புலிகளுக்கு சிம்மசொப்பனமான போராளி! – Kulam Peter

Share

பாசிசப்புலிகள் சகோதர போராளிகளை, துரோகியாக கொன்றுகுவித்த வரலாறில், என் அன்பான என் ஊரவன் என் தோழன் (கணபதிப்பிள்ளை கதிர்காமராஜா) சங்கிலியன் கந்தசாமியின் 32ஆம் ஆண்டு நினைவு நாள்.

இவன் பெயர் கேட்டால், குலைநடுங்கும் காலம் புலிக்கு இருந்தது. எம்மூருக்குள் புலிகள் ஊடுருவி வருவார்களானால் மிக எளிதில்லை, இறுதியாக பாசிச புலிகள் பிரேமதாசாவுடன் 89ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்துகொண்டு, கொழும்பு வந்து பலரை கடத்தி துன்புறுத்தி அச்சுறுத்தினார்கள்.

இலங்கை ராணுவத்துடன் ஒட்டுக்குழுவாகிய புலிகள்… தோழனை எதிர்கொள்ள முடியாத கோழைகள், மன்னார் முள்ளிக்குள முகாமுக்கு தோழர் வந்திருந்தவேளை, புலிகள் பலமணி நேரம் எம் புல்லட்டின் தாக்குதலால் தடுமாறியது..

பின் இலங்கை ஆர்மியின் துணையுடன் புலிகள் செல்லத்தாக்குதல் செய்து முள்ளிக்குள முகாமை கைப்பற்றினார்கள். தாக்குதலுக்கு பின் தோழனின் உடலை தேடி கழுத்தைவெட்டி கர்ச்சித்தார்கள் பாசிஸபுலிகள்.

தோழனோடு இறுதிக்காலம் கொழும்பில் இருந்து உண்டகாலங்கள் ஒன்றித்து செயலாற்றிய பணிசெய்த பல சவால்களை எதிர்கொண்ட, புலிகளின் பாசிசத்தை எதிர்கொண்டவை மனக்கண்ணில் வந்துபோகும்.

தோழனே உன் நாமம் எம் இதயத்தில், ஆழ்ந்த அஞ்சலி, வீர அஞ்சலி, வீர வணக்கம்,

Leave A Reply