தூது சொல் புல்லினமே!

Share

தூதுநீ சொல்லி வா புல்லினமே…
நெய்தல் மலரவள் வாடுமுன்
தூதுநீ சொல்லி வா புல்லினமே!

அலர் விழி அன்னம் காணா
துயர் சூழ் நெஞ்சம் வாட…

குளிர் பனி உண்ட வாடை
உலர் மேனி உண்ண வீச…

உயர் ஆழி ஓங்கி தாழ
சதிர் ஆடும் தோணி சீற…

துளிர் அச்சம் உடன் மாள
வளர் காதல் தின்ற கள்வன்…

ஒளிர் எழில் முக நங்கை
தளிர் மேனி இணை சேர…

விர்ர் ரென விரையும் சேதி
தூதாய் நீயும் சொல்லி வா புல்லினமே..!

-சகாய டர்சியூஸ் பீ

#சகாயடர்சியூஸ்பீ #கவிதைகள்

Leave A Reply