போலியோ இல்லாத உலகம் – அமைச்சர்கள் பங்கேற்பு

Share

அரியலூர் நகராட்சியில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து சிறப்புமுகாமை மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கிவைத்தார். உடன் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, மருத்துவ அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

மல்லாங்கிணறு பேரூராட்சியில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமினைத் தொடங்கி வைத்த தொழில்துறை அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு போலியோ இல்லாத உலகம் அமைப்போம் என்று தனது முகநூலில் பதிவிட்டிருக்கிறார்.

மாண்புமிகு நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் அரசு இராசாசி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஷ் சேகர் முன்னிலையில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாமை துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் மதுரை அரசு மருத்துவமனை டீன் ரத் தினவேல், சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply