யாருக்கு கிடைக்கும் இந்த பேறு?

Share

பெரியாரின் பேரனாய் வளர்ந்தவர்…

பேரறிஞர் அண்ணாவின் அன்பில் நனைந்தவர்…

கலைஞரின் பிள்ளையாய் அவருடைய அடியொற்றி அரசியல் பாடம் படித்தவர்…

எம்ஜியாரின் பரிவையும் பரிசாக பெற்றவர்…

திராவிட இயக்கத்தின் முதபெறும் தலைவர்களின் மடியில் தவழ்ந்து, அவர்களுடைய லட்சியங்களை பாதுகாக்கும் போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் இப்போது, அவர்களுடைய லட்சியங்களை சட்டபூர்வமாக நிறைவேற்றும் பொறுப்புக்கு தேர்வு பெற்றுள்ளார்.

ஆம். தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்கிறார். திமுக தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பேற்ற சமயத்தில் எத்தகைய சுமைகள் இருந்தனவோ, அதைக்காட்டிலும் கூடுதலான சுமைகளை சுமக்க வேண்டிய நிலையில் முதல்வராகிறார் மு.க.ஸ்டாலின்.

பசி, பஞ்சம், பட்டினி என்ற குரல்கள் எங்கும் ஒலிக்க, பதுக்கல்காரர்களின் ராஜ்ஜியத்தில், அப்பாவி மக்கள் அரை வயிற்றுக் கஞ்சிக்கும் வழியில்லாமல்தான் காங்கிரஸ் ஆட்சி தமிழ்நாட்டை விட்டுச் சென்றது.

அத்தகைய நிலையிலும் அண்ணா, ரூபாய்க்கு ஒருபடி அரிசி திட்டத்தை செயல்படுத்த முனைந்தார். ஆனால், தமிழகத்தின் நிலைமையை சீர்செய்யும் முன்னரே அண்ணா மறைந்தார். அவரைத் தொடர்ந்து முதல்வர் பொறுப்பை ஏற்ற கலைஞருக்கு கூடுதலாய் ஒரு வாய்ப்பு கிடைத்தது.

இந்திரா தலைமையிலான காங்கிரஸ் கட்சியை மத்திய அரசில் நீடிக்கச் செய்வதற்கு திமுகவின் ஆதரவு தேவைப்பட்டது. அதைப் பயன்படுத்தி, சில சோசலிஸ திட்டங்களையும், மாநில உரிமைகளையும் பெற்றார் கலைஞர்.

வறுமை ஒழிப்பு, உணவு உற்பத்தியில் தன்னிறைவு போன்ற இந்திராவின் நோக்கங்களை தமிழகத்திற்கும் பயன்படுத்திக் கொண்டார். பசுமைப் புரட்சித் திட்டத்தை அமல்படுத்தி, நெல் உள்ளிட்ட உணவு தானியங்களின் உற்பத்தியை பெருக்குவதில் கலைஞர் அரசு வெற்றிபெற்றது.

இதையடுத்தே, கலைஞர் பெருமுதலாளிக்ளின் பதுக்கல் ராஜ்ஜியத்தை அடித்து நொறுக்கி உணவுப் பொருட்களை ஏழை குடும்பங்களின் உரிமையாக்கி, அவர்களுக்கு வினியோகிக்க பொது வினியோகத் திட்டத்தை உருவாக்கினார்.

அவருடைய இந்தத்திட்டங்கள்தான் 1971ல் திமுகவை மீண்டும் வரலாற்று வெற்றிக்கு கொண்டு சென்றது. இந்தியாவின் பார்ப்பனர்கள் தமிழகத்தின் சமூகநீதி மற்றும் இட ஒதுக்கீடு கொள்கைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவர்கள் வர்ணாச்சிரமக் கொள்கைகளை கலைஞர் அரசு தகர்ப்பதை தாங்கமுடியாமல் தவித்தனர்.

