உடல் எடை அதிகரிக்கச் செய்யும் உணவுகள்

Share

பலருக்கும் உடல் எடையை எப்படிக் குறைப்பது என்பது மிகப்பெரிய கவலையாக இருக்கும். அதே போல் சிலருக்கு உடல் எடையை எப்படிக் கூட்டுவது என்பதும் மிகப்பெரிய கவலையாகவே இருக்கிறது.

என்ன சாப்பிட்டும் வெயிட் மட்டும் ஏறவே மாட்டேங்குது என்று கவலைப்படுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

உடல் எடை அதிகரிக்கச் செய்யும் உணவுகள்!

உடல் எடை கூடுவது ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். எடை அதிகரிக்கும் என்பதற்காக பேக்கரி பொருட்களை வாங்கிச் சாப்பிட்டால் அது பல்வேறு உடல்நலக் குறைபாட்டுக்கு வழிவகுத்துவிடலாம். எனவே, உடலுக்கு ஆரோக்கியமான, எடையை அதிகரிக்கும் சில உணவுகளைப் பற்றிப் பார்ப்போம்.

வீட்டில் தயாரிக்கும் ப்ரோட்டின் ஸ்மூத்திகள்

சாக்லெட், வாழைப்பழம், பீனட் பட்டர், வே ப்ரோட்டின் ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து அப்படியே சாப்பிடலாம். வாழைப்பழத்துடன், அவகேடோ உள்ளிட்டவற்றை சேர்த்தும் ஸ்மூத்தி தயாரித்து அருந்தலாம். ஒரு கிளாஸ் ஸ்மூத்தியில் இருந்து 400 – 600 கலோரி கிடைத்துவிடும். உடல் எடை விரைவாக அதிகரிக்கும்.

பால், வெண்ணெய், நெய், சீஸ் போன்றவை உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். சீஸை அதிகம் சாப்பிட வேண்டாம். அது உடல் நலக் குறைவை ஏற்படுத்திவிடும்.

பொதுவாக உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் பழங்களை ஜூஸாக அருந்த வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுவார்கள். உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்கள் பழங்களை சர்க்கரை சேர்த்து ஜூஸாக அருந்தி வரலாம். இதன் மூலம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தும் கிடைக்கும், உடல் எடையும் அதிகரிக்கும்.

உணவில் உருளைக் கிழங்கைச் சற்று அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம். இதில் கார்போஹைட்ரேட் அதிக அளவில் உள்ளது. அதற்காக ஒரே நாளில் அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டாம். தினசரி உணவில் கூடுதலாக எடுத்துக்கொண்டாலே போதுமானது.

பட்டர் ஃப்ரூட் எனப்படும் அவகேடோ பழத்தில் நல்ல கொழுப்புச் சத்து அதிகம் உள்ளது. சர்க்கரை சேர்த்து அவகேடோ மில்க் ஷேக் செய்து குடித்து வந்தால் உடல் எடை அதிகரிக்கும். உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தும் கிடைத்துவிடும்.

தினசரி ஒரு கைப்பிடி அளவுக்கு வால்நட், பாதாம், முந்திரியை சாப்பிட்டு வரலாம். ஸ்மூத்தி தயாரிக்கும்போது இதை போட்டு அரைத்து அருந்தலாம். இதன் மூலம் கூடுதல் கலோரி கிடைக்கும். உணவில் அதிக அளவில் ரெட் மீட் எனப்படும் ஆடு உள்ளிட்டவற்றின் இறைச்சியைச் சேர்த்துக்கொள்வது எடை அதிகரிக்க உதவும்.

Leave A Reply