உலகப்புகழ் பெற்ற ஓவியர்கள் – 14. பிகாஸோ

Share

இவரும் ஸ்பெயின் நாட்டு ஓவியர்தான்.

மாடர்ன் ஆர்ட் என்ற வார்த்தைக்கு பாப்லோ பிகாஸோவைப் போல வேறு எந்த ஓவியரும் பொருந்திப் போவதில்லை.

பாப்லோ பிகாஸோ 1881 அக்டோபர் 25ந்தேதி ஸ்பெயினில் உள்ள மாலாகா நகரில் பிறந்தார். இவரது தந்தை ஒரு ஓவிய ஆசிரியர். இளம் வயதிலேயே பிகாஸோ ஒரு புத்திசாலியான மாணவராக இருந்தார். தனது 14வது வயதில் பார்சிலோனா ஸ்கூல் ஆப் பைன் ஆர்ட்ஸ் பள்ளியில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்றார் பிகாஸோ. தேர்வை சிறப்பாக எழுதியதற்காக, முதல் இரு வகுப்புகளை கடந்து மூன்றாவது வகுப்பில் நேரடியாக சேர்வதற்கு அனுமதிக்கப்பட் டார்.

தனது மகனின் திறனைப்பார்த்து வியந்த பிகாஸோவின் தந்தை, தனது து£ரிகையையும் வண்ணங்களையும் அவருக்கு கொடுத்தார். அதன்பிறகு பிகாஸோவின் தந்தை து£ரிகையை தொடவே இல்லை.

பிகாஸோ தனது 75 ஆண்டுகால வாழ்க்கையில் சித்திரங்கள், சிற்பங்கள் என ஆயிரக்கணக்கான படைப்புகளை உருவாக்கி யுள்ளார். 20ம் நு£ற்றாண்டின் மகத்தான ஓவிய மேதை என பிகாஸோவை ஒருதரப்பினர் புகழ்கின்றனர்.
அவர் ஒரு ஏமாற்றுக்காரர், போலி அறிவாளி என்று மற்றொரு தரப்பினர் விமர்சிக்கின்றனர். ஆனாலும் இருபதாம் நு£ற்றாண்டில் உருவான மாடர்ன் ஆர்ட் கலையில் பிகாஸோ வைப் போல செல்வாக்கு செலுத்திய கலைஞன் வேறு யாருமில்லை என அடித்துக் கூறலாம்.

பிகாஸோ பல்வேறு விதமான பாணியில் ஓவியங்களை வரைந்தார். ஒவ்வொரு விதமான பாணியையும் ஒவ்வொரு பெயர் கொண்டு அழைக்கின்றனர். 1900லிருந்து 1904ம் ஆண்டுவரையில் பிகாஸோ வரைந்த ஓவியங்களின் பாணி ஒரு விதமாக அமைந்தது.

இந்த காலகட்டத்தை பிகாஸோவின் நீலக் காலகட்டம் என்று அழைக்கின்றனர். இந்தக் காலகட்டத்தில் வரையப்பட்ட ஓவியங்களில் பிகாஸோ நீல வண்ண நிழலை பயன்படுத்தியி ருந்தார். பிற்காலத்தில் பிகாஸோ மாடர்ன் ஸ்டைலில் வரைந்த ஓவியங்களை விமர்சித்தவர்கள் கூட இந்த நீலக்காலகட்டத்தில் அவர் வரைந்த ஓவியங்களை பெரிதும் பாராட்டினர். 1905ம் ஆண்டிலிருந்து 06 வரையிலான காலகட்டத்தை பிகாஸோ வின் ரோஜா காலகட்டம் என்கிறார்கள். இந்தக் காலகட்டத் தில் அவரது ஓவியங்களில் இருந்த நீல வண்ணங்கள் சிறிது சிறிதாக மறைந்து பிங்க் நிறம் இடம்பெற தொடங்கியது.

அடிக்கடி பாரீசுக்கு சென்று வந்து கொண்டிருந்த பிகாஸோ, கடைசியாக ஓவியங்களின் தலைநகரம் எனப்படும் அந்த நகரில் 1904ல் நிரந்தரமாக குடியேறினார். அங்கு அவர் ஹென்ரி மாட்டிசி, ஜோன் மிரோ, ஜார்ஜ் ப்ராக்யூஸ் போன்ற பிரபலமான ஓவியர்களை சந்தித்தார். ஹென்ரி மாட்டிசியின் ஓவியங்கள் பிகாஸோவை பெரிதும் கவர்ந்தன. பிரெஞ்சு ஃபாவிசத்தின் தந்தை எனப் போற்றப்பட்ட ஹென்ரி மாட்டிசியுடன் வாழ்நாள் முழுவதும் நட்போடு இருந்தார் பிகாஸோ.