எல்லா வகை எதிர்ப்புகளையும் எதிர்கொண்டு வென்ற கலைஞர் அரசை நெருக்கடி நிலையை பயன்படுத்தி கலைத்தார்கள். பொய்வழக்குகளை சுமத்தி அவப்பெயரை திட்டமிட்டு பரப்பினார்கள்.

கலைஞர் சந்தித்த அவப்பெயர்களுக்கும், எதிர்ப்புகளுக்கும் சற்றும் குறையாமல் தளபதி எதிர்கொண்டார். சோசலிஸப் போர்வை போர்த்திய காங்கிரஸில் இருந்த பார்ப்பனர்கள் கலைஞருக்கு நெருக்கடி கொடுத்தார்கள். அவர்களிடம் கொஞ்சம் ஒளிவுமறைவு இருந்தது. ஆனால், வர்ணாச்சிரமத்தின் நேரடியான பிரதிநிதிகளான பாஜக காட்டுமிராண்டிகள் தங்கள் அடிமைகளான அதிமுகவின் துணையோடு தமிழக உரிமைகள் மீது நடத்திய தாக்குதல்களை சமாளிக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு ஸ்டாலினுக்கு இருந்தது.

பாஜக என்ற வர்ணாச்சிரம கிருமியை தமிழகம் எதிர்த்து சமாளிக்க வேண்டிய நிலையில், கொரோனா என்ற கொடுமையான தொற்றுக் கிருமியையும் தமிழக மக்கள் எதிர்த்து போராட வேண்டிய நிலை உருவானது.

எதிர்க்கட்சித் தலைவர் என்ற நிலையிலேயே ஆளும் அரசாங்கத்தை இயக்கி, திமுகவினரையும் இயக்கி கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்டியவர் ஸ்டாலின்.

தேர்தலில் அடுத்த முதல்வராக தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஸ்டாலின், கொரோனா கிருமியின் இரண்டாவது உருமாறிய தாக்குதலை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் முதல்வராக பொறுப்பேற்க இருக்கிறார்.

ஆனால், எதையும் சமாளிக்கிற ஆற்றல், நிர்வாகத் திறன், அனைத்துக் கட்சிகளையும் அரவணைத்து எந்த இடரையும் எதிர்கொள்வார் ஸ்டாலின் என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் ஏற்படுத்தியே அவர் இந்த வெற்றியை பெற்றிருக்கிறார்.

கொரோனா தாக்குதல் மட்டுமின்றி, முந்தைய 10 ஆண்டுகள் நடைபெற்ற அதிமுக அடிமைகளின் ஆட்சியின் மாபெரும் கடன் சுமையையும் சமாளிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார். நல்ல வேளையாக வர்ணாச்சிரம நோய் கிருமியிடமிருந்தும், கொரோனா கிருமியிடமிருந்தும் தமிழ்நாட்டையும் மக்களையும் காப்பாற்ற ஆலோசனை கூற அறிஞர்கள் அவரை சூழ்ந்திருக்கின்றனர்.

நல்ல நிர்வாகி என்பவர் ஆலோசனை சொல்கிறவர்களின் நல்ல ஆலோசனைகளை செயல்படுத்தும் திறன் இருந்தால் போதும் என்பார்கள். அந்த வகையில், மக்கள் ஆதரவும், நல்லறிஞர்கள் ஆதரவும் ஸ்டாலினுக்கு இருக்கிறது. கலைஞரின் பிள்ளையாக அவரிடம் பாடம் கற்ற பலன்களை மக்களுக்கு பயன்படுத்தும் பேறு ஸ்டாலினுக்கு கிடைத்திருக்கிறது.

ஸ்டாலின் காலத்தில் தமிழகம் இந்தியாவின் அடையாளமாக மீண்டும் வளர்ச்சி பெறும் என்ற நம்பிக்கை உதித்திருக்கிறது.

Leave A Reply