு, காதல், குடும்ப பின்னணியில் படம் உருவாகியுள்ள இந்த படம், கொரோனா ஊரடங்கிற்கு முன்னதாகவே வெளியாகும் நிலையில் இருந்தது. ஆனால், ‘மீடியா டைம்ஸ்’ நிறுவனத்திற்கும், கிங் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கும் இடையில் ஏற்பட்ட விநியோக உரிமை பிரச்னையால் இந்தப் படத்திற்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், மீடியா டைம்ஸ் நிறுவனத்திற்கும், கிங் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கும் இடையே சுமூக தீர்வு ஏற்பட்டுள்ளதால், கன்னிராசி திரைப்படம் இன்று தியேட்டரில் வெளியாவதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply