நீலநிற இதயம்!

Share

விண்வெளியில் இருந்து பார்த்தால் நமது பூமி நீலநிற ரத்தினக்கல் போல ஜொலிக்கும்.
நமது பூமியை நீல நிறத்தில் மாற்றுவது எது?
நான்கில் மூன்று பங்காய் பரந்திருக்கும் கடல்தான்.
நமது கடலில்தான் முதல் உயிரினம் தோன்றியது. இப்போதும் கணக்கில் அடங்காத அளவுக்கு உயிரினங்கள் கடலில் அடைக்கலமாகி இருக்கின்றன.
இதுவரை 2 லட்சத்து 30 ஆயிரம் கடல்வாழ் உயிரினங்களை கணக்கிட்டுள்ளனர்.
இது மிகவும் குறைவானது. மொத்தத்தில் 20 லட்சத்துக்கும் அதிகமான கடல்வாழ் உயிரின வகைகள் இருக்கக்கூடும் என்று மதிப்பிட்டுள்ளனர்.
பூமியின் உயிரினங்கள் வெளியிடும் கார்பன் டை ஆக்ஸைடை கடலும் தனக்குள் வாங்கி சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவியாக இருக்கிறது.
மனிதர்கள் வெளியிடும் கார்பன் டை ஆக்ஸைடில் மூன்றில் ஒரு பங்கை கடல் தனக்குள் வாங்கி கரைக்கிறது. இதனால், கடல்நீரில் அமிலத்தன்மை அதிகரிக்கிறது.
இது, கடலில் வாழும் உயிரினங்களுக்கு ஆபத்தாகிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

Leave A Reply