மாஸ் காட்டும் விஜய்.. தூள் கிளப்பும் இரண்டாவது போஸ்டர் !

Share

மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய்யின் 65வது திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. நெல்சன் இயக்கும் இப்படம் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது.

விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே  நடித்து வருகிறார். அனிரூத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

விஜய்யின் பிறந்தநாளையொட்டி இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று மாலை படக்குழு வெளியிட்டது.

அதில் விஜய்யின் பெயரிடாத இப்படத்திற்கு ‘பீஸ்ட்’ என வித்தியாசமான பெயரிடப்பட்டுள்ளது. அதோடு அந்த போஸ்டரில் விஜய் படுடெர்ராக துப்பாக்கியுடன் தோன்றி அசத்தியிருந்தார். ரசிகர்கள் இந்த போஸ்டரை கொண்டாடி வருகின்றனர். 

இந்நிலையில் விஜய் பிறந்தநாள் இன்று கோலகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. ஆனால் விஜய் ரசிகர்கள் நேற்றிலிருந்தே கொண்டாட்டத்தை தொடங்கிவிட்டனர்.

இதைத்தொடர்ந்து ரசிகர்கள் காமன் டிபி வைத்து சமூகவலைத்தளத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர். விஜய்யின் பிறந்தநாளையொட்டி நேற்று முதல் போஸ்டர் வெளியிடப்பட்ட நிலையில் இரண்டாவது போஸ்டரை இன்று  காலை 12 மணிக்கு படக்குழு வெளியிட்டுள்ளது.

இதற்கு ரசிகர்கள் மாபெரும் வரவேற்பு அளித்துள்ளனர். இந்த போஸ்டரில் விஜய் சிகரெட்டுடன் மாஸாக துப்பாக்கியுடன் இருக்கிறார். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் டிரெண்ட்டில் உள்ளது. 

Leave A Reply