பவுல் ஸெசன்னேயின் படைப்புகளால் கவரப்பட்ட பிகாஸோ ஜார்ஜ் ப்ரா£க்யூஸ், ஜான் க்ரீஸ் போன்ற ஓவியர்களுடன் சேர்ந்து ஓவியங்களில் கியூபிச பாணியை வளர்த்துக் கொண்டார். கியூபிசத்தில் வரையப்படும் கருப்பொருட்கள் ஜியோமெட்ரிகல் வடிவத்திற்கு உருமாற்றப் படும். அதன்பிறகு இதே கியூபிசம் சிந்த்தெட்டிக் கியூபிசம் என்ற புதிய வடிவமாக வளர்ந்தது. இந்த வடிவத்தில் ஒரே நபர் அல்லது பொருள் பல்வேறு வடிவங்களில் ஒரே ஓவியத் தில் வரையப்படும்.

பிகாஸோவின் ஓவிய வாழ்க்கையில் மைல்கல் எனப்படும் ஓவியம் குவெர்னிகா. 1937ல் இந்த ஓவியத்தை வரைந்தார். ஸ்பெயினில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது பாஸ்கு கிராமத்தின் மீது விமானப்படைத் தாக்குதல் நடைபெற்றது. கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட இந்த காட்டுமிராண்டித் தனமான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் குவெர் னிகா ஓவியத்தை வரைந்தார்.

1937ல் பாரீஸ் உலகக் கண்காட்சிக்காக அவர் அந்த ஓவியத்தை வரைந்தார். இந்த ஓவியத்தில் இறந்து கொண்டிருக்கும் ஒரு குதிரையையும் அழுதுகொண்டிருக்கும் பெண்ணையும் பூடகமாகப்(சிம்பாலிக்)படைத்திருந்தார். அதன்பிறகு அவர் வரைந்த பல படைப்புகளில் இந்தக் குதிரையும் அந்தப் பெண்ணும் தொடர்ந்து இடம் பெற்று வந்தனர்.

1981 வரையில் நியூயார்க்கில் உள்ள மாடர்ன் ஆர்ட் அருங்காட்சியகத்தில் குவெர்னிகா தொடர்ந்து இடம் பெற்றது. பின்னர், அது ஸ்பெயினில் உள்ள ப்ராடோ அருங்காட்சியகத் திற்கு மாற்றப்பட்டது. அதன்பிறகு 1992ல் மாட்ரிட்டில் உள்ள ராணி சோபியா சென்ட்டர் ஆப் ஆர்ட் அருங்காட்சியகத் திற்கு மாற்றப்பட்டது. ஸ்பெயினில் ஜெனரல் பிரான்கோவின் பாசிச ஆட்சி நடைபெறும் வரையில் குவெர்னிகா ஓவியத்தை ஸ்பெயினுக்கு திரும்பக் கொண்டுவர அனுமதிக்கவே இல்லை.

பிகாஸோ அடிக்கடி தனது காதலிகளை மாற்றிக்கொண்டே இருந்தார். அவரது ஓவிய பாணி மாறிக் கொண்டிருந்தது போலவே அவரது பெண் துணைகளும் மாறிக்கொண்டே இருந்தனர். நீலக் காலகட்டத்தில் இருந்து ரோஜாக்கால கட்டத்திற்கு பிகாசோ மாறிய நேரத்தில் பெர்னாண்டே ஆலிவர் எனும் பெண்ணை சந்தித்தார். இவர்தான் பிகாசோ வின் முதல் காதலி. பிகாஸோ தனது காதலிகள், மனைவிகள் மற்றும் குழந்தைகளை நிறைய உருவப்படங்களாக வரைந்துள் ளார்.

பெர்னாண்டேயுடன் அவர் ஏழு வருடங்கள் வாழ்ந்தார். 1914லில் இருந்து 18 வரையில் முதல் உலகப் போரின் போது பிகாஸோ ரோமில் இருந்தார். அப்போது அவர் ஓல்கா கொக்லோவா எனும் ரஷ்ய பெண்மணியை திருமணம் செய்து கொண்டார். அவர் ஒரு நாட்டியமாடும் பெண். அதன்பிறகு, 1927ல் மேரி தெரெசி வால்டேர் எனும் 17 வயது பெண்ணோடு பழக்கம் ஏற்பட்டது. 1936ல் டோரா மார் எனும் பெண்ணோடு தொடர்பு. இந்தப் பெண் ஒரு புகைப்படக் கலைஞர். 1943ல் ஃப்ரான்கோய்ஸ் கிலோட் எனும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். கடைசியாக திருமணம் செய்து கொண்ட பெண் ஜாக்குலின் ரோக்யூ. 1953ல் பிகாஸோ ஜாக்குலினை சந்தித்தார். 61ல் திருமணம் செய்து கொண்டார்.

