பிரிட்டனின் ஆட்சி முறையை மாற்ற எலிஸபெத் ராணி திட்டமா?

Share

பிரிட்டிஷ் ராணி எலிஸபெத் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. அல்லது, பொறுப்புகளை கவனிக்க இயலாத அளவுக்கு அவர் முதுமையால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்கிறார்கள்.

உலகின் மிக நீண்டகாலம் அரசுப் பொறுப்பில் இருந்த ராணி என்ற புகழுடன் பிரிட்டனை கட்டியாண்ட இரண்டாம் எலிஸபெத், பொறுப்புகளை தனது மூத்த மகன் சார்லஸிடம் ஒப்படைக்க விரும்புவதாக தெரிகிறது.

சார்லஸுக்கு பிரிட்டன் மக்களிடம் போதுமான செல்வாக்கு இல்லாத நிலையில், அவருக்கு மாற்றாக வேறு ஏதேனும் நடவடிக்கை எடுக்கவும் ராணி திட்டமிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

உலகின் இன்றைய நிலையில் பிரிட்டனின் அரசியல் நிலைமையில் எப்படிப்பட்ட மாற்றம் நிகழப்போகிறது என்பது ராணி வெளியிடும் வீடியோ உரையில் தெரியவரும் என்று பிரிட்டிஷ் அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

ஏனென்றால், அரச குடும்பத்துக்கென இருந்த பாரம்பரிய நடைமுறைகள் அனைத்தும் இளவரசி டயானாவின் மர்மமான மரணத்துடனும், இளவரசர் சார்லஸ் டயனாவை விவாகரத்து செய்துவிட்டு, காமிலா என்ற பெண்ணை மணந்ததுடன் முடிந்துவிட்டது.

அதன்பின்னர், பிரிட்டனின் இளவரசர்களின் காதல் திருமணங்களும் அரச குடும்பத்திற்கு முற்றிலும் வேறுபட்டவை. எனவே, பிரிட்டனின் அரசியலமைப்பிலேயே மாற்றம் ஏற்படும் அளவுக்கு, ராணியின் முடிவு இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply