தேசத்தை நேசிக்கும் தலைவனுக்கு வயது நூறு!

Share

கம்யூனிஸ்ட் கட்சியில் எனக்குப் பிடித்த தலைவர்களில் சுர்ஜித், என்.சங்கரய்யாவை குறிப்பாக கூறுவேன்…

இருவருமே கட்சியை வெகுஜனப்படுத்தியவர்கள் என்பது எனது கருத்து…

என்.எஸ். நூற்றாண்டு விழா இன்று தொடங்குகிறது. ஆனால், கடந்த சில நாட்களாகவே தோழர்கள் முகநூலை வாழ்த்துப் பதிவுகளால் நிறைத்து வருகிறார்கள்…

நான் என்ன எழுதுவது..?

என்.எஸ். மதுரை வந்தால் தீக்கதிர் அலுவலகத்தில்தான் தங்குவார். நான் தீக்கதிரில் பணியாற்றியபோது, இதை நான் பார்த்திருக்கிறேன்.

கட்சி உறுப்பினரல்லாத நபராக தீக்கதிர் ஆசிரியர் குழுவில் இணைக்கப்பட்ட முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன். அந்த வகையில் 9 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு பணியாற்றியிருக்கிறேன்.

நான் முன்கூட்டியே அலுவலகம் சென்றுவிடுவேன். அப்படிப்ட்ட சமயத்தில் தோழர் என்.எஸ். அலுவலகம் வந்திருந்தால், ஆசிரியர் குழு அறைக்கு வந்து பத்திரிகைகளை படித்துக் கொண்டிருப்பார்…

எந்த பந்தாவும் இருக்காது. பந்தாவுக்கும் கம்யூனிஸ்ட்டுகளுக்கும் வெகுதூரம் என்பது தெரிந்ததுதானே..

ஒருநாள் என்னை விசாரித்தார். நான் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டதும், எனது மொழிபெயர்ப்பு எளிமையாக இருப்பதாக கூறினார். அதுதான் எனது நினைவில் இருக்கிறது. காலத்துக்கும் இருக்கும்…

நூற்றாண்டு தலைவருக்கு வாழ்த்துகள்!

Leave A Reply