சேவை கறி

Share

தேவையானவை: வாழைக்காய் – ஒன்று, தேங்காய்த்துருவல் – அரை கப், வெங்காயம் – 2, பச்சைமிளகாய் – 4, இஞ்சி – சிறிய துண்டு, கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – 2 சிட்டிகை, கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: வாழைக்காயின் மீது லேசாக எண்ணெய் தடவி, அடுப்புத் தணலில் நேரடியாக சுட்டு எடுக்கவும். பின்னர் தோலை உரித்து, தண்ணீரில் கழுவி, துருவிக் கொள்ளவும்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். பின்னர் கறிவேப்பிலை, கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பை போட்டு தாளித்து, நறுக்கிய பச்சைமிளகாய், இஞ்சி, பெருங்காயம், வாழைக்காய்த் துருவல், தேங்காய்த்துருவல், உப்பு சேர்த்து நன்றாக புரட்டி, அடுப்பிலிருந்து இறக்கவும்.

Leave A Reply