பிகாஸோவுக்கு நான்கு குழந்தைகள். அவர்கள் ஒரே மனைவிக்கு பிறந்தவர்கள் அல்ல. 1965ல் பிகாஸோவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. சிறிது கால ஓய்வுக்கு பிறகு மீண்டும் தொடர்ந்து ஓவியப்பணியில் ஈடுபட்டார். அப்போது அவர் 347 உலோக ஓவியங்களை செதுக்கினார். தனது வாழ்நாளின் கடைசி காலகட்டத்தில் உடல் நலம் குன்றியிருந்தபோதும், ஏராளமான ஓவியங்களை தீட்டினார். அவர் 1973, ஏப்ரல் 8 ஆம் தேதி இறந்தார். அப்போது அவருக்கு வயது 91.

“மரணத்தைப்பற்றி நான் எப்போதும் சிந்தித்துக்கொண்டி ருக்கிறேன். அந்தப் பெண் ஒருத்திதான் என்னைவிட்டு எப்போதும் நீங்காதவள்.” என்றார் பிகாஸோ.

தனது படைப்புகளில் விதவிதமான பாணிகளை கையாண்டார். கற்களில் ஓவியம், உலோகத்தில் ஓவியம், மரத்தில் ஓவியம் என பல்வேறு செதுக்கோவியங்களை உருவாக்கினார். புதிதாக எதையேனும் தேடிக்கொண்டே இருந் தார். இதன் காரணமாக அவரது படைப்புகளில் விதவிதமான உத்திகள் வெளிப்பட்டன. பிகாஸோவின் கிராபிக் படைப்புகள் பல்வேறு உத்திகளின் ஒருங்கிணைந்த வடிவமாக அமைந்தன.

பிகாஸோவின் பேட்டிகள் உட்பட ஏராளமான புத்தகங்கள் அவரைப்பற்றி வெளிவந்துள்ளன. அவற்றில் எது உண்மை எது பொய் என்பதை கண்டுபிடிப்பது கடினம். ஏனெனில் பிகாஸோ பத்திரிகைகளில் தன்னைப்பற்றி வரும் செய்திகளை எப்போதும் கண்டு கொள்வதே இல்லை. அவர் தனது மேதைமையை, பிரபலத்தை, அவரே திட்டமிட்டு உருவாக்கிக் கொண்டார்.

பிகாஸோ பிழைக்கத் தெரிந்தவர். யாருக்காவது சிறு தொகை கொடுக்க வேண்டியிருந்தாலும் கூட அதையும் காசோலையாகத்தான் தருவார். இது ஏன் என்று கேட்டால், ‘அவர்கள் காசோலையில் இருக்கும் எனது கையெழுத்துக்காக அதை வங்கியில் கொடுத்து பணமாக மாற்ற மாட்டார்கள்’ என்பார். பிகாஸோவுக்கு பணம் கொடுத்த மாதிரியும் இருக்கும். அதேசமயத்தில் வங்கியில் பணம் அப்படியேவும் இருக்கும்.

பிகாஸோ பிரபலமானவராகவும் பணக்காரராகவும் வாழ்ந்தார். பிகாசோவுக்கு வேடிக்கை உணர்வு அதிகம். ஒருமுறை குழந்தைகள் வரைந்த ஓவியங்கள் இடம் பெற்ற கண்காட்சி ஒன்றுக்கு சென்றிருந்தார். கண்காட்சியை விட்டு வெளியே வந்த அவர் கூறினார், “நான் அவர்கள் வயதில் இருந்தபோது, ரபேல் போலக்கூட என்னால் வரைய முடிந்திருக்கும். ஆனால் இந்த குழந்தைகளைப் போல வரைவதற்கு நான் வாழ்நாள் பூராவும் கற்றுக்கொள்ள வேண்டும் போலிருக்கிறதே.”

கலையைப்பற்றி அவர், “கலை என்றால் என்ன என்று நான் சொல்ல வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள். அது எனக்கு தெரிந்திருந்தால், எனக்குள்ளேயே அதை ரகசியமாக வைத்துக்கொள்ள மாட்டேனா?” என்றார்.

Leave A Reply