தடுப்பூசி போட்டிருக்கேன்… ஆனா போடல! – சோழராஜன்

Share

சாமீ எனக்கொரூ உண்மை தெரிஞ்சாகனும்…

ஆமா, சாமீ… 2021 ஏப்ரல் 14 ஆம் தேதி அலங்காநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோழராஜனாகிய நானும் வெற்றி ஆகிய எனது மனைவியும் ஆதார் ஜெராக்ஸ் கொடுத்து கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டோம்.

அன்றைய நிலையில் கம்ப்யூட்டரில் பதிவு செய்யவில்லை. ஊசிபோட்ட சிஸ்டர் எனது ஆதார் ஜெராக்ஸில் உள்ள பெயரை ஒரு நோட்டில் பதிவு செய்தார்.

முதல் ஊசி போட்டதற்கான தகவல் வந்தது. ஆனால், எனது பெயர் அ.சோழராஜன் என்பதற்கு பதிலாக அ.செல்வராஜன் என்று பதிவாகி இருந்தது.

எனது மனைவி மே 15 ஆம் தேதி இரண்டாம் டோஸ் தடுப்பூசியையும் போட்டுக்கொண்டார். அதற்கான தகவலும் வந்தது.

Dear S Vetri, Congratulations! You have successfully completed the schedule of all doses of COVID-19 vaccine. You can download your certificate at – https://cowin.gov.in – CoWIN

அன்று எனக்கு சளி காய்ச்சல் இருந்தததால், கோவிட் டெஸ்ட் எடுத்துவிட்டு ஊசி போடாமல் வந்துவிட்டேன்.

இதனிடையே 84 நாட்களுக்கு பிறகே இரண்டாவது ஊசி என்ற நிலை உருவானது. எனக்கு 7.7.2021 அன்று இரண்டாவது ஊசி போட வேண்டும் என்ற நினைவூட்டு தகவல் வந்தது. அதிலும் செல்வராஜன் என்றே பதிவாகி இருந்தது.

ஜூலை 12 ஆம் தேதி நான் எனது இரண்டாவது ஊசியை எடுத்துக்கொள்ள அலங்காநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றேன். அங்கு, எனது பெயர் செல்வராஜன் எnnnnnnnnnnnnnnnnnnnன்று பதிவாகி இருப்பதை கூறினேன். ஆனால், அதை மாற்ற முடியாது என்று சொல்லிவிட்டார்கள்.

இருந்தாலும் எனது ஆதார் ஜெராக்ஸ், மற்றும் கைப்பேசி எண்ணை பதிவு செய்தார்கள். ஒருவழியாய் இரண்டாவது ஊசியையும் போட்டுக் கொண்டேன். அதற்கான தகவல் வந்ததுடன், நான் இரண்டாவது ஊசி போட்டுக்கொண்டதை உறுதி செய்யும்படியும் கேட்டிருக்கிறார்கள்.

அதற்கான் லிங்க்கை சொடுக்கினால், செல்வராஜன் என்றுதான் பெயர் வருகிறது. இரண்டாவது ஊசி போட்டுக்கொண்டேனா இல்லையா என்று கேட்டிருக்கிறது. நான் என்ன செய்ய வேண்டும். நான் செல்வராஜன் இல்லையே. எப்படி ஆம் என்று சொல்ல முடியும்?

Dear Selvarajan, You have been vaccinated with second dose of COVID-19. This message is from Union Ministry of Health and Family Welfare for obtaining your feedback on COVID-19 vaccination. You may provide your feedback by clicking on https://ras.gov.in/cowin/ufbk/qfq757ded90?lang=1000 Vaccination certificate can be downloaded through Co-WIN service on UMANG App. – Digital India Corporation

இப்போது எனது சந்தேகம் என்னவென்றால், நான் ஊசிபோட்டதற்கான ஆதாரம் என்று எங்கேனும் கேட்டால் எதைக் காட்டுவது?

சோழராஜன் தடுப்பூசி போட்டிருக்கிறாரா? செல்வராஜன் போட்டிருக்கிறாரா?

இதை மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்டபோது, நீங்கள் வேறு அடையாள அட்டையை காட்டி, மீண்டும் இருமுறை ஊசி போட்டுக் கொள்ளுங்கள் என்கிறார்கள்.

ஒரே நபர் இருமுறை வேறு வேறு அடையாள அட்டையுடன் தடுப்பூசி போடலாமா?

அது தவறில்லையா? பின்விளைவுகள் ஏற்படாதா? எனது பரிதாபமான நிலைக்கு சுகாதாரத்துறை என்ன பதில் கூறப்போகிறது?

Leave A Reply