சீமான் தம்பிகளுக்கு புத்தி எப்போ வரும்? – Arulraj

Share

திமுகவின் அரசியல் ஆரம்பம் குறித்து நாம் தமிழர் தம்பிகள் தெரிந்து கொள்வதற்காக…
1949ல் தந்தை பெரியாரின் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து, அறிஞர் அண்ணாவின் தலைமையில் திமுக எனும் அரசியல் கட்சி உதயமாகிறது.

1952 ல் நடந்த சட்டமன்றத்தேர்தலில் தங்கள் நிபந்தனைகளுக்கு உட்படுவதாக வாக்குறுதி அளித்த சிறிய கட்சிகள், மற்றும் பல சுயேச்சைகளுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தது திமுக. திமுகவின் ஆதரவுடன் வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் திமுகவின் சில கோரிக்கைகளுக்கு ஆதரவளிக்க மறுத்து உதாசீனப் படுத்தினர்.
தனது கொள்கைகளை சட்டமன்றத்திற்கு உள்ளே பேசுவதற்கு திமுக சார்பில் உறுப்பினர்களை அனுப்பலாமா என்பதை தீர்மானிப்பதற்காக, ஒரு பெரும் மாநாடு நடத்தி பொதுமக்களிடம் அனுமதி பெறுகிறார் அண்ணா.
1957ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் முதன்முதலாக 50 தொகுதிகளைத் தேர்ந்தெடுத்து திமுக நேரடியாகப் போட்டி போட்டது. கிடைத்தது அண்ணா, கலைஞர் உட்பட்ட 15 சட்டமன்ற உறுப்பினர்கள். அடுத்ததாக 1962ல் போட்டி. கிடைத்தது 50 சட்டமன்ற உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சி அந்தஸ்து. இந்த தேர்தலில் மாமேதை அண்ணா தோல்வி. கலைஞர் வெற்றி. தங்கள் கொள்கைகளை விளக்கி நாடு முழுவதும் சுழன்றடித்தனர் அதன் நூற்றுக்கணக்கான தலைவர்கள்.

தலைவர்களும் தொண்டர்களும் செய்த மாபெரும் உழைப்பால் 1967ல் ஆட்சியை பிடித்தது திமுக. முதலமைச்சராக அறிஞர் அண்ணா. சுதந்திர இந்தியாவில் முதன் முதலாக ஒரு மாநிலக் கட்சியின் ஆட்சி தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டது.

அன்றுமுதல் தேசிய அரசியல் கட்சிகளுக்கு இங்கே இறங்கு முகம்தான். திமுகவிலிருந்து அதிமுக தோன்றியது. இவ்விருவரும் இன்றுவரை மாறி மாறி ஆட்சி செய்வது வரலாறு. புதிய தலைமுறை இளைஞர்கள் எல்லோரும் திராவிடத்தை ஆதரிப்பதையும், தேசிய கட்சிகளுக்கு இங்கே இடமில்லாமல் இருப்பதையும் கண்ட டெல்லித் தலைமை புதிய இளைஞர்களை திசைதிருப்ப அவ்வப்போது பல முயற்சிகளைச் செய்தே வந்துள்ளது. யாரும் ஏற்பாரில்லை. இந்த விசயத்தில் காங்கிரசும், பாஜகவும் ஒரே நிலைப்பாட்டில் நிற்பவைதான். தக்க சமயம் பார்த்து காத்திருந்த டெல்லி வாலாக்களின் பார்வையில் பட்டார் நல்ல பேச்சாற்றல் உள்ள சீமான். பாஜக இவரைத் தேர்ந்தெடுத்து ஊக்குவித்தது. பாஜகவின் தயவோடு 2009ல் ஈழப்பிணங்களை வைத்து அரசியல் தொடங்கினார் சீமான். ராஜீவ் காந்தியை நாங்கள்தான் கொன்றொழித்தோம் என்று பொதுமேடையில் இவரால் கொக்கரிக்க முடிந்தது என்றால் மேலிடத்து ஆதரவு இருப்பதால் மட்டுமே. தைரியம் இருந்தால் இப்போதைய திமுக ஆட்சியில் அது போலப் பேசட்டும் பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் புதிய தலைமுறை வாக்காளர்களை திராவிடத்திற்கு எதிராக மடைமாற்றி தேசியக் கட்சியான பாஜவிற்கு புதிய பாதை அமைத்துக் கொடுப்பது மட்டும்தான் சீமானுக்கு கொடுக்கப் பட்டிருக்கும் டாஸ்க். இன்றுவரை அதை அவர் தெளிவாகச் செய்து வருகிறார். விகிதாச்சாரத் தேர்தல் இல்லாத இந்தியாவில் கூட்டணியுடன் போட்டிபோடாமல் எந்தக் கட்சியுமே ஆட்சியைப் பிடிக்க முடியாது. இது பாஜகவிற்கும் பொருந்தும். பாஜக வின் பிரித்தாலும் சூழ்ச்சியின் ஒரு வடிவம்தான் நாங்கள் தனித்தே நொட்டுவோம் எனும் சீமானின் முழக்கம். பாஜகவை விட இவர் பெரிய புடுங்கியா? இதெல்லாம் உங்களுக்குப் புரிய இன்னும் இருபது ஆண்டுகள் தேவைப்படும்.

இன்றைய தமிழ்நாட்டில் திமுக எனும் கட்சி மட்டும் இல்லையென்றால் நேரடியாக பாஜக ஆட்சி அமைக்கும் என்பது அரசியலின் அடிப்படை தெரிந்தோருக்கு ஈசியாகப் புரியும்.

நாதக தொடங்கப்பட்ட 2009 ல் பெற்ற வாக்குகள் எத்தனை? 2021ல் பெற்ற வாக்குகள் எத்தனை? வளர்ச்சி விகிதம் என்ன?

அவர் தொடர்ந்து வலியுறுத்தும் தமிழ்தேசியம் என்பதன் வரையறை என்ன? திராவிட எதிர்ப்பு மட்டுமே. திராவிட எதிர்ப்பு என்றால் திமுக எதிர்ப்பு மட்டுமா? அதிமுக எதிர்ப்பும் சேர்த்தா? அப்படி என்றால் 10 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்த அதிமுகவை எதிர்த்து அவர் நடத்திய போராட்டங்கள் எத்தனை?

தமிழ்நாட்டின் உரிமைகளை பறித்த பாஜக அரசை எதிர்த்து அவர் நடத்திய போராட்டங்கள் எத்தனை?
10 ஆண்டுகள் ஆட்சியிலேயே இல்லாத திமுகவை மட்டுமே குறிவைத்து எப்போதும் எதிர்ப்பது ஏன்?
கடைசியாக ஒன்று…

நீங்கள் இப்போதைக்கு திருந்தப்போவது இல்லை. கற்பனை உலகில் வாழும் உங்களைத் திருத்தவும் முடியாது. உங்களுக்குப் புத்தி வரும்போது புரிந்து கொள்வீர்கள்.

இதோ ஒன்பது மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் வரப்போகிறது. வக்கும் வகையும், தெம்பும் திராணியும் இருந்தால் ஒரே ஒரு மாவட்டக் கவுன்சிலர் பதவியை கைப்பற்றிக் காட்டுங்கள். எம்.எல்.ஏ ஆக வக்கற்ற உங்கள் நொன்னன் நேரடியாக முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்படுவதுபோல நீங்களும் நேரடியாக மாவட்டக் கவுன்சிலர் பதவிக்கு ஆசைப்படக் கூடாது. அதற்கு முதலில் அதிகமான ஒன்றியக் கவுன்சிலர்கள் ஜெயிக்க வேண்டும் கூமுட்டைகளே…

-Arul Raj

Leave A Reply