விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

Share

விஜய் பிறந்தநாளில் அவர் தெலுங்கு இயக்குனர் உடன் கூட்டணி அமைக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘தளபதி 65’ படத்தில் நடித்து வருகிறார். ஜார்ஜியாவில் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

தளபதி 65 படத்தின் பர்ஸ்ட் லுக் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை(ஜூன் 21) மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளனர். அதையடுத்து விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இதற்கிடையில் விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டு வருகிறது. 

அந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு இந்த படத்தை தயாரிக்கிறார்.  

விஜய் பிறந்தநாளில் வம்சி படைப்பள்ளி உடன் அவர் கூட்டணி அமைக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகலாம் என்று கோலிவுட்டில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

ஏற்கனவே விஜய் ரசிகர்களுக்கு தளபதி 65 பர்ஸ்ட் லுக் ஒரு ட்ரீட் ஆக அமைந்துவிட்டது. தற்போது தளபதி 66 படத்தின் அறிவிப்பும் வெளியானால் அவர்களுக்கு டபுள் ட்ரீட் தான். 

Leave A Reply