திரையரங்குகள் திறப்பு அறிவிப்பு பங்குசந்தையில் பண புழக்கம் நீடிக்குமா?

Share

கொரானா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தேசம் தழுவிய ஊரடங்கு உத்தரவால் சினிமா தியேட்டர்கள் மார்ச் 18ஆம் தேதி முதல் மூடப்பட்டிருக்கின்றன. முழுதாக நான்கு மாதங்கள் முடிந்துவிட்ட நிலையில் வரும் ஆகஸ்டு 1 முதலான அடுத்த ஊரடங்குத் தளர்விலாவது தியேட்டர்கள் திறக்கப்படுமா என்று திரையரங்குதரப்பில்எதிர்பார்த்திருக்கிறார்கள். 
என்னதான் அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் என்று செல்போனிலும் கம்ப்யூட்டரிலும் வீட்டு TVயில் சினிமா பார்த்தாலும் குடும்பத்தோடு தியேட்டருக்கு சென்று பார்க்கும் அனுபவத்தை இந்தத் தொழில் நுட்பங்கள் ஈடுகட்டப் போவதில்லை.

இந்த நிலையில் மக்கள் மத்தியில் பொழுதுபோக்கு என்றால் சினிமா தியேட்டர்கள் உரிமையாளர்களுக்கு தியேட்டர்கள் திறப்பு என்பது முக்கியமான வர்த்தகப் பிரச்சினையாகிவிட்டது. நான்கு மாதங்களாக தியேட்டர் ஊழியர்களுக்கு சம்பளம், பராமரிப்பு செலவுகளை செய்ய வேண்டும். ஆனால் தியேட்டரை திறக்க இயலாத நிலையில்பல தியேட்டர்களை வைத்திருக்கும்கார்ப்பரேட்நிறுவனங்களே திணறி வருகின்றன. பங்குச் சந்தை வரைக்கும் இவர்களது சரிவு எதிரொலிக்கிறது.

ஆனாலும் மாநகரங்களில் ஏற்பட்ட கொரோனா தொற்று இப்போது தமிழகம் உட்பட பல மாநிலங்களில் உள் மாவட்டங்களிலும் பரவி வரும் சூழலில் ஆகஸ்டு மாதமும் தியேட்டர்கள் திறப்பது கேள்விக்குறியாகியுள்ளது. 

திரைப்பட தயாரிப்பாளர்கள் சிலரிடம் பேசியபோது, “பி.வி.ஆர் போன்ற பெரு நிறுவனங்கள் அழுத்தம் கொடுத்துவருவதால் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் ஒரு வேளை தியேட்டர்களைத் திறக்க அனுமதி அளித்தால் கூட மாநில அரசுகள்தான் இறுதி முடிவெடுக்க வேண்டும். தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் அதில் திரையிடுவதற்கு புதிய படங்கள் தயாராக இருக்கிறதா என்றால் அதுவும் கேள்விக்குறிதான். இது சம்பந்தமாக தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களிடம் பேசியபோது 
நான்கு மாதங்களாக தொழில்முடங்கி இருந்தாலும் ஏற்கனவே தணிக்கை முடிந்த சிறு பட்ஜெட்படங்கள் ஐம்பதுக்கு மேல் ரிலீசுக்காக காத்திருக்கின்றன முன்னணி நடிகர்கள் நடித்த படங்களும் தயாராக உள்ளது அரங்கு நிறைந்த காட்சிகளாக படங்கள் ஓடினாலே முதலீடு முழுமையாக கிடைக்காது இந்த நிலையில் சமூக இடைவெளி காரணமாக 50% அல்லது 25% பார்வையாளர்களை மட்டும் அனுமதிக்க அரசு அனுமதி வழங்கினால் பெரும் நஷ்டத்தை முண்ணனி நடிகர்களின் படங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்
சிறுபட தயாரிப்பாளர்கள் உடனடியாக படங்களை வெளியிடும் பொருளாதார வசதியில் தற்போது இல்லை என்பதுடன் பரிசோதனை முயற்சிக்காக தங்கள் படங்களை பயன்படுத்துவதை விரும்பவில்லை அதையும் கடந்து படங்களை வெளியிட்டால் தியேட்டருக்கு பார்வையாளர்கள் வருகை போதுமான அளவில் இருக்குமா என்கிற அச்சம் திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் நிலவுகிறது.

Leave A Reply