அதிகம் லைக் செய்யப்பட்ட மோஷன் போஸ்டர்! – வலிமை சாதனை!

Share

நீண்ட நாள் எதிர்பார்ப்பில் வலிமை மோஷன் போஸ்டர் வெளியான நிலையில் அதிக லைக்குகளை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.

ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித்குமார் நடித்து வரும் படம் வலிமை. இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் 2 ஆண்டுகள் முன்னரே தொடங்கிவிட்ட நிலையிலும் ஒரு அப்டேட் கூட வராமல் இருந்ததால் தொடர்ந்து அப்டேட் கேட்டு ரசிகர்கள் பல இடங்களில் போர்டு பிடித்து வந்தனர்.

‘இந்நிலையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக நேற்று திடீரென வலிமை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. மோஷன் போஸ்டர் வெளியான சில மணி நேரங்களுக்குள்ளாக 1.50 லட்சம் லைக்குகளை தாண்டியது.

இந்தியாவிலேயே அதிகம் லைக் செய்யப்பட்ட முதல் மோஷன் போஸ்டர் என வலிமை சாதனை படைத்துள்ள நிலையில் ரசிகர்கள் அதையும் #MostLikedIndianMPValimai என்ற ஹேஷ்டேக் மூலம் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Leave A Reply