முதல்வர் தளபதி அவர்களுக்கு ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன்…
இன்றைக்கு 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாட்களாகவும், அதற்குரிய சம்பளத்தை 300 ஆகவும் உயர்த்தி இருக்கிறீர்கள்…
ஆனால், விவசாய வேலைகளுக்கு ஆள் கிடைக்காமல் சின்னச்சின்ன வேலைக்குக்கூட ஆள் கிடைக்காமல் விவசாயம் பாதிக்கப்படுவதை கவனத்தில் கொண்டீர்களா?
கிராமப்புற வேலை திட்டத்திற்கான் ஆட்களை சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி தலைவர்களும் பெரிய தனக்காரர்களும் கூலியே இல்லாமல் பயன்படுத்துவதை நீங்கள் அறிவீர்களா?
கிராமப்புற சாலையை சுத்தம் செய்யும் வேலையோ, கண்மாய் குளங்கள் சுத்தம் செய்யும் வேலையோ, ஓடைகள், கால்வாய்கள் சுத்தம் செய்யும் வேலையோ நடக்கவில்லை தெரியுமா?
இந்த திட்டத்தால் சிறு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவது தெரியுமா?
இந்த மனித உழைப்பை, விவசாயப் பணிகளுக்கு திசை திருப்பி, விவசாயிகளின் ஆதரவை பெற முயற்சிகள் செய்வீர்களா?
அந்தந்த கிராமத்தில் உள்ள விவசாயிகளின் தேவைக்கு ஏற்றபடி இந்த தொழிலாளர்களை பயன்படுத்திக்கொள்ள முன்பதிவு நடவடிக்கை எடுப்பீர்களா?
அப்படி எடுத்தால் விவசாயமும், ஊரும் செழிக்கும்…